ரத்தகளறியாகும் டிஸ்னி.. மீண்டும் பணிநீக்கம்

வால்ட் டிஸ்னி நிறுவனம் அடுத்த வாரம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. இந்த பணிநீக்கத்தில் டிஸ்னி நிறுவனத்தின் பொழுதுபோக்குப் பிரிவை சேர்ந்த 15 சதவீத ஊழியர்களும் அடங்கும்.

அமெரிக்காவில் வங்கி திவாலாகும் பிரச்சனை முடிந்தது என நினைக்கும் போதும் நாளுக்கு நாள் அந்நாட்டின் நிலைமை மோசமடைந்து வருவது மட்டும் அல்லாமல் பெரிய நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பணிநீக்கம் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ரத்தகளறியாகும் டிஸ்னி.. மீண்டும் பணிநீக்கம்

பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப் என பல முன்னணி சமூகவலைத் தளத்தின் தாய் நிறுவனமான மெட்டா ஏப்ரல் 19 ஆம் தேதி 4000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையிலான நிர்வாகம் ஏற்கனவே 11000 ஊழியர்களை மெட்டா நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யவுள்ள வேளையில், 2வது சற்று பணிநீக்கம் குறித்து அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.

இப்படியிருக்கும் சூழ்நிலையில் வால்ட் டிஸ்னி நிறுவனம் அடுத்த வாரம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை டிஸ்னியின் தொலைக்காட்சி மற்றும் திரைப்படப் பிரிவு, தீம் பார்க் மற்றும் கார்ப்பரேட் பதவிகளில் உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர். பணிநீக்கம் குறித்து ஏற்கனவே டிஸ்னி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டிஸ்னி நிறுவனத்தின் இந்த பணிநீக்கம் மூலம் உலக நாடுகளில் இருக்கும் டிஸ்னி ஊழியர்களை இது பாதிக்கும். மேலும் இதற்கான அறிவிப்பு ஏப்ரல் 24 ஆம் தேதி வெளியாகும். பிப்ரவரி மாதம் டிஸ்னி தனது வருடாந்திர செலவினங்களில் சுமார் 5.5 பில்லியன் டாலரை சேமிக்கும் முயற்சியாக தனது செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 7000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

வாட்ல் டிஸ்னி நிர்வாகம் கடந்த 5 வருடத்தில் சுமார் 3 முறை மறுசீரமைப்பு பணிகளைச் செய்து செலவுகளை குறைத்துள்ளது. இதற்கு முன்பு பொதுப்போக்குத் துறையில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் டிஸ்கவரி இன்க், நெட்பிளிக்ஸ் ஆகியவை பணிநீக்கத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ரத்தகளறியாகும் டிஸ்னி.. மீண்டும் பணிநீக்கம்

2022 ஆம் ஆண்டு இறுதியில் வால்ட் டிஸ்னி செயல்பாடுகள் வளர்ச்சி பாதையில் இல்லை என்பதால் முன்னாள் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பாப் இகர் மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

வால்ட் டிஸ்னி நிறுவனத்தில் சுமார் 15 ஆண்டுகள் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்து 2020 ஆண்டு இறுதியில் ஓய்வு பெற்றார் பாப் இகர். பிப்ரவரி 2020 இல் பாப் இகர் ஓய்வு பெற்ற நிலையில் டிஸ்னியின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்ற பாப் சாபெக் நியமிக்கப்பட்டர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+