15% வீழ்ச்சி கண்ட ஷிபா இனு.. பிட்காயின், எத்திரியமும் சற்று வீழ்ச்சி..!

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று கிரிப்டோகரன்சிகளின் மதிப்பானது, இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது.

ஒரு புறம் கிரிப்டோகரன்சிகள் மீதான ஆதரவுகள் அதிகரித்து வந்தாலும், மறுபுறம் கிரிப்டோவுக்கு எதிரான எச்சரிக்கைகளும் வந்து கொண்டு தான் உள்ளது. அமெரிக்காவின் தொழில்நுட்ப நிபுணர் எட்வர்ட் ஸ்னோடென், ஷிபா இனுவில் முதலீடு செய்வதற்கு எதிராக மக்களை எச்சரித்துள்ள நிலையில், ஷிபா இனுவின் மதிப்பானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.

இன்று பிட்காயின், எத்திரியம் உள்ளிட்ட பல முக்கிய கரன்சிகளின் மதிப்பும் சரிவில் காணப்படுகின்றது. இது கடந்த அக்டோபர் மாதத்தில் வரலாற்று உச்சமான 67,000 டாலர்களை தொட்ட பின்னர், அதன் சந்தை மதிப்பும் உச்சத்தில் காணப்படுகின்றது. இந்த நிலையில் இந்த டிஜிட்டல் நாணயத்தில் மதிப்பு ஆனது நடப்பு ஆண்டில் இதுவரையில் 114% ஏற்றத்தில் காணப்படுகின்றது.

பிட்காயின் நிலவரம்

பிட்காயின் நிலவரம்

பிட்காயின் மதிப்பானது சற்று குறைந்து, 62,405.47 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 62,653.44 டாலர்களாகும். இதே இதன் குறைந்தபட்ச விலை 60,775.27 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 114.18% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

எத்திரியம் மதிப்பு

எத்திரியம் மதிப்பு

இதே எத்தரியத்தின் மதிப்பானது தற்போது சற்று அதிகரித்து, 4,555.45 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 4,585.19 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 4,423.94 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 514.09% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

கார்டானோ நிலவரம்

கார்டானோ நிலவரம்

கார்டானோ மதிப்பானது 1% குறைந்து, 2.01 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 2.05 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 1.94 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெரியளவில் மாற்றம் காணவில்லை. இதன் புதிய வரலாற்று உச்சம் 3.10 டாலர்களாகும்.

எக்ஸ்ஆர்பி நிலவரம்

எக்ஸ்ஆர்பி நிலவரம்

எக்ஸ்ஆர்பி-யின் மதிப்பானது 1.86% குறைந்து, 1.20 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1.23 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 1.16 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 3.40 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 438.10% ஏற்றம் கண்டுள்ளது.

ஸ்டெல்லர் மதிப்பு

ஸ்டெல்லர் மதிப்பு

ஸ்டெல்லர் மதிப்பானது 2.28% குறைந்து, 0.373559 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.39 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.37 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 0.797482 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 190.80% ஏற்றம் கண்டுள்ளது.

டோஜ்காயின் தற்போதைய நிலவரம்

டோஜ்காயின் தற்போதைய நிலவரம்

டோஜ்காயின் மதிப்பானது 1.65% குறைந்து, 0.262680 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.27 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.25 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 5,410.10% சரிவினைக் கண்டுள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 0.740796 டாலராகும்.

யுனிஸ்வாப் மதிப்பு

யுனிஸ்வாப் மதிப்பு

யுனிஸ்வாப் மதிப்பானது 5.01% குறைந்து, 25.54 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 26.94 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 25.2 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 514.41% லாபத்தில் தான் உள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 45.01 டாலராகும்.

போல்கடோட் நிலவரம் என்ன?

போல்கடோட் நிலவரம் என்ன?

போல்கடோட் மதிப்பானது தற்போது 0.54% குறைந்து, 53.07 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 55.11 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 52.32 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 624.47% லாபத்தில் தான் உள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 55.11 டாலராகும்.

லைட்காயின் நிலவரம்

லைட்காயின் நிலவரம்

லைட்காயின் மதிப்பானது தற்போது 0.40% குறைந்து, 201.93 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 205.41 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 196.59 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 60.65% லாபத்தில் தான் உள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 413.47 டாலராகும்.

ஷிபா இனு நிலவரம்

ஷிபா இனு நிலவரம்

ஷிபா இனு மதிப்பானது தற்போது 15.99% சரிந்து, 0.000048 டாலராக காணப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 62.65% சரிவில் தான் உள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 0.000089 டாலராகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+