வேலைக்கு போகலன்னாலும்.. மாசம் ரூ.1.4 லட்சம் வாங்கிக்கலாம்..!

என்னயா, தீவிரவாதிக்கு எதுனா ஆள் எடுக்குறாய்ங்களா இல்ல மருத்துவ பரிசோதனையா..? என்ன இவ்வளவு பணம் தர்றேன்னு சொல்றாய்ங்களே...? என குழம்பிக் கொள்ள வேண்டாம்.

இது தான் ஒரு நாட்டின் நடைமுறை. அந்த நாட்டு மக்கள் ஸ்ட்ரெஸ்ஸாக இருந்தால் மேலே சொன்னது போல மாதாமாதம் கையில் காசைக் கொடுத்து வேலையை விட்டு நிற்கச் சொல்லி விடுவார்களாம்.

அருமையான ஐடியாவா இருக்கே... எந்த நாடுயா இது..? இது போல வேறு என்ன திட்டங்கள் எல்லாம் வைத்திருக்கிறார்கள்..? மேற்கொண்டு படிங்க, மிரண்டே போயிருவீங்க.

நாடு

நாடு

கடந்த 2012-ம் ஆண்டு முதல், உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகள் பட்டியலை தயாரிக்க, ஒரு நிபுணர் குழு, உலகில் இருக்கும் 156 நாடுகளுக்கு பயணித்து, அந்த நாட்டு மக்களைச் சந்தித்துப் பேசி, பல விவரங்களைச் சேகரிக்கிறார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என அளவிட்டு ஒரு பட்டியலைத் தயார் செய்கிறார்கள். அது தான் உலக மகிழ்ச்சிக் குறியீடு (World Happiness Index)

2019-ல்

2019-ல்

கடந்த 2019-ம் ஆண்டுக்கான World Happiness Index Report-ஐ நிபுணர்கள் குழு வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த முறையும் ஃபின்லாந்து முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது. ஃபின்லாந்து இந்த பட்டியலில் முதலிடம் பிடிப்பது இது இரண்டாவது முறை. கடந்த 2018-ம் ஆண்டும் ஃபின்லாந்து தான் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தான்

இவர்கள் தான்

பொதுவாக, இந்த உலக மகிழ்ச்சி குறியீட்டுப் பட்டியலில் நார்டிக் தேசங்கள் (வட ஐரோப்பா மற்றும் வட அட்லாண்டிக் நாடுகள்) தான் டாப் இடங்களைப் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். உலக வல்லரசாக சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவே 18 அல்லது 19-வது இடத்தில் தான் இருக்கிறதாம்.

கடந்த ஆண்டுகள்

கடந்த ஆண்டுகள்

2018 & 2019-ம் ஆண்டுகளில் ஃபின்லாந்து,
2017-ம் ஆண்டில் நார்வே,
2013 & 2016-ல் டென்மார்க்,
2015-ல் ஸ்விட்சர்லாந்து என இந்த நார்டிக் தேசங்கள் தான், உலக மகிழ்ச்சிக் குறியீட்டுப் பட்டியலில், அசால்டாக டாப் இடங்களைப் பிடித்துக் கொண்டு இருக்கின்றனவாம். இவைகள் தான் நார்டிக் நாடுகள்.

என்ன காரணங்கள்

என்ன காரணங்கள்

எப்போதும் இந்த நார்டிக் நாடுகள், உலகிலேயே மகிழ்ச்சியான நாட்டு மக்களாக இருக்க என்ன காரணம்..? என தேடிப் போனால்... அவர்களின் வேலை மற்றும் வாழ்க்கை சமநிலை தான் முதல் காரணமாகச் சொல்கிறார்கள். அப்படி என்ன சமநிலையாக வாழ்ந்து விடுகிறார்கள்..? அதையும் பார்ப்போம்.

வேலை நேரம்

வேலை நேரம்

இந்த நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, பெரிய பணக்காரர்கள் ஆக வேண்டும் என்கிற ஆசை எல்லாம் அதிகம் கிடையாதாம். எனவே எப்போதும் ஓவர் டைம் பார்க்கவே மாட்டார்களாம். ஒரு சராசரி டென்மார்க் பிரஜை ஒரு வாரத்துக்கு 37 மணி நேரம் மட்டும் தான் வேலை பார்ப்பாராம். நார்டிக் நாடுகளில் ஓவர் டைம் பார்ப்பவர்களை திறமையற்றவர்கள் போலப் பார்ப்பார்களாம்.

நோ பிரேக்

நோ பிரேக்

டென்மார்க்கில், நாள் ஒன்றுக்கு சராசரியாக 7.5 மணி நேரம் மட்டுமே வேலை பார்ப்பார்களாம். ஆனால் அந்த வேலை நேரத்துக்கு இடையில் வெளியே செல்வது நீண்ட நேரத்துக்கு பிரேக் எடுப்பது எல்லாம் செய்யமாட்டார்களாம். குறிப்பாக வேலை முடித்துவிட்டு, மாலை நேரங்களில், சக ஊழியர்களோடு வெளியே செல்வது எல்லாம் மிக மிகக் குறைவாம். எனவே குறித்த நேரத்துக்குள் தரமாக வேலையை முடித்துவிடுவார்களாம்.

வேலை நேர மாற்றம்

வேலை நேர மாற்றம்

ஃபின்லாந்தில், ஒரு ஊழியர், வாரத்துக்கு ஒரு நாள் அலுவலகத்துக்கே போகாமல், வீட்டில் இருந்தே வேலை பார்க்கலாமாம். அதே போல ஃபின்லாந்தில் ஊழியர்கள், தங்கள் வேலை நேரத்தை காலையில் 3 மணி நேரம் முன்னதாக வேலை செய்யத் தொடங்கலாமாம். அதே போல மாலை 3 மணி நேரம் வேலையை தள்ளிப் போட்டுச் செய்யவும் சட்டத்தில் இடம் இருக்கிறதாம்.

5 வார விடுமுறை

5 வார விடுமுறை

டென்மார்க்கில், ஒரு கம்பெனியில் நிரந்தர ஊழியராக இருப்பவருக்கு, ஒரு வருடத்தில், ஐந்து வாரம் கட்டாய விடுமுறை வழங்கியே ஆக வேண்டுமாம். இந்த ஐந்து வார சுற்றுலா விடுமுறைக்கு கம்பெனிகள், பணம் கொடுப்பார்களாம். எனவே உற்பத்தித் திறன் இந்த டென்மார்க் மக்களிடம் அதிகரித்து இருக்கிறதாம்.

வேலை போனால் ஓகே

வேலை போனால் ஓகே

அதே போல, ஒருவர் வேலையில் சேரும் போதே, சராசரியாக மாதம் 62.5 அமெரிக்க டாலர் unemployment insurance fund -க்குச் செலுத்துவார்களாம். அந்த ஊழியர் வேலை பார்க்கும் அலுவலகத்தில், அவருக்கு வேலை போய்விட்டால், அடுத்த வேலை தேடும் வரை அல்லது இரண்டு ஆண்டுகள் வரை, மாதாமாதம் ஒரு தொகையை மேலே சொன்ன unemployment insurance fund-ல் இருந்து கொடுப்பார்களாம்.

பயிற்சி & கவுன்சிலிங்

பயிற்சி & கவுன்சிலிங்

மேலே சொன்னது போல, வேலை பறிபோனவர்கள் அல்லது வேலையை விட்டவர்களுக்கு மாதாமாதம் பணத்தை மட்டும் கொடுப்பதோடு அரசு நின்றுவிடுவதில்லை. வேலை இழந்தவர்கள் அடுத்த வேலையைப் பெற தேவையான கல்வித் தகுதி அல்லது பட்டப் பயிற்சி மற்றும் கவுன்சிலிங் சேவைகளையும் அரசே வழங்குமாம்.

ஸ்ட்ரெஸ் லீவ்

ஸ்ட்ரெஸ் லீவ்

"இந்த கருமம் பிடிச்ச வேலை எனக்கு பிடிக்கலிங்க, எனக்கு ஒரே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு" என டென்மார்க்கில் சொன்னா போதும், மாதம் 2,000 அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமாராக 1,40,000) கொடுத்து, ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து வெளி வரச் சொல்வார்களாம். இந்த மாதம் 1.4 லட்சம் ரூபாயை டென்மார்க் அரசு கொடுக்குமாம்.

இலவசம்

இலவசம்

டென்மார்க்கில் விற்பனை வரி 25%, கார்களுக்கான வரி 150% வசூலிப்பார்களாம். அதாவது 10 லட்சம் ரூபாய் காரை டென்மார்க்கில் வாங்கினால் 10 லட்சம் + 15 லட்சம் ரூபாய் வரி = 25 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால் டென்மார்க்கில் பள்ளிக் கல்வி, கல்லூரி கல்வி, மருத்துவம் என பல அரசு திட்டங்கள் இலவசமாம். எனவே மக்களும் வரி செலுத்த அஞ்சமாட்டார்களாம்.

போய் வேலைய பாருங்க

போய் வேலைய பாருங்க

பேசாம அங்கிட்டு எங்கயாச்சும் போய் பொறந்து இருக்கலாம்.... நம்ம தலை எழுத்து இங்க வந்து பொறந்துட்டோம். படிக்கிறப்ப அசேன்மெண்ட், ஹோம்வொர்க்குன்னு கொன்னாய்ங்க. இப்ப வேலைக்கு வந்த பிறகு மாசாமாசம் டார்கெட் வெச்சே கொல்றாய்ங்க. என்ன செய்ய... போங்க... போய் பொங்கல் லீவுக்கு முன்ன, டார்கெட்ட அச்சீவ் பண்ற வழிய பாருங்க.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+