இந்தியர்கள் மத்தியில் விண்வெளி பயணம் குறித்த ஆசையும் அறிவும் அதிகமாவதற்கு முக்கியமாக இருந்த பெண் கல்பனா சாவ்லா என்றால் அது மிகை அல்ல.
அதே போல இப்போது மீண்டும் ஒரு பெண், இந்தியர்கள் மனதில் கல்பனா சாவ்லா அளவுக்கு இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்றால், அவர் கிரிஸ்டினா கோச் தான்.
யார் இந்த கிரிஸ்டினா கோச்..? இவர் என்ன சாதனை படைத்துவிட்டார்..? இவரைப் பற்றிக் கொஞ்சம் பார்த்துவிட்டு, அந்த அன்புக் கதைக்குப் போவோம்.
கிரிஸ்டினா கோச்
கிரிஸ்டினா ஹம்மாக் என்கிற பெயருடன், க்ராண்ட் ராபிட்ஸ், மிச்சிகன் பகுதியில் அமெரிக்காவில் கடந்த ஜனவரி 29, 1979-ல் பிறந்தார். வடக்கு கரோலினா அறிவியல் மற்றும் கணித பள்ளியில் 1997-ம் ஆண்டு தன் படிப்பை முடித்தார். அதன் பின் வடக்கு கரோலினா மாகாண பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு, பின் நாசா அகாடமியில் தேர்ச்சி என படிப்பில் படு சுட்டி.
வேலை
கடந்த 2004 - 2007 வரை United States Antarctic Program-ம் ஆய்வாளராக வேலை பார்த்தார். வேலை ஆர்டிக் & அண்டார்டிகாவில் தான். குளிர் காலத்தில் இந்த பகுதிகளில் வெப்ப நிலை சுமாராக -111 டிகிரி செல்சியஸாக இருக்குமாம். இந்த காலகட்டம் எல்லாம் தனக்கு உடல் ரீதியகவும், மன ரீதியாகவும் சவாலாக இருந்ததாகச் சொல்லி இருக்கிறார்.
பல்கலைக்கழகத்தில் வேலை
அதன் பின் 2007 - 2009-ம் ஆண்டு வரை ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில், வின்வெளித் துறையில், எலெக்ட்ரிக்கல் இன்ஜினியராக பணியாற்றினார். அதன் பின், 2013-ம் ஆண்டு நாஸா-க்கு விண்வெளி வீரராக வந்து சேர்ந்தார். ஜூலை 2015-ல் விண்வெளி செல்வதற்கான பயிற்சிகள் நிறைவடைந்தது.
சர்வதேச விண்வெளி மையம்
கடந்த 2019, மார்ச் 14 அன்று சர்வதேச விண்வெளி மையத்தில் காலடி எடுத்து வைத்தார் க்ரிஸ்டினா கோச். மீண்டும் கடந்த ஏப்ரல் 2019-ல் விண்வெளியிலேயே சில பல வேலைகளை முடித்து விட்டு வரச் சொன்னார்கள். க்ரிஸ்டினாவும் ஓகே சொல்லி விண்வெளியிலேயே தங்கினார்.
அதிக நாட்கள்
இதுவரை எந்த ஒரு பெண்ணும் க்ரிஸ்டினா கோச் அளவுக்கு நீண்ட நாட்கள் விண்வெளியில் இருந்ததில்லை. 328 நாட்கள் தொடர்ந்து விண்வெளியில் இருந்து ஒரு தனி சாதனை படைத்துவிட்டு, கடந்த பிப்ரவரி 06, 2020 அன்று தான் நம் தாய் பூமிக்குத் திரும்பினார். திரும்பி வந்த உடன் யார் சந்தோஷப்பட்டார்களோ இல்லையோ ஒரு உயிர் மட்டும் துல்லிக் குதித்து சந்தோஷப்பட்டது இன்று தலைப்புச் செய்தியாகி இருக்கிறது.
அந்த அன்பு
சுமார் ஒரு வருடம் கழித்து, தன் வீட்டுக்கு க்ரிஸ்டினா கோச் வந்த உடன் அவர் வளர்க்கும் நாய், தன் கால்களை கதவின் மீது வைத்து தன் அன்பைக் காட்டத் தொடங்கிவிட்டது. கதவைத் திறந்த உடன், தன் நான்கு கால்களும் அந்தரத்தில் பறக்கும் அளவுக்கு அன்பில் துல்லிக் குதிக்கிறது. க்ரிஸ்டினாவின் முகத்தை தன் நாக்கால் நக்கி அன்பை அள்ளி இறைக்கிறது. ஒரு சில நொடிகளுக்கு விண்வெளியில் சாதனை படைத்த க்ரிஸ்டினாவும், தன் நாயின் அன்பில் சொக்கித் தான் போய் இருப்பார்.
அவர் வாசகம்
"நான் பூமிக்கு வந்ததில் யாருக்கு மகிழ்ச்சியோ இல்லையோ தெரியவில்லை. என்னை, அவள் (அவர் வீட்டு நாய்) ஒரு வருடம் கழித்தும் நினைவில் வைத்திருக்கிறாள்" என உருகித் தள்ளி இருக்கிறார். இந்த வீடியோ நேற்று காலை தான் வெளியாகி இருக்கிறது. இப்போது வரை சுமாராக 4.4 மில்லியன் வியூஸ்களைப் பெற்று தட்டித் தூக்கிக் கொண்டு இருக்கிறது.
"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.." என்கிற வள்ளுவன் வாக்கு எத்தனை மெய்யானது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications