கொரோனாவை தொடங்கி வைத்த சீனா..பொருளாதாரத்தில் சாத்தியமான வளர்ச்சி விகிதத்திற்கு திரும்புவதாக தகவல்!

முதன் முதலாக சீனாவின் வுகான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க தற்போது தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிலும் உலகம் முழுக்க தற்போது 3,39,039 பேரிற்கு இதன் தாக்கம் ஏற்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இதுவரை கொரோனாவினால் 14,698 பேர் இறந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனாவில் முதன் முதலாக தோன்றிய இந்த வைரஸானது, அந்த நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் சரிவினை ஏற்படுத்தி வந்தது.

மீண்டும் தொடக்கம்

மீண்டும் தொடக்கம்

அதிலும் உலகளவில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக கூறப்படும் சீனாவின் பொருளாதாரம் கொரோனாவினால் மிக மோசமாகவே பாதிக்கப்பட்டது எனலாம். இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் அந்த நாட்டின் ஜிடிபி விகிதத்திலும் கணிசமான அளவினை எடுத்துக் கொள்ளும் என்றும் கூறப்பட்டது. மேலும் சீனாவில் கொரோனா தாக்கத்தினால் அந்த நாட்டில் முடக்கப்பட்ட தொழில் சாலைகள் தற்போது தான் மீண்டும் தொடங்கியுள்ளன.

விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம்

விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம்

இந்த நிலையில் சீனா பொருளாதாரம் விரைவில் இயல்பு நிலையை அடையும் என்றும் அந்த நாட்டின் மத்திய வங்கியின் மூத்த வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் அடுத்த மூன்று மாதங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்கும் என்றும் கூறியுள்ளனர். மேலும் இது இரண்டாவது காலாண்டில் குறிப்பிடத்தக்கது முன்னேற்றத்தினை காண்பிக்கும் என்றும் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சீரான வளர்ச்சி நடவடிக்கை

சீரான வளர்ச்சி நடவடிக்கை

இது குறித்து வெளியான அறிக்கையில், சீனா பொருளாதாரம் சாத்தியமான உற்பத்தி நிலைக்கு விரைவாகத் திரும்பும் என்று சீனா மத்திய வங்கியின் துணை ஆளுநர் சென் யூலு பெய்ஜிங்கில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் கடன் வளர்ச்சியை சீராக வைத்திருக்கவும், அதில் நல்ல முறையில் மாற்றம் கொண்டு வரவும், மத்திய வங்கியின் இலக்கினை தளர்த்தல் போன்றவற்றையும் நினைவு கூர்ந்துள்ளார்.

வரலாறு காணாத சரிவு

வரலாறு காணாத சரிவு

கடந்த பிப்ரவரி மாதத்தில் சீனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏனெனில் சீனாவில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, தொழில்சாலைகள் முடக்கம், மக்கள் தனிமைப்படுத்தல், பணி நிறுத்தங்கள், ஆலைகள் மூடல், பயணத் தடை, மக்களின் முழு இயக்கத்தினையும் தடை செய்த நிலையில் சீனா வரலாறு காணாத சரிவினை கண்டது.

மார்ச் மாதத்தில் முன்னேற்றம்

மார்ச் மாதத்தில் முன்னேற்றம்

நடப்பு மாதத்தில் கடன் கொடுத்தல், டெபாசிட் மற்றும் கடன் சர்வீசஸ் முந்தைய தரவுகளின் அடிப்படையில், சீனாவின் உண்மையான பொருளாதாரம் ஓரளவு மேம்பட்டு வருகிறது என்றும் சென் கூறியுள்ளார். மேலும் சீனாவில் ஓரு கணிப்பின் படி மார்ச் மாதத்தில் வேலையின்மை விகிதம் 6.2% ஆக உயர்ந்தது. இது நுகர்வு அதிகரித்து வருவதையே சுட்டிக் காட்டுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நல்ல வளர்ச்சி

நல்ல வளர்ச்சி

மேலும் சர்வதேச பங்கு சந்தைகளுடன் ஒப்பிடும்போது சீனாவின் சந்தை சற்று நன்றாகத் தான் உள்ளது. எனினும் கொரோனாவின் தாக்கம் மற்ற நாடுகளுக்கு தற்போது படையெடுத்துள்ள நிலையில் சப்ளை செயின் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆக இது சற்று பொருளாதாரத்தில் எதிரொலிக்கலாம் என்றும், இது பொருளாதாரத்தில் சற்று மிதமான வளர்ச்சியை உருவாக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+