எண்ணெய் ஜாம்பவான்களின் அதிரடி முடிவு.. சரிவினைக் கண்ட கச்சா எண்ணெய் விலை.. பெட்ரோல் டீசல் குறையுமா?

இன்று சர்வதேச அளவில் கொரோனாவிற்கு அடுத்ததாக, மிக பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று கச்சா எண்ணெய் விலை தான்.

ஏற்கனவே கச்சா எண்ணெய் அதிகளவில் இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாடுகளில் பெட்ரோல், டீசல் விலையானது வரலாறு காணாத உச்சத்தினை தொட்டுள்ளது.

இந்தியாவில் பல நகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயினை தாண்டி விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது. இதன் விலை குறையவே குறையாதா? என்ற கேள்விகளுக்கு மத்தியில், அதற்கெல்லாம் இப்போதைக்கு வாய்ப்பே இல்லை என்பது போல செய்திகள் வெளியாகி வருகின்றன. ஏனெனில் தேவை அதிகரித்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றது.

விலை குறையுமா?

விலை குறையுமா?

இதற்கிடையில் பெட்ரோல், டீசல் விலை குறைவு என்பது இப்போதைக்கு குறையுமா? என்பது பெரும் கேள்குறியாகவே உள்ளது. இந்தியாவினை பொறுத்தவரையில் பெரும் அளவிலான எண்ணெய் அண்டை நாடுகளிடம் இருந்தே, இறக்குமதி செய்யப்படும் நிலையில், அண்டை நாடுகளின் எதிரொலி இந்தியாவிலும் உள்ளது.

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை

இதே தற்போது சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையும், பெரியளவிலான ஏற்றத்திற்கு பிறகு பெரும் சரிவினைக் கண்டுள்ளது. எப்படியிருப்பினும் தற்போது சற்று அதிகரித்து தான் காணப்படுகிறது. தற்போது மட்டும் பேரலுக்கு 0.85% அதிகரித்து, 75.16 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வில் அதிகபட்சமாக 77.26 டாலர்கள் வரையில் சென்று, முடிவில் 74.53 டாலர்களாக முடிவுற்றது.

WTI கச்சா எண்ணெய் விலை

WTI கச்சா எண்ணெய் விலை

WTI கச்சா எண்ணெய் விலையானது தற்போது பேரலுக்கு 1.05% அதிகரித்து, 74.15 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வில் அதிகபட்சமாக 76.98 டாலர்கள் வரையில் சென்ற நிலையில், தற்போது 74.15 டாலர்களாக காணப்படுகிறது. இது தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் தேவையின் காரணமாக இன்னும் அதிகரிக்கும் விதமாக காணப்படுகிறது.

திடீர் ஏற்றம் ஏன்?

திடீர் ஏற்றம் ஏன்?

கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடியான மாற்றத்திற்கு என்ன காரணம்? ஓபெக் நாடுகள் நடக்கவிருந்த கூட்டத்தினை ரத்து செய்த நிலையில், இந்த விலையானது பெரியளவில் சரிவினைக் கண்டுள்ளது. அதெல்லாம் சரி எதற்காக இந்தளவுக்கு மோசமான ஏற்றத்தினைக் கண்டது. பின் ஏன் சரிந்தது. இது எண்ணெய் சப்ளையை அதிகரிப்பதற்காக திட்டமிடப்பட்டு, ஒப்பந்தம் செய்யவிருந்த நிலையில், இது ரத்து செய்யப்பட்டுள்ளது.

பேச்சு வார்த்தை தோல்வி

பேச்சு வார்த்தை தோல்வி

மேலும் ரஷ்யா உள்ளிட்ட எண்ணெய் ஜாம்பவான்கள், மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான சவுதி அரேபியாவுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸூக்கும் இடையிலான பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்ததையடுத்து, பேச்சு வார்த்தைகளை கைவிட்டனர். ஆரம்பத்திலேயே இந்த பேச்சு வார்த்தை முடிந்ததையடுத்து, எண்ணெய் விலையானது வெகு வேகமாக அதிகரித்தது.

ஏற்றுமதியை அதிகரிக்கலாம்

ஏற்றுமதியை அதிகரிக்கலாம்

ஆனால் அதன் பிறகு சில தேசிய உற்பத்தியாளர்கள் அதிகளவில் எண்ணெய் ஏற்றுமதி செய்யத் தொடங்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் இது குறித்து வர்த்தகர்கள் கவனம் செலுத்த தொடங்கியுள்ள நிலையில் தான், எண்ணெய் விலை மீண்டும் குறைந்துள்ளது. இதனால் தான் கச்சா எண்ணெய் விலையானது அதிரடியாக ஏற்றம் கண்டு, பின்னர், சரிவினைக் கண்டது.

எம்சிஎக்ஸ் கச்சா எண்ணெய் விலை

எம்சிஎக்ஸ் கச்சா எண்ணெய் விலை

சர்வதேச சந்தைகளின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிகரித்து வருகின்றது. தற்போது பேரலுக்கு 36 ரூபாய் அதிகரித்து, 5,533 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வில் அதிகபட்சமாக 5,733 ரூபாயாக அதிகரித்தது, எனினும் முடிவில் 5497 ரூபாயாக முடிவுற்றது.

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

டெல்லியில் பெட்ரோல் விலை - ரூ.100.21

சென்னையில் பெட்ரோல் விலை - ரூ.101.06
மும்பையில் பெட்ரோல் விலை - ரூ.106.25
பெங்களூருவில் பெட்ரோல் விலை - ரூ.103.56
ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை - ரூ.104.14

டெல்லியில் டீசல் விலை - ரூ.89.53
சென்னையில் டீசல் விலை - ரூ.94.06
மும்பையில் டீசல் விலை - ரூ.97.09
பெங்களூருவில் டீசல் விலை - ரூ.94.89
ஹைதராபாத்தில் டீசல் விலை - ரூ.97.58

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

சர்வதேச அளவில் கொரோனாவின் பாதிப்புகள் குறையத் தொடங்கியுள்ள நிலையில், பயன்பாடும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுவும் தேவை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதனால் விலையானது இன்னும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் சாமானிய மக்களின் கோரிக்கை பெட்ரோல் டீசல் மீதான வரி விகிதங்களை குறைக்க வேண்டும் என்பது தான்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+