உலகை ஆள்வது சாதாரண விஷயமில்லை.. ஆனால் இவர்களுக்கு மிகவும் எளிது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களையும் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. ஒரு வாடிக்கையாளர்களுக்குச் சந்தையில் எக்கச்சக்க வாய்ப்புகள் உள்ளது, அவர்களை ஒருமுகப்படுத்தி நிறுவனத்தின் சேவைகள் மற்றும் தயாரிப்புகளையும் தொடர்ந்து பயன்படுத்த வைப்பது என்பது அதைவிடக் கடினம்.

இதுவே உலக அளவில் செய்ய வேண்டும் என்றால் எப்படியெல்லாம் திட்டமிட வேண்டும் என்பதைச் சற்று யூகித்துக்கொள்ளுங்கள். இப்படி உலகச் சந்தையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சில முக்கியமான நிறுவனங்களைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

ஆப்பிள்

ஆப்பிள்

உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக அமேசான் இருந்தாலும், பிராண்ட்பைனான்ஸ் குளோபல் 500 2018-ல் AAA பிராண்ட் ரேட்டிங் பெற்று, பரவலாக அறியக்கூடிய, செல்வாக்குள்ள, கெளரவமான நிறுவனமாக ஆப்பிள் உள்ளது. மேக், ஐபோன் மற்றும் ஐபாட் போன்றவற்றை உலகிற்கு அறிமுகப்படுத்திய அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனமான இது கடந்த ஆண்டு 229.2 பில்லியன் டாலர் விற்றுமுதலுடன், உலகின் முதல் டிரில்லியன் டாலர் நிறுவனம் என்ற பெயர் பெற்றது.

 அமேசான்

அமேசான்

நாம் பொருட்கள் வாங்கும் (ஷாப்பிங்) முறையையே அடியோடு புரட்டிப்போட்டு, கடந்த சில ஆண்டுகளாகப் பெரும் வளர்ச்சியடைந்து வரும் இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான், தற்போது உலகம் முழுவதும் 100 நாடுகளில் வர்த்தம் செய்கிறது. சமீபத்திய பிராண்ட்பைனான்ஸ் குளோபல் 500 2018-ன் படி அமேசான் , உலகின் மிகவும் மதிப்புமிக்கப் பிராண்ட் ஆகும். இந்தச் சியாட்டில் நிறுவனத்தின் கடந்த ஆண்டு விற்றுமுதல் 177.9 பில்லியன் டாலர்.

 கூகுள்

கூகுள்

கூகுளின் தேடு பொறி உலகத்தையே தன்வசப்படுத்தி, உலகில் மிகபிரபலமாகி மக்களின் வாழ்வோடு கலந்து தனது பிராண்ட் பெயரை வினைத்தொகையாக (verb) மாற்றிவிட்டது. கூகுளின் பெயர், அதிகப் பணம் கொட்டும் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகள், கிளவுட் முதல் சமூக வலைதளம் வரை இணைக்கப்படுகிறது. யூடியூப், ஜிக்சா போன்ற நிறுவனத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கும் கூகுளின் தலைமை நிறுவனமான ஆல்பாபெட்-ன் கடந்த ஆண்டு மொத்த வருமானம் 110.9 பில்லியன் டாலர் .

சாம்சங்

சாம்சங்

சாம்சங் செய்யாதது ஏதேனும் இருக்கிறதா எனக் கேட்க தோன்றுகிறது?

தென்கொரிய நிறுவனமான இது மிண்ணனு பொருட்கள், கப்பல்கள், கார்களைத் தயாரிக்கிறது. மேலும் இந்தக் குழுமம் தீம்பார்க், காப்பீட்டு நிறுவனம் மற்றம் விளம்பர நிறுவனத்தையும் நடத்திவருகிறது. உலகம் முழுவதும் பிரபலமான பிராண்டு சாம்சங் எனச் சொன்னால் ஆச்சர்யம் இல்லை. கடந்த ஆண்டு இந்தக் குழுமம் 305பில்லியன் டாலர் என்ற ஆகப்பெரிய வருமானத்தைக் காட்டியுள்ளது.

 

பேஸ்புக்

பேஸ்புக்

போலி செய்திகளைப் பரப்புதல் முதல் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா தகவல் மோசடி வரை தொடர்ச்சியாகச் சர்ச்சைகளைச் சந்தித்து வந்தாலும், தொடர்ந்து உலகின் பிரபலமான சமூக வலைதளமாக இருந்து வருகிறது. 2017 ன் நான்காம் காலாண்டில் பேஸ்புக்கில் 2.2பில்லியன் செயல் பயனர்கள் இருக்கும் நிலையில் அது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தச் சமூக வலைதள நிறுவனத்தின் விற்றுமுதல் 40.7 பில்லியன் டாலர்.

