உலக சினிமாவில் அழுத்தமாக கால் பதித்து இருக்கும் டிஸ்னி கம்பெனி, தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்து இருக்கிறது.
கலிபோர்னியாவைச் சேர்ந்த இந்த டிஸ்னி கம்பெனி, பல ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
டிஸ்னி கம்பெனி, எத்தனை ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க இருக்கிறது. ஏன் இந்த ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப இருக்கிறது போன்ற விவரங்களை எல்லாம் இங்கு பார்ப்போம்.
28,000 பேரின் வேலை காலி
உலகின் மிகப் பெரிய பொழுது போக்கு கம்பெனிகளில் ஒன்றான டிஸ்னி, தன்னுடைய 28,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த 28,000 ஊழியர்களில் 67 சதவிகிதத்தினர் தற்காலிக வேலையில் இருப்பவர்களாம். மேற்கொண்டு எத்தனை பேர் எந்த வேலைகளில் இருந்தவர்கள் என்கிற விவரங்களைக் கொடுக்கவில்லை டிஸ்னி.
37 % வருவாய்
டிஸ்னி கம்பெனியின் தீம் பார்க்குகள், டிஸ்னி எக்ஸ்பீரியன்ஸ் & டிஸ்னி கன்ஸ்யூமர் ப்ராடெக்ட் போன்ற பிரிவுகளில் இருந்து மட்டும் டிஸ்னி குழுமத்துக்கு கணிசமான அளவுக்கு வருவாய் வந்து கொண்டு இருந்ததாம். மேலே சொன்ன பிரிவுகளில் இருந்து மட்டும், கடந்த ஆண்டில் டிஸ்னிக்கு ஒட்டுமொத்தமாக 37 % வருவாய் வந்து கொண்டு வந்ததாம்.
3.5 பில்லியன் டாலர் நஷ்டம்
டிஸ்னி கம்பெனி தன் பார்க்குகள், ஹோட்டல்கள் மற்றும் கப்பல் வியாபாரங்களை எல்லாம் மூடி இருப்பதால், இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 1 பில்லியன் டாலர் நஷ்டத்தைச் சந்தித்தது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில், சுமாராக 3.5 பில்லியன் டாலர் நஷ்டத்தைச் சந்தித்து இருக்கிறது. டிஸ்னி கம்பெனி.
டிஸ்னி பார்க்குகள் இயக்கம்
கலிஃபோர்னியாவில் அமைந்து இருக்கும் டிஸ்னி பார்க்குகள் இப்போது வரை மூடப்பட்டு இருந்தாலும், ஃப்ளோரிடா, பாரிஸ் ஷாங்காய், ஜப்பான், ஹாங்காங் போன்ற நகரங்களில் அமைந்து இருக்கும் டிஸ்னி பார்க்குகள் திறக்கப்பட்டு இருக்கிறதாம். ஆனால் குறிப்பிட்ட அளவில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்களாம்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications