995 கொரோனா நோயாளிகள் ஒரு மரணம் கூட இல்லை! ஆச்சர்யப்படுத்தும் செக் குடியரசு!

கொரோனா வைரஸால் உலகில் மொத்தம் 3,08,257 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 13,068 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள்.

இதில் உலகின் பெரிய சக்தி வாய்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து தொடங்கி பெயர் தெரியாத குட்டி குட்டி நாடுகள் வரை பல நாடுகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.

இப்போது இந்த கொரோன வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், மரணமடைந்தவர்கள் & குணமடைந்தவர்கள் எண்ணிக்கை வைத்து சில ஆச்சர்ய தகவல்களைத் திரட்டி இருக்கிறோம்.

500 கொரோனா நோயாளிகளுக்கு மேல் பரவி இருக்கும் நாடுகள் பட்டியலைத் தான் இந்த டேட்டா கட்டுரை அலசலுக்கு எடுத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

மரணம் இல்லை

மரணம் இல்லை

செக் குடியரசு நாட்டில் சுமாராக 995 பேருக்கு கொரோனா பரவி இருக்கிறது. ஆனால் இதுவரை ஒருவர் கூட மரணமடைய வில்லை என்பது  தான் மகிழ்ச்சியான செய்தி. அநேகமாக இந்த நாடுகளில் தரமான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகிறதோ என்னவோ.. தெரியவில்லை. ஆனால் மரணம் நிகழாத வரை மகிழ்ச்சி தானே.

குறைவான மரணம்

குறைவான மரணம்

உலகில் கொரோனா அதிகம் பரவி இருக்கும் டாப் 10 நாடுகளில் மிகக் குறைந்த அளவே நோயாளிகள் மரணம் அடைந்து இருக்கும் நாடு எது தெரியுமா..? ஜெர்மனி. ஆம் மொத்தம் 22,364 கொரோனா நோயாளிகள் இருக்கிறார்கள். அதில் 84 பேர் மரணித்து இருக்கிறார்கள். ஆக 100 பேருக்கு நோய் தாக்கியதில் 0.38 % பேர் மட்டுமே மரணம் அடைந்து இருக்கிறார்கள். பெரிய அளவில் மரணத்தைத் தடுக்கும் ஜெர்மனி மருத்துவர்களுக்கு நம் லால் சலாம்.

டெத் ரேட் - அதிக மரண விகிதம்

டெத் ரேட் - அதிக மரண விகிதம்

கொரோனா வைரஸ் நோய் தாக்கி அதிகம் பேர் இறந்த நாடு எது என்று கேட்டால் எந்த நாட்டைச் சொல்வீர்கள்..? சீனா என்று சொன்னால் தவறான விடை. சீனாவில் 81,054 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3261 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். அதாவது நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 4.02 % பேர் மரணித்து இருக்கிறார்கள்.

அதிக மரணம் 1

அதிக மரணம் 1

ஆனால் இத்தாலியிலோ இதுவரை 53,578 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதில் 4,825 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். அதாவது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 9.01 % பேர் மரணமடைந்து இருக்கிறார்கள் என்பது வருத்தமான விஷயம்.

குணமடைதல்

குணமடைதல்

கொரோன வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகம் குணமடைந்து பழைய நிலைக்கும் திரும்பும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நாடு சீனா. சீனாவில் மொத்தம் 81,054 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதில் 72,440 பேர் குணமடைந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி இருக்கிறார்கள். அதாவது, சீனாவில் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது என்றால் அதில் 89.37 பேர் குணமடைந்து இருக்கிறார்கள்.

யாரும் குணமடையவில்லை

யாரும் குணமடையவில்லை

நாம் ஏற்கனவே சொன்னது போல, 500 பேருக்கு மேல் கொரோனா தொற்று இருக்கும் நாடுகளை மட்டுமே இந்த டேட்டா கட்டுரை அலசலுக்கு எடுத்துக் கொண்டோம். அதன் படி எந்த நாட்டில் நோயாளி குணமடையவே இல்லை என்று கேட்டால் துருக்கி முதலிடத்தில் இருக்கிறது.

துருக்கி கொரோனா

துருக்கி கொரோனா

துருக்கி நாட்டில் இதுவரை சுமாராக 947 நோயாளிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதில் 21 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். ஆனால் ஒருவர் கூட இதுவரை குணமடையவில்லை என்பது தான் கொஞ்சம் அதிர்ச்சிகரமான தகவலாகத் தெரிகிறது. எப்போது ஒழியும் இந்த கொரோனா..? விரைவில் ஒழியட்டும், வழக்கம் போல வர்த்தகங்களும், வணிகங்களும் வளரட்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+