உலக நாடுகள் அனைத்து கிரிப்டோ முதலீட்டின் மீது அதிகப்படியான வரி விதித்து வரும் வேளையில், பல முன்னணி கிரிப்டோகரன்சிகளின் தடாலடி சரிவு, FTX நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்ட பின்பு ஒட்டுமொத்த கிரிப்டோ சந்தையும் பதற்றமான சூழ்நிலையில் உள்ளது.
இதேவேளையில் சீனா, இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா உட்பட உலகின் முன்னணி பொருளாதார நாடுகள் அனைத்தும் டிஜிட்டல் நாணயங்கள் அறிமுகம் செய்யும் பணியில் இருக்கும் காரணத்தால் கிரிப்டோகரன்சியின் அவசியம் நாளுக்கு நாள் குறையும் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் உலகின் முன்னணி கிரிப்டோ கரன்சி எக்ஸ்சேஞ்ச் தளங்கள் அடுத்தடுத்து பெரும் நெருக்கடியில் சிக்கி வருவது மட்டும் அல்லாமல் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் துவங்கியுள்ளது.
Coinbase நிறுவனம்
உலகின் முன்னணி கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளங்களில் ஒன்றாக இருக்கும் Coinbase Global இன்க் நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டு உள்ள அறிக்கையில் நிறுவனத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஊழியர்கள் பணிநீக்க திட்டத்தைக் கையில் எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
950 ஊழியர்கள் பணிநீக்கம்
காயின்பேஸ் நிறுவனம் அதன் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 950 ஊழியர்களை இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் காயின்பேஸ் நிறுவனம் மூன்றாவது முறையாகப் பணிநீக்கம் செய்கிறது.
அமெரிக்கா
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் காயின்பேஸ் குளோபல் இன்க் நிறுவனம் அமெரிக்கப் பங்குச்சந்தையிலும் உள்ளது. காயின்பேஸ் பங்குகள் அமெரிக்கப் பங்குச்சந்தையின் இன்றைய ப்ரீமார்க்கெட் வர்த்தகத்தில் 3.3% உயர்ந்து 39.53 டாலராக உள்ளது.
3வது பணிநீக்க சுற்று
Coinbase நிறுவனம் இந்த 3வது பணிநீக்க சுற்று அடங்கிய மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் மொத்த செலவுகளில் 149 மில்லியன் டாலர் முதல் 163 மில்லியன் டாலர் வரையிலான செலவுகளைச் சேமிக்கும் எனக் கணித்துள்ளது.
வட்டி விகித பாதிப்பு
உலக நாடுகளில் அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் மற்றும் பொருளாதார வீழ்ச்சி பாதிப்புக் காரணமாகக் கடந்த ஆண்டுக் கிரிப்டோ சந்தையின் மதிப்பு ஒரு டிரில்லியன் டாலர்களுக்கு மேல் சரிந்துள்ளது. இதில் சிறிய, பெரிய, பிரபலமான, பிரபலம் இல்லாத கிரிப்டோ என எவ்விதமான வித்தியாசமும் இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளது.
2 நிறுவனம் மூடல்
இந்தச் சரிவின் எதிரொலியாக த்ரீ அரோஸ் கேபிடல் மற்றும் செல்சியஸ் நெட்வொர்க் போன்ற முக்கிய நிறுவனங்கள் தனது வர்த்தகத்தை மொத்தமாக மூட வேண்டிய கட்டாயம் உருவானது. இதற்கிடையில் தான் பல மாதமாக முதலீட்டாளர்களை ஏமாற்றி வந்த FTX நிறுவனம் திவாலானது.
FTX வீழ்ச்சி
உலகின் 2வது பெரிய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளமாக விளங்கிய FTX நவம்பர் மாதம் திவாலானதில் இருந்து கிரிப்டோ சந்தைக்குப் பெரும் அடி விழுந்தது என்றால் மிகையில்லை, FTX வீழ்ச்சியைத் தொடர்ந்து முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்க அரசு கண்காணிப்பு
இதுமட்டுமா அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் அனைத்து கிரிப்டோ தளத்தையும் அந்நாட்டின் ஒழுங்குமுறை ஆணையம் தீவிரமாக ஆய்வு செய்யத் துவங்கியுள்ளது. குறிப்பாக முதலீட்டாளர்கள் பணத்தை எப்படியெல்லாம் ஒரு கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிர்வாகம் செய்கிறது என்ற கண்காணித்து வருகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications