வாஷிங்டன், அமெரிக்கா: எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் செயல் திறன் துறை 2 லட்சம் அரசு கிரெடிட் கார்டுகளை முடக்கியுள்ளது. அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு பதவி ஏற்றதை அடுத்து அரசு செலவினங்களை குறைப்பதற்காகவும் அரசு செயல் திறனை மேம்படுத்துவதற்காகவும் Department of Government Efficiency என்ற பெயரில் அரசு செயல் திறன் துறையை உருவாக்கியது. இந்த துறைக்கு எலான் மஸ்க் தலைமை பொறுப்பு வகிக்கிறார்.
அரசு செயல் திறன் துறை அரசு செலவினங்களை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிப்ரவரி 18ஆம் தேதி இந்த துறை சார்பாக ஒரு அறிவிப்பு வெளியானது. இதன்படி அரசு பல்வேறு துறைகளுக்கும் வழங்கி இருக்கும் கிரெடிட் கார்டுகளை ஆய்வு செய்து வருவதாகவும், தேவையற்ற செலவினங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில் அரசு வெளியிட்டுள்ள தகவலின் படி அமெரிக்க அரசு மொத்தம் 4.6 மில்லியன் கிரெடிட் கார்டுகளை பயன்பாட்டில் வைத்திருக்கிறதாம். 2024 ஆம் ஆண்டில் மட்டும் இந்த கிரெடிட் கார்டுகள் மூலம் 90 மில்லியன் பரிவர்த்தனைகள் நடந்திருக்கின்றன. இந்த நிலையில் தேவையற்ற செலவுகளை குறைப்பதற்காக இந்த கிரெடிட் கார்டு பயன்பாடுகளை குறைக்க டிரம்ப் நிர்வாகம் முடிவெடுத்து பல்வேறு துறைகளிலும் ஆய்வு மேற்கொண்டது.
மூன்று வாரங்களாக 16 அரசுத் துறைகளில் நடத்தப்பட்ட ஆய்வினைத் தொடர்ந்து 2 லட்சம் அரசு கிரெடிட் கார்டுகள் முடக்கம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. அது தொடர்பான விவரங்களையும் அரசு செயல் திறன் துறை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. தேவையற்ற செலவினங்களுக்காக பயன்படுத்தப்பட்ட கார்டுகளையே முடக்கி இருப்பதாக விளக்கம் தந்துள்ளது. கடந்த வாரம் தான் அரசு செயல் திறன் துறை 1.4 லட்சம் கிரெடிட் கார்டுகளை ரத்து செய்வதாக அறிவித்திருந்தது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் எலான் மஸ்க், கிரெடிட் கார்டு என்ற பெயரில் பல்வேறு அரசு துறைகளிலும் மறைமுகமாக பல லட்சம் டாலர்கள் செலவிடப்படுவதாக கூறியுள்ளார். இதனை இன்னும் குறைக்க வேண்டி இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அரசு செலவினங்களை குறைப்பதில் மிகவும் தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தான் கிரெடிட் கார்டு பயன்பாடுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அரசு செயல் திறன் துறை கூறி இருக்கிறது. இந்த கிரெடிட் கார்டு நீக்கம் மூலம் பொது சேவை மேலாண்மை துறை , அரசு அலுவலர்களுக்கான மேலாண்மை துறை, தொழிலாளர் நலத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை, நாசா , உள்நாட்டு பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
Written by: Devika
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications