2018-ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதாரத்தினைப் போன்று மேலும் சில நாடுகளின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள ஜிடிபி எதிர்பார்ப்பு தரவுகளை வைத்து 2018-ம் அண்டு எந்த நாடு பணக்காரர்களாகவும், ஏழையாகவும் இருக்கும் என்ற பட்டியலை தொகுத்து வழங்குகிறோம்.
வியட்நாம்
வேகமான வளர்ந்து வரும் பொருளாதாரம் படைத்த நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் வியட்நாம் உள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் இங்குக் குவிந்து வருத்தால் நாட்டின் பொருளாதாரம் 6.3 சதவீதமாக 2018-ம் ஆண்டு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பர்கினா ஃபேசோ
பொது மக்களின் முதலீடுகள் அதிகரிப்பு மற்றும் சுரங்க துறையில் மறுசீரமைப்பு பொன்ற காரணங்களால் ஆப்ரிக்கா நாடுகளின் பொருளாதாரத்தில் பர்கினா ஃபேசோவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக உயரும் என்று கூறப்படுகிறது.
சீனா
சீனாவிற்கு 2000 போன்று இல்லை ராக்கெட் வேகத்தில் பொருளாதாரத்தின் வளர்ச்சி இருக்காது என்றாலும் 2018-ம் ஆண்டு 6.5 சதவீதமாக உயர வாய்ப்புகள் உள்ளது.
பிலிப்பைன்ஸ்
உள்நாட்டுத் தேவைகள் அதிகம் உள்ளதால் பிலிப்பைன்ஸ் பொருளாதாரம் 2018-ம் ஆண்டு 6.7 சதவீத வளர்ச்சியை எட்டிப்பிடிக்க வாய்ப்புகள் அதிகம்.
கம்போடியா
ஏற்றுமதி உயர்வு, அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகள், கட்டுமானம் போன்றவற்றால் 2018-ம் ஆண்டுக் கம்போடியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக அடுத்த ஆண்டு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தன்சானியா
தன்சானியாவில் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் அதிகரித்து வரும் காரணங்களால் 2018-ம் ஆண்டு 6.9 சதவீத பொருளாதார வளர்ச்சியினை எட்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது.
வங்கதேசம்
நுகர்வோர் தேவை அதிகரிப்பு மற்றும் அதிகமான உள்கட்டமைப்புத் திட்டங்களினால் வங்கதேசத்தின் பொருளாதாரம் 7 சதவீதம் வளர்ச்சி அடைய வாய்ப்புகள் உள்ளன.
இந்தியா
பண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகு சரிந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஜிஎஸ்டி அமலுக்கு வந்த வலுவான நிலையினை நோக்கிப் பயணித்து வருகிறது. அதுமட்டும் இல்லாமல் முதலீடுகள் அதிகரித்திருப்பது மற்றும் நுகர்வர் செலவு செய்வது அதிகரித்துக் காணப்படுவதால் 2018ம் ஆண்டு 7.4 சதவீத வளர்ச்சியினை இந்தியா பெறும் என்று கூறப்படுகிறது.
மியான்மார்
மேற்கத்திய நாடுகள் மியான்மார் அரசு ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தி வரும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தினால் 2018-ம் ஆண்டில் 7.6 சதவீத வளர்ச்சியினைப் பெறும்.
கானா
சுரங்கம் மற்றும் எண்ணெய் துறை இல்லாமல் கானா சேவைத் துறையில் அதிக வளர்ச்சியினைப் பெற்று வருகிறது. அதனால் 2018-ம் ஆண்டு 8.9 சதவீத வளர்ச்சியினைப் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பூட்டான்
தொடர்ந்த ஹட்ரோபவர் திட்டங்களினை செயல்படுத்தி வருவதால் பூட்டானின் ஜிடிபி வளர்ச்சி 2018-ம் ஆண்டு 11.2 சதவீதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தென் ஆப்ரிக்கா
நடப்பு ஆண்டில் தென் ஆப்ரிக்காவின் வளர்ச்சி விகிதம் சரிந்து இருந்தாலும் 2018-ம் ஆண்டு 1.1 சதவீதமாக உயரும் என்கின்றனர்.
ஜப்பான்
கடந்த சில ஆண்டுகளாக ஜப்பானின் பொருளாதாரம் தட்டுத் தடுமாறி வருகிறது. ஆனால் அது அப்படியே தொடராது என்பதால் 0.7 சதவீதம் ஜிடிபி வளர்ச்சி இருக்கும் என்று கூறப்படுகிறது.
தெற்கு சூடான்
பொர், சூறாவளி, பஞ்சம் போன்ற காரணங்களால் தெற்கு சூடானின் பொருளாதாரம் 2018-ம் ஆண்டு 3.4 சதவீதம் சரிவில் இருக்கும் என்றும் இதில் இருந்து வெளியேற 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும் என்றும் கூறுகின்றனர்.
வெனிசுலா
வெனிசுலா தற்போது உள்ள மோசமான சூழலால் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் 6 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications