பொதுவாக ஒரு நாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் போது அந்த பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும். இதனால் அந்த பொருட்களின் விலை உற்பத்தி விலையை விட சற்று அதிகமாக இருக்கும். ஆனால் இந்தியா தற்போது அமெரிக்காவிற்கு ஒரு முக்கியமான சலுகையை வழங்கியுள்ளது. அது என்னவென்றால் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு இனி பூஜ்ஜிய வரி விதிக்கப்படவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப், பரஸ்பர வரி முறையைக் கொண்டு வந்திருக்கிறார். இந்த வரி முறையின் படி என்னென்ன நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுகிறதோ, அந்தந்த நாடுகள் விதிக்கும் வரிக்கு ஏற்ப அமெரிக்காவும் வரி விதிக்கும். இந்த வரி முறையின் காரணமாக பதற்றம் நிலவி வரும் நிலையில் ஏப்ரல் 30-ஆம் தேதி அன்று டிரம்ப் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

இந்தியாவுடன் வரி சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நீண்ட நாட்களாக போய்க் கொண்டிருக்கிறது. சீக்கிரமே இதற்கு ஒரு நல்ல ஒப்பந்தம் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையில் இருக்கிறேன் என்று கூறியிருந்தார். அதற்கு ஏற்ப இன்று இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சில அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கப்படாது என்ற செய்தி வெளியாகியுள்ளது.
மே 9-ஆம் தேதி அன்று ராய்ட்டர்ஸ் நிறுவனம ஒரு செய்தியை வெளியிட்டது. அதன்படி தற்போது அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான சராசரி வரி 13 சதவீதத்திலிருந்து 4 சதவீதத்திற்கும் குறைவாக மாறியுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 9 சதவீத வரியை இந்தியா குறைக்க முன் வந்துள்ளது. தங்கள் முக்கிய வர்த்தக கூட்டாளர்களுடன் இணைந்து இருப்பதற்காக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் படி இந்தியா முதல் கட்டமாக 60 சதவீதத்திற்கும் அதிகமான அமெரிக்கா பொருட்களுக்கு வரி இல்லாமல் வாங்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளது. அதோடு அமெரிக்காவிலிருந்து வரும் கிட்டத்தட்ட 90 சதவீத பொருட்களுக்கு மோடி அரசு முன்னுரிமை வழங்க இருப்பதாகவும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலாக தற்போது இந்தியா இனிமேல் அமெரிக்கா அரசு விதிக்க இருக்கும் வரி உயர்வுகளில் இருந்து விலக்கு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால் அமெரிக்கா இங்கிலாந்துடன் போட்ட ஒப்பந்தத்திலும் இது போன்ற வரி விலக்குகளை அறிவிக்கவில்லை. ஏப்ரல் 10-ஆம் தேதி அன்று அமெரிக்கா இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான கூடுதல் வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. ஜூலை 9-ஆம் தேதி வரை இந்த அதிகபட்ச வரிவிலக்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த தற்காலிக இடைநிறுத்தம் வர்த்தக பேச்சுவார்த்தையை நல்ல திசையில் கொண்டு செல்லவும், நல்ல முடிவு எடுப்பதற்காகவும் செய்யப்பட்ட நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டது.
ஆனால் அமெரிக்கா ஏப்ரல் 2-ஆம் தேதி என்று பரஸ்பர வரி முறையை கொண்டு வந்து கிட்டத்தட்ட 60 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கத் தொடங்கியது. அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 26 சதவீத வரி விதிக்கப்பட்டன. இந்த வரி கடல் உணவுகள், ஸ்டீல் போன்ற உலோகங்கள் என அனைத்து துறைகளையும் பாதித்தது.
தற்போது போடப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து நல்ல வர்த்தக கூட்டாளர்களாக என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வணிக உறவு இதனால் மேம்படும் சூழல் நிலவி வருகிறது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!



Click it and Unblock the Notifications