ஹெச்1பி விசா முறைகேடு.. சிக்கியது காக்னிசென்ட்..!

இந்திய ஐடி துறையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான காக்னிசென்ட், அமெரிக்க அரசின் வேலைவாய்ப்பு விசா-வை முறைகேடான முறையில் பயன்படுத்தியுள்ளதாகத் தொடுக்கப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரிய நிலையில் அமெரிக்க நீதிமன்றம் இந்தக் கோரிக்கையை ரத்து செய்துள்ளது.

அதனால் காக்னிசென்ட் தொடர்ந்து இந்த வழக்கை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

காக்னிசென்ட் முறைகேடு

காக்னிசென்ட் முறைகேடு

அமெரிக்காவின் FCA அமைப்பின் முன்னாள் நிர்வாகத் தலைவர், காக்னிசென்ட் வெளிநாட்டு ஊழியர்களை அமெரிக்காவிற்கு ஹெச்1பி விசா பயன்படுத்தாமல் பிஸ்னஸ் அல்லது இன்ட்ரா கம்பெனி விசாவை பயன்படுத்தி அழைத்து வருகிறது. இது அரசை ஏமாற்றும் வேலை எனக் குற்றம்சாட்டி வழக்குத் தொடுக்கப்பட்டது.

ஹெச்1பி விசா

ஹெச்1பி விசா

இதைத் தொடர்ந்து நியூ ஜெர்சி நிறுவனமான Teaneck-ன் துணைத் தலைவர் ஜீன் கூறுகையில், காக்னிசென்ட் விசா செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக ஹெச்1பி விசாவிற்குப் பதிலாக எல்-1 மற்றும் பி-1 விசாக்களைப் பயன்படுத்தி வெளிநாட்டு ஊழியர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வருகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

காக்னிசென்ட் வாதம்

காக்னிசென்ட் வாதம்

இந்த வழக்கு விசாரணையில் காக்னிசென்ட் விசா-விற்கான தொகையைச் செலுத்தத் தயார் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதேபோல் FCA அமைப்பு IRS அமைப்பிடம் கூறிய கருத்துகளுக்கும், விளக்கங்களுக்கும் தொடர்புடையது அல்ல என்றும் விவாதம் செய்துள்ளது.

நியூ ஜெர்சி நீதிமன்ற நீதிபதி

நியூ ஜெர்சி நீதிமன்ற நீதிபதி

ஆனால் நியூ ஜெர்சி நீதிமன்றத்தின் நீதிபதி, விசா-க்களுக்கான உரியத் தொகை காக்னிசென்ட் செலுத்தினாலும், எல்-1 மற்றும் பி-1 விசா அளவிற்கு ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுத்துவிட்டு ஹெச்1பி விசா உரிமையாளர்கள் செய்யும் வேலையைச் செய்ய வைத்துள்ளது பெரும் குற்றம் என்பதைச் சுட்டிக்காட்டி காக்னிசென்ட் நிறுவனத்தின் வழக்கு தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை ரத்து செய்துள்ளார்.

USCIS கொள்கை

USCIS கொள்கை

இதுகுறித்து Teaneck-ன் துணைத் தலைவர் ஜீன் கூறுகையில், காக்னிசென்ட் கூறிய பதிலில் இந்நிறுவனம் இந்தக் குற்றத்தைத் தெரிந்தே செய்ததாக ஒப்புக்கொண்டு உள்ளது. இதனால் இந்நிறுவனம் முறைகேடாகப் பெறப்பட்ட விசா அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். USCIS கொள்கைகளையும், நடைமுறைகளும் உறுதியானது எனக் காட்ட வேண்டும் என ஈமெயில் மூலம் தெரிவித்துள்ளார்.

காக்னிசென்ட் நிறுவனம்

காக்னிசென்ட் நிறுவனம்

காக்னிசென்ட் அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும் இந்தியாவில் அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காக்னிசென்ட் நிறுவனத்திலிருந்து குறைந்தது 2000 முதல் 3000 பேர் அமெரிக்காவிற்குப் பல்வேறு விசாக்களை பயன்படுத்தி சென்று வருகின்றனர். இந்த முறைகேட்டில் காக்னிசென்ட் வரி மோசடி எதுவும் செய்யவில்லை, குடியுரிமை விதிகளை மட்டுமே முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளது என விளக்கம் கொடுத்துள்ளது.

புதிய ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புகள்

புதிய ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புகள்

காக்னிசன்ட் நிறுவனம் இந்த ஆண்டில் சுமார் 1 லட்சம் ஊழியர்களை புதிதாக பணியமர்த்த முடிவு செய்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் நடப்பு ஆண்டில் 30,000 பிரெஷ்ஷர்கள் அதாவது கல்லூரி படிப்பை முடித்தவர்களை நேரடியாக பயற்சி அளித்து பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது இதேபோல் 2022ஆம் ஆண்டில் 45,000 பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

ஊழயர்கள் பை பை

ஊழயர்கள் பை பை

ஜூன் காலாண்டில் காக்னிசென்ட் நிறுவனத்தில் இருந்து 23,300 ஊழியர்கள் வெளியேறிய காரணத்தால் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ப்பு விகிதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக சொல்லவேண்டுமெனில், ஜூன் காலாண்டில் ஒவ்வொரு வேலை நாளிலும் சுமார் 350 - 380 ஊழியர்கள் வேலையை விட்டு வெளியேறியுள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+