மொபைல் உலகில் கொடிகட்டி பறந்த நோக்கியா நிறுவனம் தனது ஆண்ராய்டு மற்றும் ஸ்மார்போன் வருகையால் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்தது. இதனால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்த நோக்கியா தனது வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்தது.
இந்நிலையில் மொபைல் தயாரிப்புக்கு தனக்கென ஒரு தனி இடத்தையும், தொழில்நுட்பத்திற்கான பேட்டன்களை வைத்துள்ளது நோக்கியா.
இதனை மூலதனமாகக் கொண்டு பின்லாந்து நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள HMD குளோபல் ஓய் என்னும் நிறுவனத்திடம் மொபைல் தயாரிப்பிற்காகத் தனது தொழில்நுட்பத்தைப் பகிர ஒப்புக்கொண்டு 10 வருட கால ஒப்பந்தத்தில் இப்புதிய கூட்டணி உருவாகியுள்ளது.
அண்ட்ராய்டு
ஆம், இம்முறை அண்ட்ராய்டு போன் மற்றும் டேப்லெட்களை நோக்கியா தொழில்நுட்பத்தில் தயாரித்து HMD குளோபல் ஓய் சர்வதேச சந்தையில் வர்த்தகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
ராயல்டி
உலகச் சந்தைகளில் நோக்கியா போன்களை விற்பனை செய்வதற்காகவும், அதன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்காகவும் HMD குளோபல் ஓய் நிறுவனம் நோக்கியா நிறுவனத்திற்கு ராயல்டி தொகை அளிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளது.
நோக்கியாவின் வீழ்ச்சி
மொபைல் விற்பனை மற்றும் தொழில்நுட்பத்தில் கொடிகட்ட பறந்த நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம் மற்றும் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் திடீர் வளர்ச்சி ஆகியவை இந்நிறுவனத்தை மிகப்பெரிய வர்த்தகச் சரிவை சந்தித்து. இதன்பின் 2014ஆம் ஆண்டில் தனது வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்தது.
மைக்ரோசாப்ட் - நோக்கிய டீல்
மேலும் மைக்ரோசாப்ட் மற்றும் நோக்கிய நிறுவனங்கள் மத்தியிலான டீல் முழுமையாக முடியாத நிலையில், HMD நிறுவனம் நோக்கியாவின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சிறிது காலம் தேவைப்படும்.
பியூச்சர் போன்
இந்நிலையில் மைக்ரோசாப்ட் தனது பியூச்சர் போன் சொத்துக்களை FIH மொபைல் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது. பாக்ஸ்கான் மற்றும் HMD கூட்டணியின் கிளை நிறுவனம் தான் FIH மொபைல்.
ஒப்புதல்
மேலும் HMD நிறுவனம், நோக்கிய நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை மையமாக வைத்து பியூச்சர் போன் தயாரிப்பதற்கான ஒப்புதலையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications