அமெரிக்கா: அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அமலுக்கு கொண்டு வந்திருக்கும் போட்டி வரி மூலம் அமெரிக்காவில் பல்வேறு உணவுப் பொருட்களின் விலை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் இரண்டாம் தேதியில் இருந்து பல்வேறு நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியிருக்கிறார். இதன் காரணமாக அமெரிக்காவில் செயல்படக்கூடிய நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கும் பொருட்களை தயாரிப்பதற்கும் இனி கூடுதலாக செலவிட வேண்டி இருக்கும்.

டிரம்ப்பின் இந்த நடவடிக்கை காரணமாக அமெரிக்காவில் பல்வேறு உணவுப் பொருட்களின் விலை உயரக்கூடும் என செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்காவிற்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு, வேளாண் உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கும் குறைந்தது 10 சதவீதத்திலிருந்து வரி விதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பின் மூலம் சாக்லேட், சீஸ், காபி உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் என சொல்லப்படுகிறது.
அமெரிக்காவில் முழுவதுமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரிக்கப் போகிறது . இந்த பட்டியலில் வாழைப்பழம், காபி, சாக்லேட், சீஸ் மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. எனவே அமெரிக்கர்கள் தங்களுடைய வீட்டுக்கான பட்ஜெட்டில் இனி கூடுதல் தொகையை செலவிட வேண்டி இருக்கும்.
ஏற்கனவே அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது வேலை வாய்ப்பு கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த சூழலில் வரிவிதிப்பு நடவடிக்கையால் அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலை உயர்ந்தால் அது சாமானிய மக்களுக்கு இன்னும் பிரச்சனையை ஏற்படுத்தும்.
காபி:
அமெரிக்காவில் காபி உற்பத்தி செய்யப்படுவதே கிடையாது. அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் அனைத்து காபியும் வெளிநாட்டிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. பிரேசில், வியட்நாம் ,கொலம்பியா, இந்தோனேசியா நாடுகளிடமிருந்து தான் அமெரிக்கா பெரிய அளவில் காபி இறக்குமதி செய்கிறது. இந்த நாடுகளுக்கெல்லாம் 10சதவீதம் முதல் அதிகபட்சமாக 46சதவீதம் வரை இறக்குமதி விதிக்கப்பட்டு இருப்பதால் காபியின் விலை உயரும். குறிப்பாக வியட்நாமிற்கு 46 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு தேவையான பெரிய அளவிலான காபி வியட்நாமில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது.
சாக்லேட்:
உலகிலேயே அதிக அளவில் கொக்கோ பவுடரை உற்பத்தி செய்யக்கூடிய ஐவரி கோஸ்டுக்கு அமெரிக்கா 21 சதவீதம் வரி விதித்துள்ளது. அதேபோல கானாவிற்கு 10 சதவீதம் இந்தோனேஷியாவிற்கு 32 சதவீதம் வரிவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவில் சாக்லேட் உற்பத்திக்காக கொக்கா பவுடரை வாங்கி பயன்படுத்தும் நிறுவனங்கள் சாக்லேட்டுகளின் விலையை உயர்த்தக்கூடும் . ஸ்வில் நாட்டு சாக்லேட்களுக்கு 31சதவீதம் வரியும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சாக்லேட்டுகளுக்கு 20 சதவீதம் வரியும் விதிக்கப்படுகிறது.
பூண்டு:
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 34 சதவீத வரி விதிக்கப்படும் என தெரிவித்து இருக்கிறது. உலகிற்கு தேவையான 80 சதவீத பூண்டினை சீனா தான் விநியோகம் செய்கிறது. எனவே அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான பூண்டினை சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்கின்றன. எனவே அமெரிக்காவில் பூண்டின் விலை உயரும். அதேபோல மீன் ,காய்கறி மற்றும் பழங்கள் உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரிக்கும்.
சீஸ்:
அமெரிக்காவிற்கு தேவையான சீஸ், ஆலிவ் எண்ணெய், ஒயின் உள்ளிட்டவற்றை ஐரோப்பிய நாடுகளிடமிருந்து தான் இறக்குமதி செய்கிறது. தற்போது அந்த நாடுகளின் பொருட்களுக்கு இறக்குமதி வரி உயர்த்தப்பட்டு இருப்பதால் இவற்றின் விலையும் அதிகரிக்கும்.
More From GoodReturns

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications