நடப்பு ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது டேவிட் கார்டு, ஜோஷ்வா ஆங்ரிஸ்ட் மற்றும் கியூட்டோ இம்பென்ஸ் ஆகிய மூவருக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
யார் இவர்கள்? எதற்காக இவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது வாருங்கள் பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட 6 முக்கிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் கடந்த அக்டோபர் 04, 2021 முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கார்டு, ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட், கியூட்டோ இம்பென்ஸ் ஆகிய மூன்று பேருக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் பொருளாதாரம் குறித்த பங்களிப்பிற்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இதில் நோபல் பரிசின் ஒரு பகுதியை டேவிட் கார்டுக்கும், மறு பாதியை ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட், கியூட்டோ இம்பென்ஸ் இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
டேவிட் கார்டு பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியை சேர்ந்தவர். இதே கியூட்டோ இம்பென்ஸ் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தினை சேர்ந்தவர்.
இவர்களில் டேவிட் கார்டு ஒரு கனேடியன். ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட் அமெரிக்க குடிமகன். இதே கியூட்டோ இம்பென்ஸ் டச்சு நாட்டினை சேர்ந்தவர்.
கடந்த 2020ம் ஆண்டில் பால் மில்க்ரோம் & ராபர்ட் வில்சனுக்கும், 2019ம் ஆண்டில் அபுஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் கிரெமருக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினை பெற்றனர்.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினை இதுவரையில் அமெரிக்காவினை சேர்ந்த 57 பேருக்கும், லண்டனில் 9 பேருக்கும், பிரான்சினை சேர்ந்த 4 பேருக்கும், கனடா, நார்வே, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தலா 3 பேருக்கும், நெதர்லாந்து, ஸ்வீடன், இஸ்ரேல், இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 2 பேருக்கும் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications