ட்ரம்ப் தேசத்தை இவ்வளவு பாதிக்கிறதா கொரோனா! ING-ன் அசால்ட் கணிப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் தலைப்புச் செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இப்போது ஒட்டு மொத்த தேசங்களையும், தேசத்தின் பொருளாதார வளங்களையும் பாதிக்கத் தொடங்கி இருக்கிறது.

 

அதன் முதல் படியாக அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீடுகளை சில முன்னணி நிறுவனங்கள் வெளியிட்டு இருக்கின்றன.

இவர்களின் மதிப்பீடுகளைப் பார்க்கும் போது, வல்லரசு தேசத்தையே கொரோனா துவைத்து எடுத்துக் கொண்டிருப்பதாகத் தான் தெரிகிறது. சரி மதிப்பீடுகளைப் பார்ப்போம்.

அமெரிக்காவுக்கே அடியா

அமெரிக்காவுக்கே அடியா

உலகின் முன்னணி இன்வெஸ்மெண்ட் பேங்குகளின் ஒன்றான கோல்ட் மென் சாக்ஸ் (Goldman Sachs), உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட, அமெரிக்காவைப் பற்றிச் சில செய்திகளைச் சொல்லி இருக்கிறது. அமெரிக்க பொருளாதாரம் இந்த 2020 ஜனவரி - மார்ச் வரையான காலாண்டில் 0 % வளர்ச்சி காணலாம் எனக் கணித்து இருக்கிறார்கள்.

5 % காலி சார்

5 % காலி சார்

அதோடு, அடுத்த 2020 ஏப்ரல் - 2020 ஜூன் காலாண்டில், அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சி சுமாராக 5 % வரை சரியலாம் எனச் சொல்லி அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது கோல்ட் மேன் சாக்ஸ் இன்வெஸ்மெண்ட் பேங்கிங் நிறுவனம்.

1.2 %-ல் இருந்து 0.4 %
 

1.2 %-ல் இருந்து 0.4 %

ஒட்டு மொத்தமாக இந்த ஆண்டில் அமெரிக்க பொருளாதாரம் 0.4 % மட்டுமே ஜிடிபி வளர்ச்சி காண வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருக்கிறது கோல்ட் மேன் சாக்ஸ். இதற்கு முன் இந்த 2020-ல் அமெரிக்க பொருளாதாரம் 1.2 % ஜிடிபி வளர்ச்சி காணலாம் எனச் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐ என் ஜி நிறுவன கணிப்பு

ஐ என் ஜி நிறுவன கணிப்பு

கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தை விட ஐ என் ஜி (ING) நிறுவன பொருளாதார வல்லுநர்கள் இன்னும் பயங்கரமான மதிப்பீட்டைக் கொடுத்து இருக்கிறார்கள். அடுத்த 2020 ஏப்ரல் - ஜூன் காலாண்டில் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 8 % வரை சரியலாம் எனக் கணித்து இருக்கிறார்கள்.

2008

2008

இந்த கொரோன வைரஸால், இப்போது அமெரிக்க பொருளாதாரம் எதிர் கொள்ள இருக்கும் பிரச்சனைகள் மற்றும் பொருளாதார சரிவுகள், கடந்த 2008-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் போது சந்தித்த சரிவுகளுக்கு நிகராக இருக்கலாம் எனச் சொல்லி எச்சரித்து இருக்கிறது ஐ என் ஜி நிறுவனம்.

ஒரே நாளில் நடக்காது

ஒரே நாளில் நடக்காது

ஆக கொரோனா வைரஸ் ட்ரம்ப் தேசத்தை துவைத்து எடுக்கிறது என்றே சொல்லலாம். ஏன் என்றால், இந்த அளவுக்கு அமெரிக்க பொருளாதாரம் சரிய வாய்ப்பு இருக்கிறது என்றால், அது ஒரே நாளில் சரியாது அல்லவா! தற்போது வரை அமெரிக்காவில் 4,731 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 93 பேர் பலியாகி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coronavirus affecting america hardly ING company estimate

The deadly coronavirus may affect the United States of America hardly in economic growth. ING company estimate that the second quarter GDP may shrink around 8 percent.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X