லண்டன்: பிரிட்டன் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அந்நாட்டு அரசு முக்கிய முடிவுகளை எடுக்க உள்ள நிலையில், பிரதமர் டேவிட் கேமரூன் உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபாவின் தலைவர் ஜேக் மா அவர்களைப் பிரிட்டன் நாட்டின் வர்த்தக ஆலோசகராக நியமித்துள்ளார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங், 4 நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து செல்ல உள்ள நிலையில் பிரிட்டன் அதிபரிடம் இத்தகை அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டேவிட் கேமரூன்
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் அவர்களின் செய்திதொடர்பாளர் கூறுகையில், அலிபாபா என்னும் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் தலைவரான ஜேக் மா பிரதமரின் வர்த்தக ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இவர் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை வடிவமைப்பதிலும், ஆலோசனையிலும் இடம்பெறுவார் எனத் தெரிவித்தார்.
சீன சந்தை
பிரிட்டன் நிறுவனங்களின் தயாரிப்புகள் அலிபாபா போன்ற ஈகாமர்ஸ் நிறுவனங்களின் மூலம் சீனா சந்தையில் எளிதாகத் தங்களது வர்த்தகத்தை மேற்கொள்கிறது. இதனால் நாட்டின் ஏற்றுமதி அளவு கணிசமாக உயர்ந்துள்ளது எனப் பிரதமரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
வர்த்தக ஆலோசக குழு
இங்கிலாந்து பிரதமரின் வர்த்தக ஆலோசக குழுவில், அந்நாட்டின் முன்னணி நிறுவனங்களான ரோல்ஸ் ராய்ஸ், ஈஸிஜெட் உள்ளிட்ட 19 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஜேக் மா அவர்களும் தற்போது இடம்பெற்றுள்ளார்.
சீனா - பிரிட்டன் நட்புறவு..
உலகின் 2 ஆவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாகக் கருதப்படும் சீனாவுடன், பொருளாதார ரீதியில் நட்புறவை பேண இங்கிலாந்து முடிவு செய்துள்ளதாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications