அமெரிக்காவும் ரஷ்யாவும் காலம் காலமாக எதிரி நாடுகளாகவே இருந்து வருகின்றன. ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்திருக்கிறது. இருந்தாலும் ரஷ்யா குறிப்பிட்ட சில நாடுகளோடு தொடர்ந்து வர்த்தகத்தை மேற்கொண்டு தன்னுடைய பொருளாதாரத்தை தக்கவைத்து வருகிறது.
ரஷ்யாவுக்கு நெருக்கடி: இந்த நிலையில் ரஷ்யாவிற்கு பெரும் நெருக்கடி கொடுக்க தயாராகி வரக்கூடிய அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யாவுடன் வர்த்தக உறவு கொண்டிருக்கக்கூடிய நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். குடியரசு கட்சி செனட் உறுப்பினரான லிண்ட்ஸே கிரஹாம் ஏபிசி களத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இதனை உறுதி செய்து இருக்கிறார். இப்படி ஒரு சட்டம் நடைமுறைக்கு வந்தால் முதலில் பாதிக்கப்படும் நாடாக இந்தியா தான் இருக்கும்.

500% இறக்குமதி வரி: ஏபிசி தளத்திற்கு கிரஹாம் அளித்துள்ள பேட்டியில் "ஒரு பெரிய மசோதாவை நாங்கள் கொண்டு வரப் போகிறோம். இந்த மசோதாவின் படி ரஷ்யாவிடமிருந்து பொருட்களை வாங்கும் நாடுகள் தங்களுடைய பொருட்களை அமெரிக்காவிற்கு அனுப்பினால் அதற்கு அமெரிக்கா அரசாங்கம் 500 சதவீத இறக்குமதி வரி விதிக்கும்" என குறிப்பிட்டு இருக்கிறார். இந்தியாவும் சீனாவும் தான் ரஷ்யாவிடம் இருந்து 70% கச்சா எண்ணெயை வாங்குகின்றன, ரஷ்யாவின் போர் இயந்திரம் தொடர்ந்து செயல்படுவதற்கு இந்த இரண்டு நாடுகளும் தான் காரணமாக இருக்கின்றன என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்தியாவுக்கு பேராபத்து: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக இருக்கிறார். இந்த நிலையில் ரஷ்யாவை அச்சுறுத்தி பணி வைத்துவிடலாம் என அவர் திட்டமிடுகிறார். ரஷ்யாவிற்கு வெளியில் இருந்து கிடைக்கும் வருமானத்தை நிறுத்தினால் அதுவே தானாக தன்னுடைய போர் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளும் என டிரம்ப் கருதுகிறார். இதன் காரணமாகத்தான் ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவுடன் வர்த்தக உறவு கொண்டிருக்கும் நாடுகளுக்கு 500 சதவீத இறக்குமதி வரி என்ற ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட தயாராகி வருகிறார்.
போருக்கு ஆதரவு: இது தொடர்பாக மசோதா தயாரிக்கப்பட்டு 84 செனட் உறுப்பினர்கள் கையெழுத்திட்டு இருக்கிறார்கள் என கூறும் கிரஹாம், இந்த மசோதாவை நிறைவேற்றும் தருணம் வந்துவிட்டது என டிரம்ப் தன்னிடம் கூறியதாக தெரிவித்திருக்கிறார். இந்த மசோதா நடைமுறைக்கு வந்தால் சீனா , இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சிக்கலாகும் என கூறியுள்ள அவர் ரஷ்ய அதிபர் புதின் போரை தொடர்வதற்கு கச்சா எண்ணேய் வாங்கி இந்தியா, சீனா மறைமுகமாக ஆதரவளிக்கின்றன என சாடியுள்ளார்.
இந்தியாவுக்கு 500% வரி: உக்ரைன் மீதான போரை ரஷ்யா முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வர்த்தகத்தை நிறுத்தி கொண்டன. எனவே ரஷ்யா தள்ளுபடி விலையில் தன்னுடைய கச்சா எண்ணெயை இந்தியா மற்றும் சீனாவுக்கு விற்பனை செய்து வருகிறது. அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 500% இறக்குமதி வரி விதித்தால் அது இந்தியாவுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.
More From GoodReturns

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

அமெரிக்காவில் ஈரானின் Sleeper cell-களா? பாரசீக மொழியில் பறந்த மெசேஜ்.. உளவுத்துறையினர் அதிர்ச்சி..!!

ஈரான் போரில் முக்கிய திருப்பம்: பாதுகாப்பு படை தலைவர் கொலை.. நூலிழையில் உயிர் தப்பிய கமேனி மகன்!!

எல்பிஜி தட்டுப்பாட்டை சரி செய்ய அமெரிக்காவை நாடும் இந்தியா..!! நிலைமை எப்போது சீராகும்?

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

ஈரான் போர்: சத்தமில்லாமல் லாபம் பார்க்கும் ரஷ்யா!! டிரம்ப் எடுத்த முடிவால் புதினுக்கு கொண்டாட்டம்!!



Click it and Unblock the Notifications