அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை எப்படியாவது கைப்பற்றி, அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால் இதற்கு டென்மார்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையே வர்த்தக மோதலை உருவாக்கி இருக்கிறது. இது அமெரிக்கா மட்டுமில்லாமல் உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகளை பெருமளவில் வீழ்ச்சி அடைய செய்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளை உயர்த்தி இருக்கிறது. கிரீன்லாந்தை கைப்பற்ற ஏதுவாக டிரம்பின் வரிவிதிப்பும் மிரட்டல்களும், கிரீன்லாந்தை கைப்பற்ற என்ன வேண்டுமானாலும் செய்ய தயங்க மாட்டேன் என கூறி வருவதும் உலகம் முழுவதுமே விவாத பொருளாக மாறி இருக்கிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென கிரீன்லாந்தை வாங்க வேண்டும் என கூறுவதன் பின்னணியில் இருப்பது ஒரு நபர் தான். டிரம்பின் கிரீன்லாந்து ஆசைக்கு 2018ஆம் ஆண்டிலேயே போடப்பட்ட விதை தான் இப்போது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அமெரிக்க பெரும் பணக்காரர்களுள் ஒருவரும் எஸ்டீ லாடர் என்ற காஸ்மடிக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ரொனால்ட் லாடர் தான் டிரம்புக்கு கிரீன்லாந்தை வாங்கும் ஆசையை தூண்டியவர்.
81 வயதான ரொனால்ட் லாடர் , அதிபர் டொனால்ட் டிரம்பின் நீண்ட கால நண்பர். 2018ஆம் ஆண்டில் டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற போதே ரொனால்ட் லாடர் , அமெரிக்கா கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டும் என கூறினாராம். முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனே இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2018ஆம் ஆண்டிலேயே தன்னை அழைத்து அமெரிக்கா கிரீன்லாந்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் இது அமெரிக்க எதிர்காலத்துக்கு தேவை என கூறினார், முக்கிய தொழிலதிபர் ஒருவர் இதனை என்னிடம் தெரிவித்தார் என்று டிரம்ப் கூறியதாக போல்டன் கூறியுள்ளார். அந்த தொழிலதிபர் டொனால்ட் லாடர் என்பது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1944 ஆம் ஆண்டில் பிறந்தவர்தான் ரொனால்ட் லாடர். அமெரிக்காவின் மிகப்பெரிய பிசினஸ் கல்லூரிகளில் படிப்பை முடித்தவர், பாரீஸ் பல்கலைக்கழகம், பிரச்சல்ஸ் பல்கலைகழகம் என பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்களில் எல்லாம் பிசினஸ் மேலாண்மை படிப்புகளை முடித்திருக்கிறார். 20 வயது ஆகும்போது தன்னுடைய தாயாரின் காஸ்மெட்டிக்ஸ் தொழிலில் கால் பதித்து விட்டார்.

எஸ்டீ லாடர் என்ற அந்த காஸ்மெட்டிக் நிறுவனத்தை அடுத்து கட்டத்திற்கு கொண்டு சென்று அமெரிக்காவின் பெரிய காஸ்மெடிக் நிறுவனமாக மாற்றியவர். ரொனால்ட் ரீகன் போன்ற அமெரிக்க அதிபர்களுடன் நெருங்கிய நண்பராக இருந்தவர். ஆஸ்திரிய நாட்டுக்கான அமெரிக்க தூதராக செயல்பட்டு வந்திருக்கிறார். உலக யூதர்களுக்கான அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
நியூயார்க் மேயர் தேர்தலில் கூட போட்டியிட்டவர். எனவே தொழிலதிபராக மட்டுமில்லாமல், அரசு பதவி வகித்தவர், அரசியலிலும் ஈடுபட்டவர். டிரம்பும் இவரும் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறார்கள். 2018 ஆம் ஆண்டிலேயே இவர் டிரம்பிடம் கிரீன்லாந்தை அமெரிக்கா தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட வேண்டும் என கூறியுள்ளார்.
கிரீன்லாந்து ஏன் அமெரிக்காவின் கட்டுக்குள் வர வேண்டும் என்பது குறித்து லாடர் நியூயார்க் போஸ்டில் கட்டுரை எழுதியுள்ளார். அமெரிக்கா , கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டும் என்ற முடிவு தொலைநோக்கு பார்வை கொண்டது எனக் கூறியிருக்கிறார். அதாவது கிரீன்லாந்த் பனி பிரதேசத்துக்கு கீழ் பல்வேறு அரிய வகை கனிமங்கள் இருக்கின்றன. இவை ஏஐ தொழில்நுட்பம் , நவீன ஆயுத உற்பத்தி மற்றும் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுக்கு அத்தியாவசியமானவை என கூறி இருக்கிறார்.
கிரீன்லாந்தில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகி வருவதால் இந்த பிராந்தியம் கூடிய விரைவில் சர்வதேச சரக்கு போக்குவரத்துக்கான மையமாகவும் சர்வதேச பாதுகாப்புக்கான மையமாகவும் மாறப்போகிறது என அவர் கூறுகிறார். கிரீன்லாந்து அமெரிக்க பாதுகாப்புக்கும் அமெரிக்காவின் கை ஓங்கி இருப்பதற்கும் முக்கியம் என்கிறார். இந்த விவகாரத்தில் டென்மார்க் மற்றும் அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் செய்யவும் தயார் என தெரிவித்துள்ளார். இவர் கிரீன்லாந்து நாட்டின் பல்வேறு திட்டங்களிலும் முதலீடு செய்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications