கூகுள், ஆப்பிள், பேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற ஐடி நிறுவனங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் கோடிக் கணக்கில் வருவாயினைப் பெற்றதாக அறிவிக்கின்றனர். அப்படியானால் இந்த நிறுவனங்கள் எல்லாம் நொடி கணக்கில் எவ்வளவு எல்லாம் சம்பாதிக்கும் என்று தெரியுமா?
வர்ல்டுபேஸ் என்ற நிறுவனம் மிகப் பெரிய டெக் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் எவ்வளவு சம்பாதிக்கின்றன என்று ஆய்வறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில் இருந்து டாப் 5 நிறுவனங்கள் பட்டியலை இங்குப் பார்ப்போம்.
பேஸ்புக்
உலகின் மிகப் பெரிய சமுக வலைத்தளமான பேஸ்புக் நொடிக்கு 81 டாலர்கள் வரை சம்பாதிக்கின்றதாம்.
கூகுள்
உலகின் மிகப் பெரிய இணையதளத் தேடல் நிறுவனமான கூகுள் நொடிக்கு 658 டாலர்கள் சம்பாதிக்கின்றது என்று நமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்ட் நிறுவனம் நொடிக்கு 1,170 டாலர்கள் வரை சம்பாதிக்கின்றதாம்.
சாம்சங்
ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் 1,640 டாலர்கள் வரை ஒவ்வொரு நொடிக்கும் சம்பாதிக்கின்றதாம்.
ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு நொடிக்கும் 1,997 டாலர்கள் வரை சம்பாதிக்கின்றதாம்.


Click it and Unblock the Notifications