8 வருடத்திற்கு முன்பு ஐஐடி டெல்லி மாணவர் ஜோதி பன்சால் நிறுவிய ஆப் டைனமிக்ஸ் என்ற நிறுவனத்தை, உலகளவில் வன்பொருள் மற்றும் மென்பொருள் தயாரிப்பில் முதல் இடத்தில் இருக்கும் சிஸ்கோ 3.7 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள இந்த ஆப் டைனமிக்ஸ் நிறுவனம் கடந்த 8 வருடத்தில் பல முறை முதலீட்டைத் திரட்டியுள்ள நிலையில், சிஸ்கோ நிறுவனம் அளிக்க 3.7 பில்லியன் டாலரில் அனைத்து முதலீட்டாளர்களுக்கு அளித்த பின்பு இந்நிறுவனத்தின் நிறுவனரான ஜோதி பன்சாலுக்கு 520 மில்லியன் டாலர் அதாவது 3,400 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தில் 14 சதவீ பங்குகளையும் ஜோதி பெற உள்ளார்.

கடைசியாக ஆப் டைனமிக்ஸ் நிறுவனம் முதலீட்டைத் திரட்டியபோது இதன் மதிப்பு 1.9 பில்லியன் டாலராக இருந்த நிலையில், பங்குச்சந்தையில் இறங்க இந்நிறுவனம் முடிவு செய்யது.
இதன்படி பங்குச்சந்தைக்காக நிறுவனம் மதிப்பீடு செய்தபோது இதன் ஆப் டைனமிக்ஸ் 2 பில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்டது. இந்நிலையில் சிஸ்கோ நிறுவனம் 2 மடங்கு அதிகத் தொகையைக் கொடுத்து இந்நிறுவனத்தை முழுமையாக வாங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications