பெய்ஜிங் : சீனாவின் முன்னணி தொலைத் தொலைத் தொடர்பு நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 2,050 கோடி ரூபாய் போனஸ் ஆக வழங்கியுள்ளது.
இந்த வெகுமதியான அமெரிக்கா -சீனாவிடையே நடந்து வரும் வர்த்தக போரால் தடைபடுத்தப்பட்டுள்ள ஹூவாய் நிறுவனத்துக்கு, இது பெரிதும் உதவும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா சீனாவிடையே நிலவி வரும் வர்த்தக போர் தொடர்ந்து கொண்டேயிருக்கும் நிலையில், அமெரிக்கா அதன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி சீனாவின் ஹூவாய் நிறுவனத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தடை செய்தது.
வெளிநாட்டு சாதனங்களை தடை
மேலும் அமெரிக்க தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வெளிநாட்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களில் தயாரிக்கப்படும் தொலைத் தொடர்பு சாதனங்களை பயன்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். சீனாவின் ஹூவாய் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களை பயன்படுத்தி, பிற நாடுகளில் உளவு பார்ப்பதாகவும், அமெரிக்காவும், அதனுடனான நட்பு நாடுகளும் குற்றம் சாட்டியது.
அமெரிக்காவை விட்டு வெளியேற்றம்
இதன் மூலம் அமெரிக்காவின் தொழில்நுட்பம் களவாடப்படும் ஆபத்து உள்ளது. இதனால் உலகில் மிகப் பெரிய தொலைத் தொடர்பு சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தில் இருந்து 5ஜி அலைக்கற்றையை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் இந்த நிறுவனத்தின் மீதான தடை உத்தரவு மட்டும் அல்ல, சீனாவை சேர்ந்த இந்த ஹீவாய் நிறுவனம், அமெரிக்காவுக்கு எதிரி நடான ஈரானுக்கு உதவிகளை செய்து வருவதாகவும், ஈரான் மீது தாங்கள் விதித்துள்ள பொருளாதார தடையையும் மீறி அந்த நாட்டுடன் வர்த்தகம் செய்து வருவதாகவும் அந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்காவை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது ஹூவாய். இதனால் இந்த நிறுவனம் வெகுவாக பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இருமடங்கு சம்பளம்
இந்த நிலையில் உள்நாட்டு வணிகத்தை மேம்படுத்தும் விதமாக சீனாவும் பல்வேறு சலுகைகளை வழங்கியது. மேலும் இந்த நிறுவனத்தில் நிலவி வரும், இந்த அழுத்தத்தை சமாளிக்கும் விதமாக ஊழியர்களுக்கு இந்த பணம் இருக்கும் என்றும் ஹூவாய் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த ஊக்கத் தொகையால் இந்த மாதம் இந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு இருமடங்கு ஊதியம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது சுமார் 1,90,000 ஊழியர்களுக்கு கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சீன அரசுக்கு எந்த பங்கும் இல்லை
இந்த ஊக்கத்தொகையானது ஆரய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுக்களுக்கும் நிறுவனத்தின் வினியோக சங்கிலிகளையும் அமெரிக்காவிலிருந்து மாற்றுவதற்கு உதவும் என்றும் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும் அமெரிக்கா அரசாங்கத்தில் பலர் ஹூவாய் நிறுவனத்தின் உபகரணங்கள் மற்றும் அதன் 5ஜி நெட்வொர்க்குகள் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்துகின்றன என்றும் கூறப்பட்டது. ஏனெனில் ஹூவாய் நிறுவனம் சீனா அரசுடன் மிக நெருக்கமாக உள்ளது என்றும் கருதப்படுகிறது. ஆனால் ஹூவாய் நிறுவனமே சீனா அரசாங்கம் தனது நடவடிக்கைகளில் எந்த பங்கினையும் வகிக்கவில்லை என்றும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்றுமதி வளர்ச்சி
இந்த நிறுவனம் தற்போது உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராகவும், சாதனங்கள் ஏற்றுமதியில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது, அதிலும் கடந்த மாதத்தில் மூன்றாம் காலாண்டு வருவாய் வளர்ச்ச்சியில் 27 சதவிகிதம் அதிகரிக்க உதவியதாகவும் கூறியுள்ளது.

More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications