பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு விண்ணப்பம் செய்யக்கூடிய மாணவர்களுக்கு பொதுவாகவே வழங்கப்படும் முறை அறிவுரை என்னவென்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தால் நிறைய சம்பளத்துடன் நல்ல நிலையான வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதுதான்.
இந்தியாவில் கூட பெரும்பாலானவர்கள் இந்த பிரிவில் படிப்பை முடித்துவிட்டு அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று விடலாம் ஐடி துறையில் சிறந்த சம்பளத்துடன் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றனர். ஆனால் தற்போது நிலவரம் மாறிவிட்டது என ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது. அமெரிக்காவில் நியூஸ் வீக் என்ற தளம் வெளியிட்டுள்ள செய்தியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தவர்களே தற்போது வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளது.

நியூயார்க்கின் பெடரல் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் படி நியூஸ் வீக் வெளியிட்டுள்ள செய்தியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படிப்பை முடித்தவர்கள் பெரும்பாலும் வேலை கிடைக்காமல் தவித்து வருவது தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கல்லூரி படிப்பை முடித்தவர்களில் வேலை வாய்ப்பு பெறாதவர்களில் ஏழாவது இடத்தில் கணினி அறிவியல் படிப்பை முடித்தவர்கள் இருப்பதாக அதை தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பு கிடைக்காத பட்டதாரிகளில் 6.1 சதவீதம் பேர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள் என அந்த தரவுகள் குறிப்பிடுகின்றன. அதே போல வேலை வாய்ப்பு கிடைக்காதவர்களில் இயற்பியல் பிரிவில் படிப்பை முடித்தவர்கள் 7.8 சதவீதமாகவும், மானுடவியல் பிரிவில் படிப்பை முடித்தவர்களின் எண்ணிக்கை 9.4 சதவீதமாகவும் இருக்கிறதாம்.
வேலைவாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்களில் 7.5% பேர் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பிரிவில் படிப்பை முடித்தவர்கள் அந்த தரவுகள் தெரிவிக்கின்றன. அதே வேளையில் அமெரிக்காவில் ஊட்டச்சத்து அறிவியல், கட்டுமான பிரிவு, சிவில் இன்ஜினியரிங் உள்ளிட்ட பிரிவுகளில் படிப்பை முடித்த பட்டதாரிகளின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 0.4 சதவீதம் என மிகக் குறைவாக இருக்கிறது.
அதாவது இந்த பிரிவில் படிப்பை முடித்தவர்களுக்கு தற்போது வேலை வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்பதையே இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. அமெரிக்காவில் வேலை வாய்ப்பு கிடைக்காததால் அரசு வழங்கக்கூடிய பலன்களை பெறக்கூடிய நபர்களின் எண்ணிக்கையை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 32 சதவீதம் அதிகரித்து இருப்பதாக நியூஸ்வீக் செய்தி குறிப்பிடுகிறது.
அமெரிக்காவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படித்தவர்கள் பலர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர் என மனித வளத்துறை நிறுவனம் வைத்திருக்கும் பிரையன் டிரிஸ்கால் என்பவர் நியூஸ் வீக்கிற்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். எனவே தற்போது வேலைவாய்ப்பு சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப மாணவர்கள் கல்லூரி படிப்பை தேர்வு செய்ய வேண்டும் என்றும், திறன்களை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுரை வழங்குகிறார்.


Click it and Unblock the Notifications