கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீள முடியாமல் பல நாடுகள் தவித்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் இருக்கும் பல நாடுகள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.
OPEC அமைப்பில் இருக்கும் பெரும்பாலான நாடுகள் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முதலும் முக்கிய வர்த்தகமாகக் கொண்டுள்ளது. கொரோனா காலத்தில் உலக நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் தேவை குறைந்த காரணத்தால் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
நிதி நெருக்கடி அதிகரிப்பு
இதேவேளையில் கச்சா எண்ணெய் விலையும் பெரிய அளவிலான பாதிப்பை அடைந்த காரணத்தால் பெரும்பாலான கச்சா ஏற்றுமதி நாடுகளில் நிதி நெருக்கடி அதிகரித்துள்ளது.
இதில் குவைத் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு நிதி ஆதாரங்கள் முழுமையாக இழந்துள்ளது கடுமையான நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டு உள்ளது.
குவைத்-ன் நிதி பற்றாக்குறை
உலகில் மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றாக விளங்கும் குவைத் அதிகளவிலான நிதி பற்றாக்குறை எதிர்கொண்டு உள்ள காரணத்தால், நிதி தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு இந்நாட்டின் கடைசி லாபகரமான சொத்துக்களைச் சவ்ரின் வெல்த் பண்ட் நிறுவனங்களுக்குப் பணத்திற்காக விற்பனை செய்துள்ளது.
கடன் பெற மறுப்பு
சமீபத்தில் குவைத் நாடாளுமன்றத்தில் நிதி பற்றாக்குறையைத் தீர்க்க கடன் பெற வேண்டும் என நாடாளுமன்றத்தில் எழுந்த விவாதத்தில், கடன் வாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனாலேயே அரசு சொத்துக்களைப் பணத்திற்காக விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது குவைத் அரசு.
குவைத் பொருளாதாரத்தின் மதிப்பு
இதனால் குவைத் பொருளாதாரத்தைப் பின்ச் அமைப்பு எதிர்மறையில் மதிப்பிட்டுள்ளது, இதோடு S&P குளோபல் ரேட்டிங்ஸ் அமைப்பு அடுத்த 6 முதல் 12 மாதத்தில் நிதிப்பற்றாக்குறை குறித்துச் சரியான முடிவை எடுக்காத நிலையில் குவைத்-ன் மதிப்பைக் குறைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை
அதிக நிதி ஆதாரங்களைக் கொண்டு, உலகின் முன்னணி பணக்கார நாடுகளில் ஒன்றாக இருந்த குவைத் கடந்த சில வருடங்களாக கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட தொடர் சரிவின் காரணமாக வருமானம் குறைந்தது. இதேவேளையில் பட்ஜெட்-ல் ஏற்படும் நிதிப்பற்றாக்குறையைப் பூர்த்தி செய்யத் தொடர்ந்து நிதி இருப்பையும், அரசு சொத்துக்களையும் விற்பனை செய்து வந்தது.
600 பில்லியன் டாலர்
இதன் மூலம் கடந்த சில வருடங்களில் குவைத் அரசு சுமார் 600 பில்லியன் டாலர் மதிப்பிலான அரசு சொத்துக்களை விற்பனை செய்து பணமாகப் பெற்று நிதி பற்றாக்குறையைப் பூர்த்தி செய்து இந்நாட்டின் பணப்புழக்கத்தை நிலைநாட்டியுள்ளது குவைத்.
8 வருடங்களாகத் தொடர் சரிவு
கிட்டத்தட்ட 8 வருடங்களாகக் குவைத் கடுமையான நிதிப்பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் முதல் துவங்க உள்ள புதிய நிதியாண்டில் குவைத் அரசு சுமார் 12 பில்லியன் தினார் மதிப்பிலான நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டு உள்ளது, இதை எப்படிச் சமாளிக்கப்போகிறது என்பது தான் தற்போதைய கேள்வி.
முக்கியச் சொத்துக்கள் விற்பனை
சமீபத்தில் குவைத் அரசு நிதி தேவைக்காகக் குவைத் பைனான்ஸ் ஹவுஸ், Zain டெலிகாம் நிறுவனம் ஆகிய நிறுவனங்களின் பங்குகளைப் பல்வேறு சவ்ரின் வெல்த் பண்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்தச் சொத்து விற்பனை குறித்துக் குவைத் நிதியமைச்சகம் எவ்விதமான தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குவைத் பெட்ரோலியம் கார்ப்
இதைத் தொடர்ந்து ஜனவரி மாதத்தில் இந்நாட்டின் முக்கிய நிதி ஆதாரமான குவைத் பெட்ரோலியம் கார்ப் நிறுவனத்தின் பங்குகளைச் சுமார் 2.5 பில்லியன் தினார், அதாவது 8.3 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
குவைத் நாட்டின் முக்கிய ஆதாரமான எண்ணெய் வர்த்தக நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்துள்ளது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குவைத் நாட்டின் வருமானம்
குவைத் நாட்டின் அரசு வருமானம் சுமார் 80 சதவீதம் கச்சா எண்ணெய் உற்பத்தி, விற்பனையில் இருந்து வருகிறது. இந்நிலையில் 2022ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ஏற்பட்டு உள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க வேண்டும் என்றால் குவைத் கச்சா எண்ணெய் 90 டாலருக்கு விற்பனை செய்ய வேண்டும்.
ஆனால் இப்போது வெறும் 58 டாலருக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதேவேளையில் குவைத் அரசின் செலவினங்கள் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் 7 சதவீதம் அதிகரித்துள்ளது கூடுதல் சுமையாக உள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications