கொரோனா பாதித்தவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 3 மாத விடுமுறை.. புதிய சட்டத்தில் டிரம்ப் கையெழுத்து..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸால் இன்று உலகமே அரண்டு போயுள்ளது என்று கூறலாம். அந்தளவுக்கு மக்களையும் பொருளாதாரத்தினையும் பயமுறுத்தி வருகிறது.

 

மேலும் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை வாரி சுருட்டிக் கொண்டு சென்று கொண்டிருக்கிறது என்றே கூறலாம்.

ஏனெனில் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவால், உலகளாவிய பொருளாதாரத்திலேயே மந்தநிலை ஏற்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரத்தை மேம்படுத்த சில மாதங்கள் ஆகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 கொரோனாவால் பாதிப்பு

கொரோனாவால் பாதிப்பு

இந்த நிலையில் கொரோனா தொற்று 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. இன்னும் கூட சொல்லப்போனால் உலக வல்லரசு எனக் கூறப்படும் அமெரிக்காவே இந்த கொரோனாவால் ஆட்டம் கண்டுள்ளது. ஆக அதன் பொருளாதாரத்தினை சீரமைக்க பல அதிரடியான திட்டங்களை வகுத்து வருகிறது. ஒரு புறம் மிகப்பெரிய பொருளாதார மந்தநிலையுடன் போராடி வந்தாலும், மறுபுறம் அதனை சமாளிக்க பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 சம்பளத்துடன் கூடிய விடுமுறை

சம்பளத்துடன் கூடிய விடுமுறை

அதன் ஒரு பகுதியாக கொரோனா பாதித்த ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கவும், அதுவும் ஒரு நாள் இரு நாள் அல்ல, மூன்று மாதங்களுக்கு இந்த விடுமுறை அளிக்கவும், ஊதியம் அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக தனியாக ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த மசோதா அமெரிக்கா மக்களுக்கு இலவச பரிசோதனை செய்யவும், இன்னும் பல திட்டங்கள் இதன் மூலம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 தொழில் துறையினருக்கும் திட்டம்
 

தொழில் துறையினருக்கும் திட்டம்

மேலும் கடந்த சில தினங்களுக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க குடும்பங்கள், தொழில் துறையினருக்கு பொருளாதார உதவிகள் கிடைப்பதற்காகவும் சில திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த புதிய திட்டத்தின் மூலம் அனைத்து அமெரிக்க குடும்பத்தினரும் இலவசமாக கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளலாமாம்.

 வங்கி கணக்கில் நிதியுதவி

வங்கி கணக்கில் நிதியுதவி

இது தவிர கொரோனா வைரசை எதிர்த்து போராட, அமெரிக்கர்களின் வங்கி கணக்கில் நேரடியாக குறைந்தபட்சம் 1000 அமெரிக்க டாலர்களை செலுத்தவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசனை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தம் 33 கோடி மக்கள் வசிக்கும் அமெரிக்காவில் மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக நிதியுதவி அளிக்க 500 பில்லியன் டாலர் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 இரு தவணைகளாக நிதி

இரு தவணைகளாக நிதி

இந்த நிலையில் இந்த தொகையானது அடுத்து வரும் ஏப்ரல், மே மாதத்தில் இரு தவணைகளாக செலுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதை டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும் இந்த நிதியுதவி தொடர்பான இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

 டிரம்ப் முடிவு

டிரம்ப் முடிவு

கொரோனா வைரஸ் எனும் பெரும் தொற்று நோயால் அமெரிக்காவில் ஏற்படும் விளைவுகளைச் சமாளிக்க, நாட்டு குடிமக்களுக்கு உதவுவதற்காக, டிரம்ப் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கலாம் எனவும் அந்த செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அரசின் கருவூலத்திலிருந்து பணத்தை எடுத்து நேரடியாக குடிமக்களுக்கு வழங்க டிரம்ப் முடிவு செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

 இது பெரிய உதவி

இது பெரிய உதவி

ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடி காலங்களில் அமெரிக்காவில் உள்ள குடிமக்களுக்கு இதுபோன்ற உதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த முறை டிரம்ப் அறிவித்த தொகையானது மிகப்பெரிய தொகை என்றும் கூறப்படுகிறது. எப்படியோ இந்த செயல்முறை நடைமுறைக்கு வந்தால் நன்றாகத் தான் இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Donald trump announced multi- billion dollar coronavirus relief packages to American citizens

US President Donald Trump signed a multi-billion-dollar coronavirus relief packages, and now Americans will get 3 month paid emergency leave amid coronavirus pandemic.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X