ஜப்பான் நிறுவனத்தை வாங்கியது 'காக்னிசென்ட்'..!
சர்வதேச சந்தையில் மென்பொருள் சேவை அளிப்பதில் முன்னோடியாக இருக்கும் அமெரிக்க நிறுவனமான காக்னிசென்ட் டெக்னாலஜி சர்வீசஸ், ஜப்பான் நாட்டின் பிர்லியன்ட் சர்வீசஸ் கோ நிறுவனத்தை வெளியிடப்படாத தொகைக்குக் கைப்பற்றியுள்ளது.
இந்தக் கைப்பற்றுதல் மூலம் சிடிஎஸ் நிறுவனம் தனது ஐடி மற்றும் பிற சேவைகளை ஜப்பான் நாட்டில் மிகப்பெரிய அளவிலான விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
பிர்லியன்ட் சர்வீசஸ் கோ
ஜப்பான் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிர்லியன்ட் சர்வீசஸ் கோ 2004ஆம் ஆண்டுத் துவங்கப்பட்டுச் சுமார் 70 ஊழியர்களும் ஸ்மார்ட் கருவிகள் மூலம் வர்த்தகங்களை இணைக்கும் சேவையை அளித்து வருகிறது.
ஜெயஜோதி சென்குப்தா
இந்நிறுவனத்தைக் கைப்பற்றுவது குறித்துக் காக்னிசென்ட் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் தலைவர் ஜெயஜோதி சென்குப்தா கூறுகையில், பிர்லியன்ட் நிறுவனத்திற்கு ஸ்மார்ட் மற்றும் கனெக்ட் டிவைஸ் வர்த்தகம் குறித்த திட்டமிடல், நிறுவுதல் மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் சிறப்பான அனுபவம் உள்ளது,
இதுமட்டும் அல்லாமல் ஜப்பான் சந்தையின் வர்த்தக முறை குறித்து முழுமையாகத் தெரியும், இது சிடிஎஸ் நிறுவன வர்த்தகத்தை ஜப்பான் வாடிக்கையாளர்களுக்கு, சந்தைக்கும் கொண்டு செல்ல ஏதுவாக அமையும் என்று கூறினார்.
ஓசாக்கா
பிர்லியன்ட் நிறுவனத்தின் கைப்பற்றுதல் ஒப்பந்தங்கள் மூலம் ஜப்பான் நாட்டில் காக்னிசென்ட் டெக்னாலஜி சரிவீசஸ் நிறுவனத்தின் கிளையை ஓசாக்கா மற்றும் டோக்கியோ பகுதிகளில் விரிவாக்கம் செய்ய உள்ளது.
டிஜிட்டல் துறை
உலக நாடுகளில் இருக்கும் முன்னணி ஐடி நிறுவனங்கள் டிஜிட்டல் துறையில் தங்களது வர்த்தகக் கவனத்தைச் செலுத்தி வரும் நிலையில் காக்னிசென்ட் நிறுவனம் ஒரு படிக்கு மேலாகப் புதிய சந்தையில் பிர்லியன்ட் நிறுவனத்தின் கைப்பற்றுதல் மூலம் தனது டிஜிட்டல் சார்ந்த வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய உள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications