முதல் முறையாக உலகப் பணக்காரர்கள் பட்டியியலில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடத்தில் உள்ளது என்றும் தரக்குறீயீட்டு நிறுவனமான கிரெடிட் சூயிஸ் தெரிவித்துள்ளது.
உலகின் முதல் 10 சதவிகித பணக்காரர்களில் சீனாவில் 100 மில்லியன் மக்கள் இருப்பதாகவும், இதே அமெரிக்காவில் 99 மில்லியன் மக்கள் இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதிலும் கடந்த 12 மாதங்களாகவே அமெரிக்கா சீனாவுக்கும் இடையில் மிக சிக்கலான வர்த்தக போர் நடந்து வந்தாலும், இரு நாடுகளும் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மிக கடுமையாக செயல்பட்டு வந்துள்ளன. இந்த வகையில் இந்த இரு நாடுகளும் முறையே 3.8 டிரில்லியன் டாலர் மற்றும் 1.9 டிரில்லியன் டாலர் என பங்களிப்பு செய்துள்ளன என்றும், சுவிஸ் வங்கியின் உலகளாவிய பொருளாதார மற்றும் ஆராய்ச்சித் தலைவரான நானெட் கூறியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் முதல் 10 சதவிகிதம் பேரின் ஒரு பகுதியாக இருக்க அவர்களின் தனிப்பட்ட சேமிப்பானது 1,09,430 டாலர் தேவைப்படுகிறது என்றும், இந்த நிலையில் சீனா அமெரிக்காவை முந்தியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
எனினும் உலகில் மிகப்பெரிய மில்லியனர்களில் 40 சதவிகித பங்கினை கொண்ட அமெரிக்கா, மிகப்பெரிய பணக்காரர்களை கொண்ட வகையில் இன்னும் முன்னிலையில் தான் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
மேலும் அமெரிக்காவில் டாலர் மில்லியனர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 6,75,000 பேர் அதிகரித்து 18.6 மில்லியனாக இருந்தது என்றும், இதில் 14 பெரியவர்களில் ஒருவர் மில்லியனர் என்றும் கூறப்படுகிறது.
இதே சீனாவில் 4.4 மில்லியன் மில்லியனர்கள் கடந்த 2018ல் இருந்ததாகவும், இது உலகளாவிய அலவில் 10 சதவிகிதம் இருந்ததாகவும், இதே சீனாவில் 1.1 பில்லியன் பெரியவர்கள் இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதே பிரெக்ஸிட் ஒப்பந்த பிரச்சனையால் இங்கிலாந்து மில்லியனர்களின் எண்ணிக்கை 27,000 பேர் குறைந்து, 2.46 மில்லியனாக குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. .
இந்த பணக்காரர்கள் பட்டியியலில் அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பானுக்கு அடுத்தபடியாக, 3 மில்லியன் மில்லியனர்களுடன் இங்கிலாந்து தான் உள்ளது என்றும், இது உலக மொத்தத்தில் 5 சதவிகிதம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் கிரெடிட் சூயிஸ் கணித்துள்ள அறிக்கையில் படி, உலகளாவிய மொத்த செல்வம், கடந்த ஆண்டை விட 2.6 சதவிகிதம் தற்போது அதிகரித்துள்ளது என்றும். இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 27 சதவிகிதம் உயர்ந்து 2024க்குள் 459 டிரில்லியன் டாலாராக அதிகரிக்கும் என்றும், இந்த சமயத்தில் மில்லியனர்களின் எண்ணிக்கை 63 மில்லியனாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications