அமெரிக்காவில் இவ்வளவு எண்ணெய் இருப்பா? ஆல் டைம் ஹை பக்கத்திலா.. அப்படின்னா பெட்ரோல் டீசல் விலை?

சிங்கப்பூர்: கொரோனா வைரஸ் உலக அளவில் ருத்ர தாண்டவம் எடுத்து ஆடி வரும் நிலையில், நுகர்வோர் பொருட்களின் உபயோகமானது தொடர்ந்து குறைந்து வருகிறது.

அதிலும் உலகம் முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில் எரிபொருள் உபயோகமும் வெகுவாக குறைந்துள்ளது.

இதன் எதிரொலி உலகம் முழுக்க எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் எண்ணெய் உற்பத்தி நாடுகளில் எண்ணெய் இருப்பானது வரலாறு காணாத அளவு உயர்ந்து வருகிறது.

எண்ணெய் வைக்க இடமில்லாமல் போகலாம்

எண்ணெய் வைக்க இடமில்லாமல் போகலாம்

அதிலும் கடந்த மாதம் வெளியான அறிக்கை ஒன்றில், உலகில் கச்சா எண்ணெய் இருப்பு வைக்க இடமில்லாமல் போகலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் உலகளாவிய எண்ணெய் சேமிப்பானது விரைவாக நிரப்படுவதற்கான அறிகுறிகளால் கச்சா எண்ணெய் விலையானது சரிந்து வருகிறது.

உற்பத்தி குறைப்பு

உற்பத்தி குறைப்பு

கச்சா எண்ணெய் தேவையானது கொரோனாவினால் வீழ்ச்சியடைவதைப் குறைக்க, உற்பத்தி குறைப்பை கையில் எடுத்துள்ளன உற்பத்தி நாடுகள். ஆனால் அது மிக வேகமாக விலையை அதிகரிக்க பயன்படுமா என்றும் தெரியவில்லை என்ற கவலை உற்பத்தியாளார்கள் மத்தியில் நிலவி வருகிறது.

எண்ணெய் இருப்பு

எண்ணெய் இருப்பு

கச்சா எண்ணெய் இருப்பானது தொடர்ந்து அதிகரித்து வருவம் நிலையில், விலையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 17 அன்று முடிவடைந்த வாரத்தில் கச்சா எண்ணெய் இருப்பான 518.6 மில்லியன் பேரல்களாக இருந்துள்ளது. இதுவே கடந்த 2017ல் 535 மில்லியன் பேரல்களாக இருந்துள்ளது. அதே நேரம் மிதக்கும் கச்சா எண்ணெய் சேமிப்பானது எப்போதும் இல்லாத அளவுக்கு 160 மில்லியன் பேரலை எட்டியுள்ளது.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

இந்த நிலையில் டபள்யூடிஐ கச்சா எண்ணெய் விலையானது தற்போது (11.20 மணியளவில்) 11.69% வீழ்ச்சி கண்டுள்ளது. இதே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது 3.59% வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகரித்து வரும் எண்ணெய் இருப்பு, குறைந்து வரும் நுகர்வு இதுபோன்ற மோசமான நிலையில் எண்ணெய் விலையானது தொடர்ந்து விலை குறைந்து வருகிறது.

பெட்ரோல் டீசல் விலை குறையவில்லையே

பெட்ரோல் டீசல் விலை குறையவில்லையே

அடுத்து வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் எண்ணெய் உற்பத்தியை 9.7 மில்லியன் பேரல்களை குறைக்க ஒபெக் நாடுகள் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், இடு விலையேற்றத்துக்கு வழிவகுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எப்படி எனினும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையவில்லையே..

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+