மீண்டும் சிக்கலில் சீனா.. 11 நிறுவனங்களுக்கு தடை.. டிரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக போருக்கு என்று தான் முடிவு வருமோ தெரியவில்லை. ஏனெனில் தற்போது மீண்டும் இந்த நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்து வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக பிரச்சனையை முடித்து ஒரு சுமூகமான உடன்படிக்கையை எட்ட, சீனாவும் முயன்று வருகின்றது. ஆனால், இதுவரை அம்முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.

சொல்லப்போனால் எப்படியோ பலதரப்பட்ட பேச்சு வார்த்தைக்கு பின்பாவது முதல் கட்ட ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் தற்போது அதனை நினைத்து கூட பார்க்கவில்லை என்கிறது டிரம்ப் நிர்வாகம்.

11 சீன நிறுவனங்களுக்கு தடை

11 சீன நிறுவனங்களுக்கு தடை

இதற்கிடையில் இந்த உறவுகளுக்கு இடையில் மேலும் விரிசலை உருவாகும் விதமாக, ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள சிறுபான்மையினரை குறி வைத்து, சீனாவின் பிரச்சாரத்தில் மனித உரிமை மீறல்களுக்கு நிறுவனங்கள் உடந்தையாக இருப்பதாக டிரம்ப் நிர்வாகம் திங்கட்கிழமையன்று 11 நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது. இது இந்த நிறுவனங்கள் சிறப்பு உரிமம் இல்லாமல் அமெரிக்க தொழில் நுட்பம் மற்றும் தயாரிப்புகள் வாங்குவதை தடை செய்துள்ளது.

யாருக்கெல்லாம் தடை?

யாருக்கெல்லாம் தடை?

இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் பட்டியலில், ஆப்பிள், ரால்ப் லாரன், கூகுள், ஹெச் பி, டாமி ஹில்ஃபிகர், ஹ்யூகோ பாஸ் மற்றும் முஜி உள்ளிட்ட நிறுவனங்களில் தற்போதைய மற்றும் முன்னாள் சப்ளையர்களும் உள்ளனர் என்று அறிக்கை ஒன்று கூறியுள்ளது.

கட்டாய வேலை செய்ய நிர்பந்தம்

கட்டாய வேலை செய்ய நிர்பந்தம்

மனித உரிமைக் குழுக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சீன அரசாங்கத்தால் ஜின்ஜியாங்கில் மேற்கொள்ளப்பட்ட, தடுப்புக் காவல் பிரச்சாரத்தினை ஆவணபடுத்தியுள்ளன. மேலும் சிறுபான்மை குழுவினை சேர்ந்தவர்கள் இந்த குழுவின் பெரிய முகாம்களில் உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்ட சில கைதிகள், அதற்கு அருகிலுள்ள தொழில் சாலைகளில் வேலை நிர்பந்திக்கப்படுவதாக கூறப்படுகிறது.

பேஸ் மாஸ்க் தயாரிக்க நிர்பந்தம்

பேஸ் மாஸ்க் தயாரிக்க நிர்பந்தம்

இன்னும் சிலர் பேஸ் மாஸ்க் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இவ்வாறு ஒன்பது நிறுவனங்களை கடந்த திங்கட்கிழமையன்று டிரம்ப் நிர்வாகம் மேற்கோள் காட்டியது. குறிப்பாக சீனாவின் Changji Esquel Textile Co. Ltd, Nanchang O-Film Tech, Hetian Taida Apparel Co. Ltd உள்ளிட்ட நிறுவனங்கள் ஊழியர்களை கட்டாயபடுத்தி வேலை செய்வதற்காக ஆயத்தமாகி உள்ளன என்றும் பட்டியலிடப்பட்டுள்ளன.

உரிமம் இல்லாமல் பொருட்கள் இல்லை

உரிமம் இல்லாமல் பொருட்கள் இல்லை

இதே சீனாவின் மற்ற இரண்டு நிறுவனங்களான Xinjiang Silk Road BGI and Beijing Liuhe BGI நிறுவனங்கள் சிறுபான்மையினரின் அடக்குமுறையை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் மரபணு பகுப்பாய்வுகளை நடத்த சேர்க்கப்பட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக அமெரிக்காவின் இந்த தடையினால் அமெரிக்கா நிறுவனங்கள் சீன நிறுவனங்களுக்கு உரிமம் இல்லாமல் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை விற்பனை செய்வதில் இருந்து தடுக்கிறது. ஆனால் வாங்குவதில் இந்த தடை விதிக்கப்படவில்லை.

வர்த்தகம் செய்ய வாய்ப்பே இல்லை

வர்த்தகம் செய்ய வாய்ப்பே இல்லை

எனினும் ஜின்ஜியாங்கில் கட்டாய உழைப்பு மற்றும் பிற முறைகேடுகளுக்காக அரசாங்க பட்டியலில் பெயரிடப்பட்ட, எந்தவொரு நிறுவனத்துடனும் தொடர்ந்து வர்த்தகம் செய்ய வாய்ப்பில்லை. அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையானது, அமெரிக்கா சீனா இடையே ஏற்கனவே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் வந்துள்ளது.

செல்ஃபி கேமரா உற்பத்தி

செல்ஃபி கேமரா உற்பத்தி

இவ்வாறு திங்கட்கிழமையன்று தடை விதித்ததாக கூறப்படும் நிறுவனங்களில் ஒன்றான, Nanchang O-Film Tech ஐபோனின் சில மாடல்களுக்கு செல்ஃபி கேமாராக்களையும், ஹூவாய் மற்றூம் சாம்சங்கிற்கான பிற கேமரா மற்றூம் டச் ஸ்கீரின்களையும் தயாரித்ததாக கூறியுள்ளது.

முக்கியப் பிராண்டுகளுடன் தொடர்பு

முக்கியப் பிராண்டுகளுடன் தொடர்பு

இதே பட்டியலில் உள்ள மற்றொரு நிறுவனமான Hefei Bitland Information Technology Co நிறுவனம் தனது இணையதளத்தில் கூகுள், ஹெச்பி, ஹையர், iFlytek மற்றும் லெனோவா ஆகியவை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதே மற்றொரு நிறுவனமான Changji Esquel Textile Co. Ltd முக்கிய பிராண்டுகளுடன் தொடர்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

யாருக்கு பிரச்சனை?

யாருக்கு பிரச்சனை?

இப்படி சீனா நிறுவனங்கள் குற்றம் சாட்டப்பட்டாலும், அதனை சில நிறுவனங்கள் மறுத்தும் கூறியுள்ளன. எனினும் பல நிறுவனங்கள் பல முக்கிய பிராண்டுகளுடன் தொடர்பில் உள்ளன. இதனால் சீன நிறுவனங்களுக்கு பிரச்சனையே என்றாலும், அமெரிக்கா நிறுவனங்களுக்கும் இதனால் பிரச்சனை தான் என்பதும் நிசப்தமான உண்மையே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Donald trump administration barred 11 new Chinese companies

US china issue.. Donald trump administration barred 11 new Chinese companies
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X