ChatGPT-ல் நீங்க கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் எவ்வளவு மின்சாரம் செலவாகுது தெரியுமா? சாம் சொன்ன உண்மை

உலகளவில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஜெனரேட்டிவ் ஏஐ முறையில் ஏஐ செயலிகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது .

ஜெனரேட்டிவ் ஏஐ பிரிவில் முன்னணியில் இருப்பது ஓபன் ஏஐ நிறுவனத்திற்கு சொந்தமான சாட் ஜிபிடி தான். இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகம் முழுவதும் எந்த இடையூறும் இல்லாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஓபன் ஏஐ நிறுவனம் டேட்டா மையங்களை நிறுவி இருக்கிறது. இந்த டேட்டா மையங்கள் செயல்படுவதற்கு அதிக மின்சாரம் தேவை.

ChatGPTல் நீங்க கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் எவ்வளவு மின்சாரம் செலவாகுது தெரியுமா? சாம் சொன்ன உண்மை

இந்நிலையில் தான் சாட்ஜிபிடியில் நம்முடைய ஒவ்வொரு கேள்விக்கும் எவ்வளவு எனர்ஜி பயன்படுத்தப்படுகிறது என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன் The Gentle Singularity என்ற பெயரில் ஒரு கட்டுரையை எழுதி வெளியிட்டு இருக்கிறார். அதை சாட் ஜிபிடியில் நாம் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்ற தகவலை அவர் பதிவிட்டு இருக்கிறார்.

இதன்படி ஒவ்வொரு கேள்விக்கும் சராசரியாக 0.34 வாட் (0.34 watt-hours ) மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என அவர் கூறியிருக்கிறார் . சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள் இயங்குவதற்கு மெஷின் லேர்னிங் எனப்படும் இயந்திர கற்றலை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதாவது இணையத்தில் இருக்கும் தகவல்களை பெற்று பகுப்பாய்வு செய்து அதிலிருந்து விஷயங்களை கற்றுக்கொண்டு நாம் கேட்க கூடிய கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றன.

இந்த இயந்திர கற்றலை மேற்கொள்வதற்கு பல்வேறு டேட்டா சென்டர்கள் தேவைப்படுகின்றன, இந்த டேட்டா சென்டர்கள் 24 மணி நேரமும் இயங்கி ஆக வேண்டும். இதற்கு அதிவேக கணிதம் மேற்கொள்ளும் திறன் கொண்ட பிராசஸர்களை பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு 24 மணி நேரமும் இந்த டேட்டா சென்டர்களும் அது சார்ந்த கணினிகளும் இயங்குவதற்கு அதிக அளவு மின்சாரம் தேவைப்படுகிறது.

மேலும் டேட்டா மையங்களில் இருக்கும் கணினிகள் சூடாகாமல் இருக்க ஏசி உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன. எனவே ஒரு பெரிய டேட்டா மையம் இருக்கிறது என்றால் அதற்கு அதிக அளவிலான மின்சாரம் தேவைப்படுகிறது. எனவே தான் ஏஐ தொழில்நுட்பங்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்துவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர். எதிர்காலத்தில் இதற்காகவே அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட வேண்டி இருக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.

இந்த சூழலில் தான் சாம் ஆல்ட்மேன் சாட் ஜிபிடியின் மின்சார பயன்பாடு குறித்து வெளிப்படையாக தெரிந்துள்ளார். அதாவது சாட் ஜிபிடியில் நாம் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் 0. 34 வாட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது அல்லது அதிக செயல்திறன் கொண்ட மின் விளக்கு இரண்டு நிமிடங்களில் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்தை நாம் ஒரு கேள்விக்காக இதில் பயன்படுத்துகிறோம் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். ஒரு ஓவன் ஒரு நொடியில் பயன்படுத்தும் மின்சாரம் இது என அவர் விளக்கம் தந்துள்ளார். தண்ணீர் பயன்பாடு என வரும்போது 0.000085 கேலன் தண்ணீரை பயன்படுத்துவதாக குறிப்பிடுகிறார் அதாவது ஒரு டீஸ்பூன் தண்ணீரில் ஐந்தில் ஒரு பங்கு என தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+