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

உலகின் மிகப்பெரிய மென்பொருள் மற்றும் வன்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்டின் தயாரிப்புகளான விண்டோஸ், எம்.எஸ் ஆபீஸ் முதல் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் வரை அனைத்தும் பலரின் அன்றாட வாழ்க்கையில் பிரிக்கமுடியா அங்கமாகி விட்டது. லிங்கிடுஇன், ஸ்கைப் போன்ற பெரு நிறுவனங்களைத் தன்னகத்தே கொண்ட இந்த வாஷிங்க்டன் நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருமானம் 90பில்லியன் டாலர்.

 வால்மார்ட்

வால்மார்ட்

வருவாய் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நிறுவனமான வால்மார்ட்-ன் 2017 ஆண்டுக்கான விற்றுமுதல் 485.9 பில்லியன் டாலர். மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான இது அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் வால்மார்ட் என்ற பெயரிலும், மற்ற இடங்களில் அஸ்டா எனச் செயல்பட்டாலும் பரவலாக வாஸ்மார்ட் என அறியப்படுகிறது.

 மெர்சிடஸ் பென்ஸ்

மெர்சிடஸ் பென்ஸ்

உலகின் சக்திவாய்ந்த வாகன பிராண்டான இதன் புகழுக்கு வேறு இணையே கிடையாது எனச் சொல்லலாம். தனது போட்டியாளரான பி.எம்.டபுள்யூ யை விட மதிப்புவாய்ந்த மற்றும் சொகுசான இது, 19ஆம் நூற்றாண்டில் இருந்து டைம்லர் ஏஜி குருப்பின் ஒரு பகுதியாக இருக்கிறது. கடந்த ஆண்டு அதன் வருமானம் 202பில்லியன் டாலருக்கும் அதிகம்.

 டொயோடா

டொயோடா

உற்பத்தி அளவின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரான டொயோடா, வருடத்திற்கு 10மில்லியன் வாகனங்களைத் தயாரித்து உலகம் முழுக்கப் பரவச் செய்திருக்கிறது. இந்த ஜப்பான் நிறுவனம் கலப்பு வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களையும் தயாரிக்கிறது. இதன் கடந்த ஆண்டு விற்றுமுதல் 259.2 பில்லியன் டாலர்கள்.

பி.எம்.டபுள்யூ

பி.எம்.டபுள்யூ

கௌரவம் மற்றும் ஆடம்பரத்திற்கு மறுபெயர் பி.எம்.டபுள்யூ எனக் கூறும் வகையில், புகழ்பெற்ற பிராண்டாக விளங்குகிறது. ஜெர்மன் நிறுவனமான இது வருடத்திற்கு மில்லியன் உயர்தர வாகனங்களை 5 கண்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 116.1 பில்லியன் டாலர் விற்றுமுதல் பெற்றுள்ளது.

டிஸ்னி

டிஸ்னி

உலகம் முழுவதும் உள்ள எண்ணிலடங்கா குழுந்தைகள் டிஸ்னி படங்களையும், டிஸ்னி தொலைக்காட்சியையும், அதன் தீம் பார்க் சென்றும் வளர்ந்தவர்களே. பிராண்ட் பைனான்ஸ் குளோபல் 500 ல் AAA ரேட்டிங் பெற்ற வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் கடந்தாண்டு வருமானம் 55.1 பில்லியன் டாலர்கள் ஆகும்.

 மெக் டொனால்டு

மெக் டொனால்டு

உலகின் சக்திவாய்ந்த துரித உணவு பிராண்டான இது, 101 நாடுகளில் உள்ள 36,000 இடங்களில் செயல்பட்டு 69 மில்லியன் வாடிக்கையாளர்களுக்குத் தினமும் சேவையளிக்கிறது. இதன் கோல்டன் ஆர்ச் லோகோ உலகின் பெரும்பாலான மக்களால் அடையாளம் காணப்படுகிறது. இந்த அமெரிக்க நிறுவனம், கடந்தாண்டு அனைத்து துரித உணவு பிராண்டுகளைக் காட்டிலும் அதிகமாக, 22.8 பில்லியன் டாலர் விற்றுமுதல் பெற்றுள்ளது.

ஷெல் (SHELL)

ஷெல் (SHELL)

எண்ணெய் மற்றும் எரிவாயு துறையின் ஜாம்பவானாக இருக்கும் இது, 70 நாடுகளில் செயல்படுகிறது. வருமானத்தின் அடிப்படையில் பெரிய நிறுவனமான இந்தப் பிரிட்டிஷ் டச்சு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தின் விற்றுமுதல் கடந்தாண்டு சுமார் 305.1 பில்லியன் டாலர்.

