அமெரிக்காவின் ஆட்டோமொபைல் உற்பத்திக்குத் தலைநகரமாக விளங்கும் டெட்ராய்ட் நகரின் எகனாமிக் கிளப்பில் சமீபத்தில் முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்டு டிரம்ப் பேசிய போது, தான் மீண்டும் ஒரு முறை பதவிக்கு வந்தால், இந்தியா போன்ற நாடுகளில் வரியை (reciprocal tax) அமல்படுத்துவேன் என தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு இந்தியா அதிக சுங்க வரி விதிப்பதாக டொனால்டு டிரம்ப் விமர்சித்தார், இந்த வரிகள் உலகளவில் பெரிய பொருளாதாரங்களால் விதிக்கப்படும் மிக உயர்ந்த வரிகளில் ஒன்றாகும், குறிப்பாக அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இந்தியா போன்ற நாடுகள் அதிகப்படியான வரியை வசூலிப்பது மூலம் அமெரிக்க நிறுவனங்களுக்கு இது பெரும் சுமையாக இருக்கிறது என்பது டொனால்டு டிரம்ப் வாதம்.

உலகளவில் அமெரிக்காவை அசைக்க முடியாத செல்வ வளம்மிக்க நாடாக மேம்படுத்துவதற்கான தனது முக்கியமான கொள்கைகளில் ஒன்று தான் இந்த பரஸ்பர கொள்கை (reciprocity policy) என்று டிரம்ப் வலியுறுத்தினார்.
அமெரிக்கா பொதுவாகக் குறைந்த வரியை மட்டுமே நடைமுறையில் வைத்திருக்கும் போது, சீனா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் வர்த்தக நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வு உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
"சீனா அமெரிக்கா மீது 200% வரி விதிக்கிறது. பிரேசில் நாட்டு அரசும் அதிகப்படியான வரியை விதிக்கிறது. ஆனால் மிக முக்கியமான வரி பாதிப்புகள் இந்தியாவில் இருந்து வருகின்றன," என்று டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டார்.
இந்திய வரி விதப்பு மீது இவ்வளவு விமர்சனங்கள் இருந்தபோதிலும், டொனால்டு டிரம்ப் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தனது வலுவான நட்புறவைப் பல மேடைகளில் வெளிப்படையாக ஒப்புக் கொண்டு, பாராட்டிப் பேசியுள்ளார். டிரம்ப் பல முறை மோடியை ஒரு திறமையான தலைவர் என்று குறிப்பிட்டார் உள்ளார்.
மேலும் டொனால்டு டிரம்ப் கூறுகையில், இந்தியாவுடன் எங்களுக்கு சிறந்த உறவு உள்ளது. குறிப்பாக மோடியுடன் நான் நன்றாக பழகியுள்ளேன். இருப்பினும், அவர்கள் விதிக்கும் வரிகள் அதிகமானவை, உண்மையில் சீனாவை விட அதிகமாக இந்திய அரசு அமெரிக்க பொருட்களுக்கும், சேவைகளுக்கும் வரி விதிக்கலாம் என்றும் சந்தேகத்துடன் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
உதாரணமாக, டொனால்டு டிரம்ப் ஹார்லி டேவிட்சன் பற்றிய ஒரு கதையைப் இந்த கூட்டத்தில் பகிர்ந்து கொண்டார், இந்தியாவின் வரி விதிமுறைகளும், வரி விதிப்புகளும் ஹார்லி டேவிட்சன் இந்திய மண்ணில் பல சவால்களை எதிர்கொண்டது. அவர் ஜனாதிபதியாக இருந்தபோது ஹார்லி டேவிட்சன் பிரதிநிதிகளுடன் பேசும்போது இப்பிரச்சனை குறித்து விளக்கியதாகக் கூறினார் டொனால்டு டிரம்ப்.
இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீது 150 சதவீத வரி விதிக்கப்படுவதாகக் கூறியதாக இந்நிறுவன பிரதிநிதிகள் டிரம்ப்-யிடம் கூறிய நிலையில், அமெரிக்க அறசு வரியை உயர்த்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அரசு ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீது கூடுதல் வரியை விதித்து இந்தியாவை விட்டே கிளம்பியது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications