சீனா: உலகளவில் செயற்கை நுண்ணறிவு துறையில் அமெரிக்க நிறுவனங்கள் தான் முன்னிலையில் இருக்கின்றன. கூடிய விரைவில் சீனா இந்த இடத்திற்கு வந்துவிடும் போல தெரிகிறது. ஏனெனில் அமெரிக்காவின் தடையையும் மீறி சீனாவிடம் அதிநவீன செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட சிப்கள் சென்று சேர்ந்துள்ளன.
அமெரிக்காவை சேர்ந்த என்விடியா, இன்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிநவீன செயற்கை நுண்ணறிவு சிப்புகளை தயாரிக்கின்றன. இத்தகைய சிப்புகள் பாதுகாப்புத் துறைக்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. இப்படிப்பட்ட அதிநவீன சிப்புகள் சீனாவின் கைகளுக்கு செல்வது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என அமெரிக்க அரசு கருதுகிறது. இதன் காரணமாக அமெரிக்க நிறுவனங்கள் சீனாவிற்கு நவீன செயற்கை நுண்ணறிவு சிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கு கடந்த 2022ஆம் ஆண்டிலேயே அமெரிக்க அரசு தடை விதித்தது.

ஆனால் இந்த தடையையும் மீறி சீனர்கள் மத்தியில் நவீன ஏஐ சிப்புகள் கிடைத்திருப்பது நியூயார்க் டைம்ஸ் இதழ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சீனாவின் முக்கியமான மின்னணு சந்தைகளில் ஏஐ சிப்புகள் எளிதாக கிடைக்கின்றனவாம். இவை அனைத்தும் அமெரிக்க நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவையாம். செல்ஃப் டிரைவிங் கார்கள், சாட் பாட்டுகள் மற்றும் மருத்துவ ஆய்வுகள், ராணுவ பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு தேவைப்படக்கூடிய சக்தி வாய்ந்த சிப்புகள் சீனா வசம் கிடைத்திருப்பது அமெரிக்காவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்க அரசு குறிப்பிட்ட சீன நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு இந்த நிறுவனங்களுக்கு எல்லாம் சிப்புகளை ஏற்றுமதி செய்யக்கூடாது அல்லது விற்பனை செய்யக்கூடாது என அறிவித்திருக்கிறது. அமெரிக்காவின் இந்த தடை காரணமாக சீனா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் பின்னடைவை சந்தித்தது.
எனவே மாற்று வழிகளில் இந்த சிப்புகளை பெறும் நடைமுறைகளில் சீன நிறுவனங்கள் ஈடுபட்டு இருக்கின்றன. குறிப்பாக சீனாவை சேர்ந்த அதிகாரிகள் புதிதாக ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் இந்த சிப்புகளை பெறுவது தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமின்றி வேறு நாடுகளின் மூலம் கள்ள சந்தைகளிலும் இத்தகைய சிப்புகளை வாங்குவது தெரிய வந்திருக்கிறது. சீனாவை பொறுத்தவரை இதுபோல கள்ளச் சந்தையில் பொருட்களை வாங்குவது சட்டவிரோதம் கிடையாது. எனவே அங்கு அமெரிக்க நிறுவனங்கள் தயாரித்த அதிநவீன சிப்புகள் தாராளமாக கிடைப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.
இதனிடையே என்விடியா உள்ளிட்ட நிறுவனங்கள் அரசின் தடையை பின்பற்றி நாங்கள் சீனாவிற்கு சிப்புகளை ஏற்றுமதி செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறோம் எனக் கூறியுள்ளன. எங்களிடம் இருந்து ஒரு பொருள் விற்பனையான பிறகு அது எங்கு செல்கிறது யாரிடம் செல்கிறது என்பதை எங்களால் கவனிக்க முடியாது, ஒருவேளை எங்களது விநியோகஸ்தர்களில் யாரேனும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டது தெரிய வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்துள்ளன.
தடை விதிக்கப்படுவதற்கு முன்னரே போடப்பட்ட ஒப்பந்தங்களின் படி அமெரிக்க நிறுவனங்கள் சிப்புகளை சீனாவுக்கு அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது. தற்போது கள்ளச்சந்தையிலும் இவற்றை வாங்கும் இவர்கள் சீன ராணுவத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு வழங்குகிறார்களாம். மேலும் இந்த சிப்புகளை மாடலாக கொண்டு சீனா நிறுவனங்களே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்குவதும் இந்த செய்தியின் மூலம் தெரிய வந்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

டொனால்டு டிரம்ப் கொடுத்த டார்ச்சர்.. சீனா தப்பித்தது எப்படி? தடைகளை தகர்த்தெறிந்த வெற்றி பயணம்?

டிரம்ப் அலுவலகத்திலேயே கருப்பு ஆடு? போர் ரகசியங்களை வைத்து வியாபாரமா? ஊழியர்களுக்கு தடை?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications