டோக்கியோ, ஜப்பான்: உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒருபுறம் வேகமாக வளர்ச்சியை அடைந்து வருகிறது , இதனால் மனிதர்களின் வேலைகள் ஏஐ வசம் சென்று கொண்டிருப்பது கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதேவேளையில் வேலைக்கு செல்லக்கூடிய பலருக்கும் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வேலைக்கும் சமமான நேரத்தை ஒதுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
Work life balance இல்லாமல் ஊழியர்கள் மன சிக்கலுக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாவதை காண முடிகிறது. இத்தகைய சூழலில் தான் ஜப்பான் அரசு ஒரு தைரியமான முடிவை கையில் எடுத்து நடைமுறைப்படுத்தி இருக்கிறது. ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் பணிபுரியக்கூடிய அரசு ஊழியர்கள் சுமார் 1,60,000 பேருக்கு வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

வழக்கமான சம்பளம் , வழக்கமான வேலை ஆனால் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்தால் போதும் மீதமுள்ள 3 நாட்களையும் குடும்பத்தினரோடு தனிப்பட்ட விருப்பங்களுக்காகவும் பயன்படுத்தி கொள்ளலாம். ஜப்பானில் குழந்தை பிறப்பு விகிதம் கடந்த சில ஆண்டுகளாக பெருமளவில் குறைந்து வருகிறது.
இதனால் ஜப்பான் மக்கள் தொகை குறிப்பாக வேலை செய்யும் வயதில் இருக்கக்கூடிய மக்கள் தொகை எண்ணிக்கை வேகமாக சரிந்து வருகிறது. ஏற்கனவே அங்க வேலை செய்யக்கூடிய மக்கள் கூடுதல் நேரம் தங்களுடைய வேலைகளை பார்க்க வேண்டிய நிலைக்கு ஆளாகி இருக்கின்றனர் . இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு குடும்பத்தினருடன் நேரம் போக்க முடியாமல் உள்ளனர்.
இந்த நிலையில் தான் ஜப்பான் அரசாங்கம் மக்கள் தங்களுடைய குடும்பத்தினரிடம் கூடுதலாக நேரம் ஒதுக்குவதற்கு நாம் வாய்ப்பு வழங்கினால் அவர்கள் மன அழுத்தங்கள் எதுவும் இன்றி குடும்பத்தினரோடு நேரத்தை போக்குவார்கள் இதன் மூலம் இன்னும் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றும் என முடிவு செய்தது. இதற்காகவே வாரத்தில் நான்கு நாள் மட்டுமே வேலை என்ற நடைமுறையை கொண்டு வந்திருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் இருந்தே படிப்படியாக டோக்கியோ நகரில் அரசு வேலைகள் வாரத்தில் நான்கு நாட்கள் என குறைக்கப்பட்டு விட்டன. இது அமல்படுத்தப்பட்ட 4 மாதங்களிலேயே ஊழியர்கள் பலரும் தங்களுடைய மனநிலையில் பெரிய அளவு மாற்றம் வந்திருப்பதாக தெரிவிக்கின்றனர். தனிப்பட்ட வாழ்க்கையிலும் கவனம் செலுத்த முடிகிறது, இதனால் மன அழுத்தம் இன்றி இருக்கிறோம், வேலையிலும் எங்களால் அதிக செயல் திறனோடு வேலை பார்க்க முடிகிறது என கூறுகின்றனர்.
ஜப்பானின் இந்த நடவடிக்கை பல்வேறு நாடுகளுக்கும் ஒரு முன் உதாரணமாக மாறி இருக்கிறது. வாரத்தில் நான்கு நாட்கள் வேலை என்ற கருத்தாக்கமே முதலில் ஜெர்மனியில் தான் தொடங்கியது, இதனை அடுத்து ஸ்பெயின், போர்ச்சுக்கல் என பல்வேறு நாடுகளிலும் வாரத்தில் நான்கு நாட்கள் வேலைமுறை கொண்டுவரப்பட்டு அங்கே அது வெற்றியும் பெற்றுள்ளது.
ஜப்பான் அரசு இளம் தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிப்பதற்காக குழந்தை பராமரிப்பு விடுமுறை என வழங்குகிறது. வீட்டில் குழந்தைகள் இருந்தால் பணி நேரத்தில் இரண்டு மணி நேரத்தை குறைத்துக் கொள்ளலாம் என்ற ஒரு பாலிசியும் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
ஜப்பான் அரசின் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை வெற்றி பெற்று ஊழியர்கள் மன அழுத்தம் இல்லாமல் முழு செயல் திறனோடு வேலை செய்ய முடிகிறது என கூறுகின்றனர். இருந்தாலும் ஏஐ வளர்ச்சி ஒரு புறம் மனிதர்களின் வேலையைபறித்து கொண்டு வருகிறது. இந்த சூழலில் வாரத்தில் 4 நாட்கள் வேலை முறையை அனைத்து துறைகளிலும் கொண்டு வர முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications