அமெரிக்கா ஈரான் மீது பெரும் தாக்குதலை நடத்த தயாராகி வரும் வேளையில் மறுமுனையில் உக்ரைன் தொடர்ந்து ரஷ்யா மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இரு நாடுகள் மத்தியில் எனர்ஜி சீஸ்ஃபையர் டிரம்ப் அறிவித்த நிலையிலும் இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
இதேவேளையில் அமெரிக்கா ரஷ்யாவில் இருந்து வரும் கச்சா எண்ணெய் மட்டுமே நம்பியிருக்கும் வேளையில் இன்று உக்ரைன் ராணுவம் திட்டமிட்டு ரஷ்யாவில் இருக்கும் முக்கிய சுத்திகரிப்பு ஆலையைக் குறிவைத்துத் தாக்கியுள்ளது.

உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் Novokuibyshevsk கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது இன்று தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே உக்ரைன் ராணுவம் 20க்கும் அதிகமான சுத்திகரிப்பு ஆலையைத் தாக்கி ரஷ்யாவின் சுத்திகரிப்பு திறனைப் 25 சதவீதம் வரையில் குறைந்துள்ள வேளையில் இன்றைய தாக்குதலை கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கணிக்கப்பட்டு உள்ளது.
இன்றைய தாக்குதலில் Novokuibyshevsk கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தீப்பற்றி எரிந்ததுடன், பல கிலோமீட்டர் தொலைவுக்குக் கரும்புகை சூழ்ந்து ரஷ்ய மக்களின் பகல் நேரத்தையா இரவாக மாற்றியுள்ளது உக்ரைன் ராணுவம்.
அமெரிக்கா - ரஷ்யா மத்தியிலான பேச்சுவார்த்தைக்குப் பின்பு உக்ரைன் எனர்ஜி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தாவிட்டாலும் டேட்டா சென்டர் உட்பட பல முக்கிய கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனால் அக்டோபர் 18ஆம் தேதியன்று ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் எண்ணெய் துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, இன்று தான் ரஷ்யாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
சமீபத்தில் உக்ரைன் ராணுவத்திற்கு அளிக்கப்பட்டு வந்த அமெரிக்காவின் ஸ்டார்லிங்க இணையச் சேவையின் வேகம் குறைக்கப்பட்ட நிலையில், பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்பு இணையத்தின் வேகம் அதிகரிக்கப்பட்டது. இந்த இணையச் சேவை தான் உக்ரைன் ராணுவத்திற்கு இலக்கை டார்கெட் செய்து துல்லியமாக்கத் தாக்குவதற்கு உதவியது.
இதனால் 2 வாரங்களாக ரஷ்யாவின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தால் உக்ரைன் தற்போது மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இத்தாக்குதல் மூலம் அமெரிக்காவுக்கான டீசல் சப்ளை குறையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அமெரிக்காவில் மிட்டேர்ம் தேர்தல் நடக்கும் வேளையில் உக்ரைன் திட்டமிட்டு இத்தாக்குதலைத் துவங்கியுள்ளது.
இதேவேலையில் ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ரோஸ்நெப்ட், உக்ரைன் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் காரணத்தால் பெரும்பாலான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்யும் பணிகளை நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இது மட்டும் அல்லாமல் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்வதற்கான செலவுகள் அதிகரித்துள்ளதால், பொருளாதார ரீதியாகவும் பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications

