அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனப் பொருட்களுக்கு 100% கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்ததை அடுத்து, கிரிப்டோ சந்தை வீழ்ச்சியடைந்தது. இதனால் 1.6 மில்லியனுக்கும் அதிகமான வர்த்தகர்கள் 19 பில்லியனுக்கும் அதிகமான டாலர்களை இழந்துள்ளனர். இது, கிரிப்டோ வரலாற்றில் மிக மோசமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
Coinglass நிறுவனத்தின் 24 மணிநேர தரவுகளின்படி, “கிரிப்டோ வரலாற்றில் மிகப்பெரிய சரிவாக ” இது பதிவாகியுள்ளது. இதில், 1.6 மில்லியனுக்கும் அதிகமான வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் 10 அன்று, ஒரு மணி நேரத்திற்கும் குறைவான வர்த்தகத்தில், 7 பில்லியனுக்கும் அதிகமான டாலர் மதிப்பிலான கிரிப்டோ சொத்துக்கள் விற்கப்பட்டுள்ளன.

Multicoin Capital நிறுவனத்தின் தலைமை வர்த்தகர் பிரையன் ஸ்ட்ருகட்ஸ் கூறுகையில், சந்தை முழுவதும் பரவக்கூடிய அச்சம் காரணமாக, மொத்த கிரிப்டோ விற்பனை 30 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளார்.
CoinMarketCap தரவுகளின்படி, கிரிப்டோகரன்சி சந்தை மதிப்பு, முந்தைய நாள் இருந்த 4.30 டிரில்லியன் டாலரிலிருந்து 3.74 டிரில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. சந்தை முடிவடைந்த நேரத்தில், வர்த்தக அளவு 490.23 பில்லியன் டாலராகப் பதிவாகியுள்ளது.
கிரிப்டோகரன்சிகளில், உலகின் மிகப்பெரிய நாணயமான பிட்காயின், 59.8% சந்தைப் பங்கையும், இரண்டாம் இடத்தில் உள்ள எத்தேரியம் 12.2% பங்கையும் கொண்டிருந்தன. மீதமுள்ள டோக்கன்கள் 27.9% பங்கைப் பெற்றன.
அக்டோபர் 11 அன்று மதியம் 12.42 மணியளவில், பிட்காயின் 8.05% சரிந்து 1,11,542.91 டாலராக இருந்தது. இதன் சந்தை மதிப்பு 2.22 டிரில்லியன் டாலராகவும், வர்த்தக அளவு 183.88 பில்லியன் டாலராகவும் உயர்ந்தது. இது விற்பனை அதிகரித்ததைக் காட்டுகிறது.
எத்தேரியம் 12.71% குறைந்து 3,778.31 டாலராக இருந்தது. அதன் சந்தை மதிப்பு 456.05 பில்லியன் டாலராகவும், கடந்த 24 மணி நேரத்தில் வர்த்தக அளவு 148.68% அதிகரித்து 112.75 பில்லியன் டாலராகவும் இருந்தது.
Orbit Markets இணை நிறுவனர் கரோலின் மௌரோன், பிட்காயினின் அடுத்த முக்கிய ஆதரவு நிலை 1,00,000 டாலராகும் என்று குறிப்பிட்டார். இந்த அளவை மீறி சரிந்தால், பிட்காயினின் மூன்று வருட ஏற்றச் சுழற்சியின் முடிவைக் குறிக்கும் என்றும் அவர் கூறினார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications