வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆண்டுக்கு 1.50 லட்சம் டாலர்கள் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு எந்த ஒரு வரியும் கிடையாது என்ற வகையில் வரிவிதிப்பு நடைமுறையில் பெரிய அளவிலான மாற்றங்களை கொண்டு வருவதற்கு டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவி ஏற்று இருக்கிறார் டொனால்ட் டிரம்ப். தான் பதவியேற்றதிலிருந்து பல்வேறு அதிரடியான அறிவிப்புகளையும் அவர் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். அந்த வகையில் வரி நடைமுறைகளில் பெரிய அளவிலான மாற்றங்களை கொண்டு வருவதற்கு முடிவு செய்து இருக்கிறார்.

அமெரிக்க வணிகத்துறை செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் வெளியிட்டுள்ள தகவலில் கூடிய விரைவில் இலட்சக்கணக்கான அமெரிக்கர்கள் தங்களுடைய வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டிய தேவையில்லை என்ற நிலைக்கு செல்வார்கள் என கூறியுள்ளார். சிபிஎஸ் தளத்திற்கு பேட்டியளித்துள்ள ஹோவர்ட், டிரம்ப் தலைமையிலான அரசு ஆண்டுக்கு 1.5 லட்சம் டாலர்கள் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு எந்த ஒரு வரியும் விதிக்கப்படக்கூடாது என்ற வகையில் மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளார்.
டொனால்ட் டிரம்பின் இலக்கே இது தான் 1.5 லட்சம் டாலருக்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்களுக்கு எந்த வரியும் இருக்கக் கூடாது, அவருடைய இந்த இலக்கை நோக்கி தான் அவர் பயணம் செய்கிறார் என கூறியுள்ள அவர் அதற்கான பணிகளில் தான் அரசு ஈடுபட்டு இருக்கிறது ,இது தவிர பல்வேறு பெரிய அளவிலான மாற்றங்களை நாம் கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம் என்ற தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
டிரம்ப் அரசு மிகப் பெரிய பரந்த அளவிலான பொருளாதார மூலோபாயத்தை கையில் எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். சில நேரங்களில் நம்முடைய கொள்கை மாற்றங்கள் நாட்டின் பொருளாதாரத்தை மந்த நிலைக்கு கொண்டு செல்லும் ஆபத்தை ஏற்படுத்தினாலும் சில நடவடிக்கைகளை நாம் தைரியமாக எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதுநாள் வரை அமெரிக்காவில் நிலவிய சூழல் வேறு இனிமேல் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டி இருக்கிறது என தெரிவித்துள்ள அவர் டொனால்ட் டிரம்ப் கொண்டு வரக்கூடிய இந்த கொள்கைகள் அமெரிக்கா பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு பைடன் தலைமையிலான நிர்வாகம் பின்பற்றிய மோசமான கொள்கைகளே அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி நிலைக்கு செல்வதற்கு காரணமாக அமைந்திருக்கிறது எனக் கூறியுள்ள அவர், டிரம்ப் கொண்டு வரக்கூடிய பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகள் நாட்டின் வருமானத்தை அதிகரிக்கும் என்றும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார் . இதன் மூலம் அமெரிக்காவில் இருக்கும் ஆலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications