20000 பேரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு.. CEO சம்பளத்தை ரூ.215 கோடியாக உயர்த்திய வங்கி..!

அமெரிக்காவின் நியூயார்க் நகரை மையமாக கொண்டு சிட்டி குரூப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. உலகெங்கும் பல கிளைகளுடன் செயல்பட்டு வரும் சிட்டி குரூப் நிறுவனத்தில் சுமார் 2 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். வங்கி துறையில் அமெரிக்காவின் பெரும் வங்கிகளில் முதல் 5 இடங்களில் சிட்டி குரூப் உள்ளது.

20,000 பேர் பணிநீக்கம் என அறிவிப்பு: கடந்த மாதம் சிட்டி குரூப் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தனது ஊழியர்களில் 20 ஆயிரம் பேரை (10 % ஊழியர்கள்) பணிநீக்கம் செய்ய போவதாக அறிவித்தது.

20000 பேரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு.. CEO சம்பளத்தை ரூ.215 கோடியாக உயர்த்திய வங்கி..!

சிட்டி குரூப்பின் தலைமை செயல் அதிகாரி ஜேன் ஃப்ரேசர் (Jane Fraser), 2024 முக்கிய ஆண்டாக இருக்கும், எங்கள் நிறுவனத்தில் பல சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன என கூறியிருந்தார். அதாவது 2026ஆம் ஆண்டு இறுதியில் 1,80,000 பேர் மட்டுமே பணியாற்றும் நிறுவனமாக சிட்டி குரூப் மாற்றப்படும் என கூறி இருந்தார்.

சிஐஓ ஊதியம் 215 கோடி ரூபாயாக உயர்வு: பணிநீக்க அறிவிப்பு வெளியானதில் இருந்து சிட்டி குரூப் ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில் திடீரென சிட்டி குரூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேன் ஃப்ரேசரின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

அண்மையில் இந்த நிறுவனம் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்த ஆவணத்தில் தலைமை செயல் அதிகாரியின் ஊதியத்தில் 6 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஜேன் ஃப்ரேசரின் சம்பளம் 26 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (215 கோடி ரூபாய்) ஆகும். வங்கி கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் நஷ்டத்தை பதிவு செய்த போதிலும் இவரது ஊதியம் மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

ஜேன் ஃப்ரேசர் 2023ஆம் ஆண்டில் அடிப்படை ஊதியம் 1.5 மில்லியன் டாலர்கள், போனஸாக 3.7 மில்லியன் டாலர்கள் மற்றும் பங்குகள் மூலம் 20.8 மில்லியன் டாலர்கள் என 26 மில்லியன் டாலர்களை பெற்றுள்ளார்.

நிறுவனத்தின் லாபம் சரிவு: சிட்டிகுரூப் 2022ஆம் ஆண்டு 2.5 பில்லியன் டாலர்கள் லாபம் பெற்ற நிலையில் 2023ஆம் ஆண்டு 17.4 பில்லியன் டாலர்களாக குறைந்தது. அதுமட்டுமின்றி நான்காவது காலாண்டில் இந்த நிறுவனம் 1.9 பில்லியன் டாலர்களை இழந்தது.

ஜேன் ஃப்ரேசர் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சிட்டிகுரூப் நிறுவனத்திற்கு தலைமை வகித்து வருகிறார். அமெரிக்காவில் பிரதான வங்கிக்கு தலைமை பொறுப்பேற்ற முதல் பெண்மணி இவர். 2004ஆம் ஆண்டில் முதலீடு மற்றும் கார்ப்பரேட் வங்கி பிரிவில் வாடிக்கையாளர் பிரிவு தலைவராக பணிக்கு சேர்ந்தவர் படிப்படியாக இந்த பதவிக்கு உயர்ந்தார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+