ஹூவாய்

ஹூவாய்

உலகின் மிகப்பெரிய தொலைதொடர்பு கருவிகள் தயாரிப்பாளர் மற்றும் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ஹூவாய், உலகம் முழுக்கப் பல மில்லியன் வாடிக்கையாளர்களுடன் 170 நாடுகளில் செயல்படுகிறது.ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்குப் பெயர் போன இந்தச் சீன நிறுவனம் தற்போது அடுத்தத் தலைமுறை கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் ஐ.ஓ.டி சேவைகளில் கவனம் செலுத்தி வருகிறது. கடந்தாண்டு உலகம் முழுவதும் இதன் விற்றுமுதல் 92.5 பில்லியன் டாலர்.

வோல்ஸ்வேகன்

வோல்ஸ்வேகன்

ஜெர்மனியின் நாசி பகுதியில் 1930களில் துவங்கியது முதல் எமிசன் மோசடி வரை,சர்ச்சைகள் மேல் சர்ச்சைகளுக்கு ஆனாலும் மீண்டும் மீண்டும் திரும்பி வந்து, வோல்ஸ்வேகன் எனும் பிராண்டை தக்கவைத்துள்ளது. கடந்த வருடம் இதன் ஆண்டு வருமானம் 284.4 பில்லியன் டாலர்கள் ஆகும்.

ஐ.பி.எம்

ஐ.பி.எம்

ஐ.பி.எம் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கணிணி நிறுவனம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஐடி பிராண்ட் ஆகும். கணிணி, ப்ளாப்பி டிஸ்க், மேக்னட்டிக் ஸ்டிரிப் கார்ட் போனறவற்றைக் கண்டறிந்த இந்த நிறுவனம், பல நோபல் பரிசுகளுக்கு வித்திட்டது. 170 நாடுகளில் செயல்படும் இந்நிறுவனம், உலகின் அதிகப் பணியாளர்கள் இருக்கும் தனியார் நிறுவனமாகும். இதன் சென்ற ஆண்டு விற்றுமுதல் 79.1 பில்லியன் டாலர்.

ஸ்டார்பக்ஸ்

ஸ்டார்பக்ஸ்

75நாடுகள் மற்றும் பிரதேசங்களில், மொத்தம் 27,339 இடங்களில் செயல்படும் உலகின் மிகப்பெரிய காபி தொடர்அமைப்பு நிறுவனம் ஸ்டார்பகஸ். இதனுடைய பிரபல சைரன் லோகோ எங்கும் பரவி இருக்கிறது. காபி அனுபவத்தையே மாற்றியமைத்துள்ள ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் கடந்தாண்டு விற்றுமுதல் 22.4 பில்லியன் டாலர்.

பி.டிபுள்யூ.சி

பி.டிபுள்யூ.சி

நான்கு பெரிய அக்கவுண்டிங் நிறுவனங்களில் ஒன்றான ப்ரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் (PricewaterhouseCoopers-PWC) நிறுவனம்,158 நாடுகளில் உள்ள 743 இடங்களில் தனது வலையமைப்பை பரந்து விரித்துள்ளது. உலகின் மதிப்புமிக்க அக்கவுன்டிங் நிறுவனமான இதன் வருமானம் 37.7 பில்லியன் டாலர்.

ஜெனரல் எலக்டிரிக்

ஜெனரல் எலக்டிரிக்

அமெரிக்காவின் ஆப்பிள் பையைப் போல, இந்த நிறுவனம் நூறு ஆண்டுகளைக் கடந்து செயல்படுகிறது. பன்னாட்டு நிறுவனமான இது, விமானபோக்குவரத்து, சுகாதாரம் , எரிசக்தி, போக்குவரத்து எனப் பல துறைகளில் கால்பதித்துள்ளது. கடந்தாண்டு இந்நிறுவனத்தின் வருமானம் 122 பில்லியன் டாலர்.

சிட்டி வங்கி

சிட்டி வங்கி

1812 ல் துவங்கப்பட்ட சிட்டி வங்கி , அமெரிக்காவின் இயங்கிவரும் பழம்பெரும் வங்கிகளில் ஒன்று. அமெரிக்கா, மெக்சிகோ, இந்தியா மற்றும் ரஷ்யா உள்பட உலகம் முழுக்க 19 நாடுகளில் நூற்றுக்கணக்கான கிளைகளை வைத்துள்ளது. இதன் சிட்டி குருப் நிறுவனம் 1.8டிரில்லியன் டாலர் மொத்த சொத்துடன், 69.8 பில்லியன் டாலர் விற்றுமுதல் பெற்றுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Companies that rule the world easily

Companies that rule the world easily
Story first published: Friday, April 20, 2018, 19:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X