18,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டாய்ச் வங்கி.. கதறும் ஊழியர்கள்!

நீடித்து வரும் பொருளாதார மந்தம், வேலையிழப்பு, பணி நீக்கம் என்ற குழப்பம் இந்தியாவில் மட்டும் அல்ல, சர்வதேச அளவிலும் இதே பிரச்சனை தான்.

சர்வதேச வங்கியான டாய்ச் வங்கியில் 18,000 பேரை வேலையிலிருந்து நீக்கப்போவதாக அந்த வங்கி அறிவித்துள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த ஃப்ராங்க் ஃபர்ட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த சர்வதேச வங்கி தான் டாய்ச் வங்கி. இது வணிக பிரிவான முதலீட்டு வங்கி பிரிவை, மறு சீரமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இவ்வாறு மறுசீரமைப்பதன் மூலம் நிலையான வருமானத்தை பெற முடியும் என்றும் இந்த வங்கி அறிவித்துள்ளது.

மொத்தம் ஊழியர்கள்

மொத்தம் ஊழியர்கள்

இந்த டாய்ச் வங்கியில் மொத்தம் 91,700 ஊழியர்கள் என்றாலும் கடந்த ஆண்டு இறுதியில் தான் இவ்வங்கி 41,700 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பணி நிறுத்தத்தால் ஜெர்மனி தவிர லண்டன் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றும், ஏனெனில் ஸ்டாக் வர்த்தகத்தை நிறுத்துவதன் மூலம் பெரிய அளவில் வேலையிழப்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வேலையிழப்பு அதிகரிக்கும்

வேலையிழப்பு அதிகரிக்கும்

இது குறித்து இவ்வங்கியின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ்டியன் கூறுகையில், கடந்த ஜூலை மாதம் முதல் கொண்டே, வங்கியை சீரமைக்க இவ்வங்கி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சீரமைப்பின் முக்கிய பகுதியே இந்த பணி நீக்கம் என்றும் கூறப்பட்டது. இது ஜெர்மனியில் வேலை குறைப்புகளை முன்பு எதிர்பார்க்கப்பட்டதை விட, குறையும் என்றும், முக்கியமாக ஐரோப்பாவில் நிலவி வரும் மந்த நிலையால், அங்கு வேலையிழப்புகள் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

செலவை மிச்சப்படுத்த திட்டம்

செலவை மிச்சப்படுத்த திட்டம்

டாய்ச் வங்கி தனது வணிக பிரிவான முதலீட்டு வங்கி பிரிவை, மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இவ்வாறு மறுசீரமைப்பதன் மூலம் நிலையான வருமானத்தை பெற முடியும் என்றும், அதாவது நஷ்டத்தினை குறைக்க முடியும் என்றும் இந்த வங்கி அறிவித்துள்ளது. இது அதிகப்பாடியான செலவினை குறைத்து, இது சேமிக்க வழி வகுக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் செலவுகளை சேமிக்க பல புதிய வணிகங்களையும் தேடி அலைவதாகவும் இவ்வங்கி அறிவித்துள்ளது.

டிசம்பருக்குள் முடிவு

டிசம்பருக்குள் முடிவு

இந்த வங்கி வரும் டிசம்பருக்குள் இது குறித்து ஒரு முக்கிய முடிவு எடுக்கும் என்றும், இதற்கு நிதி கட்டுப்பாட்டாளர்களின் ஒப்புதல் தேவை என்றும் கூறப்படுகிறது. டாய்ச் வங்கி பல பெரிய கடன் வழங்குனர்களில் ஒன்றாக இருந்தாலும், இது சமீபத்தில் ஊழியர்களை குறைப்பதாக அறிவித்தது. மேலும் ஹெச்.எஸ்.பி.சி அதன் பங்குகளை விற்க முயல்வதன் மூலம், டாய்ச் வங்கி, பிரான்சிலும் பெரிய அளவில் இந்த பணி நீக்கம் இருக்கலாம் என்றும் ஃபுளும் பெர்க் தரவுகளின் படி, ஐரோப்பிய கடன் வழங்குனர்கள் 50,000க்கும் மேற்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எல்லா இடங்களிலும் பாதிப்பு

எல்லா இடங்களிலும் பாதிப்பு

இந்த பணி நீக்கமானது அடுத்து வரும் 2021ம் ஆண்டு இறுதிக்குள் இருக்கும் என்றும், இந்த பணி நீக்கத்தால் ஜெர்மனி தவிர மற்ற இதன் கிளைகள் இருக்கும் அனைத்து பகுதிகளிலும் இதன் பாதிப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த வங்கியின் இத்தகைய தொடர் அறிவிப்பால், இதன் பங்கு விலை நடப்பு ஆண்டில் இதுவரை 10% வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு செலவு மிச்சமா?

இவ்வளவு செலவு மிச்சமா?

2022ம் ஆண்டுக்குள் இவ்வங்கி இந்த திட்டத்தினை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம், அதன் முக்கிய வணிகங்களிலிருந்து விலகுவதால், சில்லறை வணிகத்திலிருந்து 60% செலவினம், 2.3 பில்லியன் யூரோக்கள் மிச்சமாகலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் மொத்த சராசரியான ஆண்டு செலவினத்தில் 6% குறையலாம் என்றும் இவ்வங்கி கூறியுள்ளது. பல கட்டமாக ஆராய்ந்த பின்னரே, இந்த வங்கி இப்படி ஒரு முடிவை எடுத்திருத்திருப்பாதாகவும் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+