டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபரானால் சீனா, இந்தியாவுக்கு.. என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படும்..!

டொனால்டு டிரம்ப்-பின் இரண்டாவது ஆட்சிக்காலம் அமையக்கூடும் என்ற சூழ்நிலையில் ஆசியாவில் உள்ள பங்குத் தரகர்கள் அதற்கேற்றபடியான வர்த்தகத்துக்கான தளத்தை அமைக்கத் தொடங்கியுள்ளனர். இதில் பல தலைகள் உருளலாம், சிலர் எழுச்சி பெறலாம். டொனால்டு டிரம்ப்பின் 'முதலில் அமெரிக்கா' கொள்கையினால் வர்த்தகம், பாதுகாப்பு, பிற தொழில்களின் கொள்கைகளில் நிறைய மாற்றங்கள் நிகழும் என்பதால் ஆசியாவில் உள்ள விவசாயம், விவசாய உபகரணத் தொழில் முதல் ஜவுளி, ஆயுதத் தயாரிப்பு துறைகள் வரை பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

டிரம்ப் அரசு அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கினால் ஆசிய நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனம் மற்றும் மைக்ரோ சிப் தொழிலில் மந்தமடையக் கூடும். உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா நிச்சயமாக டிரம்ப்பின் கொள்கைகளால் கடுமையாகப் பாதிக்கும். செமிகண்டக்டர்கள் மற்றும் பிற டெக் துறைகளின் ஏற்றுமதி வருவாயை அதிகம் நம்பியுள்ள தைவான், தென்கொரியாவும் நிகழப்போகும் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கியுள்ளன.

டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபரானால் சீனா, இந்தியாவுக்கு.. என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படும்..!

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றால் அதில் அதிகம் பலனடையப் போகும் நாடாக இந்தியா உள்ளது. தென்கிழக்கு ஆசியப் பொருளாதாரம் ஏற்றுமதியினால் பலன்தரக்கூடிய உறவுகள் இல்லாததால் அதை இந்தியா சாதகமாக்கிக் கொள்ளும். அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஆசியாவில் வணிகத் தொடர்புகளில் பாதிப்புகள் உண்டாகலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.

இதுபற்றி லம்பார்டு ஓடியர் நிறுவனத்தின் மேக்ரோ ஸ்ட்ராடஜிஸ்ட் ஹோமின் லீ கூறுகையில், இந்த பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது. உலகளவில் சரக்கு சந்தையில் இந்தியாவுக்கு மிகக் குறைந்த பங்குதான் உள்ளது. அத்துடன் சீனா தொடர்புடைய அபாயங்கள் குறைவாகவே உள்ளது என்றார்.

அல்லையான்ஸ் குளோபல் இன்வெஸ்டர்ஸ் நிறுவன போர்ட்போலியோ மேனேஜர் ஆனந்த் குப்தா கூறுகையில், சீனாவைவிட இந்தியாதான் அமெரிக்காவுடன் சிறந்த நல்லுறவை வைத்துள்ளது. இந்திய தரப்பில் டிரம்ப் விளைவு பிற சந்தைகளுக்கு ஏற்படும் அளவுக்கு பாதகமாக இருக்காது. அதைப் பற்றி எண்ணிப் பார்ப்பதற்குக் கூட கஷ்டம் என்றார்.

எம் அண்டு ஜி இன்வெஸ்ட்மென்ட்டின் குளோபல் சிஐஓ ஃபேபியானா ஃபெடலி கூறுகையில், ஐரோப்பிய யூனியன் மீது டிரம்ப் வெற்றிகரமாக அழுத்தம் கொடுத்தால் அதிக கட்டணங்களால் பாதிக்கப்படப் போவது சீனாதான் என்பது நிச்சயம். இருந்தாலும் பல கம்பெனிகள் தங்களது மார்க்கெட் அல்லது சப்ளை செயின்களையும் உற்பத்தி ஆலைகளையும் சீனாவுக்கு வெளியே ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன.

டிரம்ப் அரசு அதிக கட்டணத்தை நிர்ணயித்தாலும் மிகப் பெரிய அரசியல் அழுத்தம் தரப்படாத நிலையில் ஐரோப்பிய யூனியன் அதை அமல்படுத்தாமல் இருக்கலாம்.
லம்பார்டு ஓடியர் நிறுவன சீனியர் மேக்ரோ ஸ்ட்ராடஜிஸ்ட் ஹோமின் லீ இதுபற்றி கூறுகையில், ஜப்பானை பொறுத்த மட்டில் அபாயங்கள் சீனாவைவிட ஸ்திரமாகவே இருக்கிறது. குறைந்தளவிலான உலகளாவிய வர்த்தகம் மற்றும் அமெரிக்காவுடனான உறவு டிரம்ப் நிர்வாகத்திடமும் வலுவாக இருக்கும்.

தைவானும், தென்கொரியாவும் செமி கண்டக்டர் மற்றும் மைக்ரோ சிப் துறையில் டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையைச் சந்திக்க நேர்ந்தால் அதை ஜப்பான் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் என்றார். ஆர்பிசி வெல்த் மேனேஜ்மென்ட் ஏசியாவின் சீனியர் இன்வெஸ்ட்மென்ட் ஸ்ட்ராடஜிஸ்ட் ஜாஸ்மின் துவான் கூறுகையில், ஆசியாவில் மிகப் பெரிய அளவில் பலன்பெறப் போகும் நாடுகள் என்றால் வியட்நாம், தைவான், மலேசியா ஆகும்.

அடிமட்ட உற்பத்தி துறைகளான ஜவுளி, மர பர்னிச்சர் போன்ற தொழில்களில் வியட்நாம் நல்ல பலன் பெறும். தைவான் மற்றும் மலேசியா எலக்ட்ஹரானிக் பொருட்கள் சப்ளை செயினில் பலன் பெறும் என்றார்.

Story written by: Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+