'சுக்கிரன்' எல்லா இடத்தலையும் 'சிக்சர்' அடிக்க முடியாது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவைப் போன்று புதிய நோட்டுகளை மாற்ற முயன்று தோல்விகளை சந்தித்த நாடுகள் பற்றி தெரியுமா உங்களுக்கு?

 

நாணய சீர்திருத்தம் நடப்பது உலகளவில் இது ஒன்றும் முதல் முறை அல்ல. உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகள் கூட இதை முயற்சி செய்துள்ளன.

இது போன்று முயன்றதில் 1971 ஆம் ஆண்டும், 2002 ஆம் ஆண்டும் இங்கிலாந்தில் மட்டும் தான் சுமூகமாக வெற்றிபெற்றது. பிற நாடுகளில் எங்கும் வெற்றி பெறவில்லை.

இப்போது நாம் இது போன்று முயற்சி செய்து தோல்வியுற்ற சில நாடுகளைப் பற்றி இங்குப் பார்ப்போம்.

சோவியத் ஒன்றியம்

சோவியத் ஒன்றியம்

1991 ஜனவரி மிகையில் கோர்பச்சேவ் தலைமையின் கீழ் கருப்புப் பணத்தை ஒழிக்க முயற்சி செய்து பெறும் பணவீக்கத்தை சந்தித்தது மட்டும் அல்லாமல் இரண்டும் முறை முயன்றும் தோல்வியை சந்தித்தது.

வட கொரியா

வட கொரியா

கருப்புப் பணத்தை மூடக்க தங்களது நாணயத்தில் இருந்து இரண்டு பூஜியங்களை குறைக்க முயன்று கிம் ஜாங்-II தோல்வியைச் சந்தித்தார். இதனால் விவசாயம் முதல் அனைத்துத் துறைகளிலும் பெரிய பாதிப்பு ஏற்பட்டதும் இல்லாமல் மக்கள் உணவுக்குப் பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டது. இதற்காக கிம் ஜாங் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார்.

மியான்மார்

மியான்மார்

1987 ஆம் ஆண்டு ராணுவ ஆட்சியின் போது நாட்டின் மொத்த பண மதிப்பில் 80 சதவீதத்தைச் செல்லா பணமாக அறிவித்துப் பெறும் போராட்டத்திற்குப் பிறகு திரும்பப் பெறப்பட்டது. இதுவும் கருப்பு சந்தைக்கு எதிராக முயற்சி செய்தே ஆகும்.

கானா
 

கானா

1982 ஆம் ஆண்டு வரி ஏய்ப்பு, ஊழல் மற்றும் அதிகப்படியான பணப்புழக்கம் போன்றவற்றைக் குறைக்க 50 செடி நோட்டைக் குறைக்க முயன்று தோல்வியை சந்தித்தனர்.

அந்தச் சமயத்தில் கிராமப்புற மக்கள் பல மையில் நடந்து சென்று வங்கிகளில் பணத்தை மாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். காலக்கெடு முடிந்தும் கணக்குகளில் கோடிக்கணக்கில் செல்லா பணம் இருந்தது.

நைஜீரியா

நைஜீரியா

1984 ஆம் ஆண்டு முகமது புகாரியின் கீழ் ராணுவ ஆட்சியின் போது ஊழலை ஒலிக்கப் பல வண்ணங்களில் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்திக் குறைந்த காலக்கெடுவில் மக்களிடம் வற்புறத்த முயன்று தோல்வியை சந்தித்தனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Countries that tried demonetisation and failed

Countries that tried demonetisation and failed
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X