அமெரிக்கா: மென்பொருள், கணினி தயாரிக்கும் நிறுவனமான டெல் அன்மையில் ஈஎம்சி கார்ப் என்ற நிறுவனத்தை முழுமையாக புதன்கிழமை கைப்பற்றியுள்ளது.
டெல் நிறுவன கம்ப்யூட்டர்களுக்கான தேவை சந்தையில் பெருகி வரும் இந்த சூழலில், ஈஎம்சி போன்ற தகவல் சேகரிப்பு நிறுவனம் உடனிருப்பது வளர்ச்சிக்கு உதவும் என்பதால் இந்த வர்த்தகத்தில் டெல் ஆர்வம் காட்டியது.
ஈஎம்சி கார்ப் நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து 2,000 முதல் 3,000 நபர்கள் வரை டெல் நிறுவனம் பணி நீக்கம் செய்யலாம் என்று ப்ளூம்பெர்க் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப உலகில் அதிரடி டீல்: ஈஎம்சியை 67 பில்லியன் டாலருக்கு வாங்கும் டெல்! இதில் பெரும்பான்மையான பணி நீக்கம் அமெரிக்காவில் நடக்கும் என்றும் மேற்கோள்காட்டிச் சென்ற வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை ப்ளூம்பெர்க் வெளியிட்டிருந்தது. இந்தப் பணி நீக்கம் பெரும்பாலும் சப்ளை செயின், மார்க்கெட்டிங் மற்றும் பொது நிர்வாகம் போன்ற பிரிவுகளில் ஏற்படும் என்றும் இந்நிறுவனத்தில் இப்போது 140,000 பணியாளர்கள் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த இரு நிறுவனங்கள் இணைந்துள்ள நிலையில் ஏற்பட இருக்கும் செலவுகளை குறைக்க நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது இதனால் சில ஊழியர்கள் குறைப்பு இருக்கும் என டெல் செய்தி தொடர்பாளர் டேவ் ஃபார்மர் கூறினார். இதைப் பார்க்கையில் இவர் பணி நீக்கத்தை உறுதி செய்வது போலவே தெரிகிறது. சென்ற வருடம் அக்டோபர் மாதம் ஈஎம்சி நிறுவனத்தை 67 பில்லியன் டாலருக்கு விலை கொடுத்த வாங்க டெல் நிறுவனம் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இதேப் போன்று இந்தியாவிலும் மைக்ரோசாஃப்ட், ஐபிஎம், பிளிகார்ட், ஓலா போன்ற நிறுவனங்கள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
பணி நீக்கம்
அமெரிக்கா
பணி நீக்கம் அதிகம் இருக்கும் பிரிவுகள்
செலவுகளைக் குறைக்க நிர்வாகம் முடிவு
ஈஎம்சி நிறுவனம்


Click it and Unblock the Notifications