உலகமும் முழுவதும் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் முக்கிய முதலீட்டுத் தளமாக இருக்கும் கிரிப்டோ சந்தையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மீம் அடிப்படையாக வைத்து வர்த்தகம் செய்யப்படும் டிஜிட்டல் கரன்சியான டோஜ்காயின் விலை சுமார் 400 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த அதிரடி வளர்ச்சி மூலம் ஒரு பிட்காயின் மதிப்பு வரலாற்று உச்ச அளவான 0.450 டாலரை அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் மொத்த சந்தை மதிப்பு 50 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
டோஜ்காயின் சந்தை மதிப்பு
டோஜ்காயின் தொடர் வளர்ச்சி அடைந்து வரும் காரணத்தாலும், பல எதிர்ப்புகள் மற்றும் கட்டுப்பாடுகளைத் தாண்டியும் அதிகளவிலான முதலீட்டை பெற்று வரும் காரணத்தாலும் டோஜ்காயின் மொத்த சந்தை மதிப்பு 50 பில்லியன் டாலர் அளவீட்டை அடைந்து சந்தை மதிப்பில் போர்டு, கிராப்ட் ஹெய்ன்ஸ் ஆகிய நிறுவனங்களைக் கடந்தும், டிவிட்டருக்கு இணையாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது.
டோஜ்காயின் விலை
இன்றைய வர்த்தகத்தில் டோஜ்காயின் மதிப்பு சுமார் 20 சதவீதம் சரிந்ததுள்ளது. இதனால் ஒரு டோஜ்காயின் தனது உச்ச விலையான 0.45 டாலரில் இருந்து 0.325 டாலருக்கு சரிந்துள்ளது. இதனால் டோஜ்காயின் சந்தை மதிப்பு 42.05 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
6,909.63 சதவீத வளர்ச்சி
2013ஆம் ஆண்டில் விளையாட்டாகத் துவங்கப்பட்ட ஒரு டிஜிட்டல் கரன்சி தான் இந்த டோஜ்காயின், Shiba Inu நாய் குட்டியை சிம்பிள் ஆக இருக்கும் இந்த டிஜிட்டல் கரன்சி 2021ல் மட்டும் தற்போதை விலை நிலை அடிப்படையில் சுமார் 6,909.63 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் புதிய முதலீட்டாளர்களுக்கு மிகவும் விருப்பமான முதலீடாக மாறியுள்ளது.
எலான் மஸ்க் மகன் X Æ A-Xii
சில வாரங்களுக்கு முன்பு டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தனது 9 மாத மகன் X Æ A-Xiiக்கு டோஜ்காயின்-ஐ வாங்கிக்கொடுத்துள்ளார். இதுகுறித்து எலான் மஸ்க் தனது டிவிட்டரில் X Æ A-Xiiக்கு வாங்கிக்கொடுத்துள்ளேன், இதன் மூலம் குழந்தை டிஜிட்டல் கரன்சி உரிமையாளராக X இருப்பான் என டிவீட் செய்திருந்தார்.
எலான் மஸ்க் ஆதரவு
எலான் மஸ்க் ஏற்கனவே டெஸ்லா நிறுவனத்தின் வாயிலாகப் பிட்காயினில் முதலீடு செய்திருந்த நிலையில், தனிப்பட்ட முறையில் டோஜ்காயின்-ல் முதலீடு செய்துள்ளார். மேலும் பிட்காயினை விடவும் டோஜ்காயினுக்குத் தொடர்ந்து எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்து வரும் காரணத்தால் தொடர் வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications