சான் ஜோஸ்: பணியாளர்களுக்குக் கோடிகளைச் சம்பளமாக அளித்தரும் சிஸ்கோ நிறுவனத்தின், சீஇஓ ஜான் சேம்பர்ஸ், இந்நிறுவனத்தில் 20 வருட பணிக்குப்பின் நிறுவனத்தை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
உலகளவில் நெட்வொர்கிங் துறை சார்ந்த வன்பொருள் மற்றும் மென்பொருள் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் கொடிக்கட்டி பறக்கும் சிஸ்கோ நிறுவனம் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டாலும், இந்தியா உட்பட பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
ஜான் சேம்பர்ஸ்
இவர் இளமையிலேயே dyslexia (சாதாரண மனிதர்களைப் போல் படித்துக் புரிந்துகொள்ள முடியாத நோய்) என்னும் நோயால் பாதிக்கப்பட்டாலும், அறிவியலில் இளங்கலை பட்டமும், வர்த்தக மேலாண்மையில் முதுகலை பட்டமும் பெற்றார்.
சிஸ்கோவில் ஜான்
கல்லூரிப் படிப்பு முடிந்த உடன் 27 வயதில் ஐபிஎம் நிறுவனத்தில் விற்பனை துறையில் சேர்ந்தார். அதன்பின் தனது 42வது வயதில் அதவாது 1991ஆம் ஆண்டு சிஸ்கோ நிறுவனத்தில் உயர் பதவியில் இணைந்தார்.
இதற்கிடையில் இவர் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
48 பில்லியன் டாலர் வருவாய்
ஜான் சேம்பர்ஸ் தலைமையில் சிஸ்கோ நிறுவனம் 1.2 பில்லியன் டாலர் வருவாயில் இருந்து 48 பில்லியன் டாலர் வரை உயர்ந்துள்ளது.
அமெரிக்க அரசு
இவரது பணிக்காலத்தில் சிஸ்கோ நிறுவனத்தில் மட்டும் அல்லாமல் அமெரிக்க அரசின் பல்வேறு பணிகளில் ஈடுப்பட்டார். குறிப்பாக ஜார்ஜ் புஷ் மற்றும் பில் கிலின்டன் அகியோர் அமெரிக்காவில் அதிபராக இருந்த போது.
புதிய சீஇஓ
ஜான் சேம்பர்ஸ் தனது 65வது வயதில் நிறுவனத்தை விட்டு விலகும் நிலையில், இந்நிறுவனத்திற்குப் புதிய சீஇஓ-வாகச் சிஸ்கோ நிறுவனத்தில் மட்டும் 17 வருடம் பணியாற்றிய சக் ராபின்ஸ் அவர்களைப் புதிய சீஇஓ-வாக நிர்வாகம் தேர்வுசெய்துள்ளது.


Click it and Unblock the Notifications