அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்க குடியுரிமைக் கொள்கையில் பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ளார். இது அமெரிக்காவில் பணிபுரியும் பெரும்பாலான இந்தியர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்கள் தான் அதிக எண்ணிக்கையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அமெரிக்க நிறுவனங்கள் ஹெச்1பி விசா மூலம் தான் திறன் மிகு வெளிநாட்டவர்களை வரவழைத்து பணிக்கு அமர்த்து கின்றன. இவ்வாறு பணிக்கு அமர்த்தும் போது அமெரிக்கா வாழ்க்கை கிடைக்கும் என்ற ஆசையில் பலரும் அமெரிக்காவுக்கு செல்கின்றனர். இப்படி ஹெச்1பி விசா மூலம் அமெரிக்கா செல்பவர்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் இந்தியர்கள் தான்.

தம்பதி சகிதமாக ஹெச்1பி விசா மூலம் அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் கிரீன் கார்டு விண்ணப்பம் செய்து நிரந்தர குடியுரிமை பெறலாம், தங்கள் குழந்தைகளுக்கு பிறப்பால் கிடைக்கும் அமெரிக்க குடியுரிமை கொண்டு செட்டிலாகிவிடலாம் என எண்ணி வந்தனர். ஆனால் அமெரிக்க அதிபராக பதவியேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் இது நாள் வரை பிறப்பால் கிடைத்த குடியுரிமை இனி வெளிநாட்டவர்களின் குழந்தைகளுக்கு கிடைக்காது என அறிவித்துள்ளார்.
தாய் தந்தையர் அமெரிக்கர்களாக இல்லை என்றாலும் அவர்களுக்கு குழந்தை அமெரிக்காவில் பிறந்த ஒரே காரணத்திற்காக அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அதிபர் டொனால்ட் டிரம்ப் பிப்ரவரி 19ஆம் தேதியிலிருந்து தாய் தந்தையரில் யாரேனும் ஒருவர் அமெரிக்க குடிமகனாக இருந்தால் மட்டுமே குழந்தைகளுக்கு பிறப்பால் கிடைக்கக்கூடிய குடியுரிமை கிடைக்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதனால் அமெரிக்கா சென்று தம்பதிகளாக செட்டிலாக விரும்பும் தம்பதிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். அமெரிக்காவில் ஒரு ஆண்டுக்கு சுமார் 1.5 லட்சம் குழந்தைகள் இதுபோன்ற தற்காலிக விசா மூலம் தங்கி இருக்கும் தம்பதிகளுக்கு பிறக்கிறார்கள் . டிரம்பின் இந்த உத்தரவு ஆண்டுதோறும் 1.5 லட்சம் குழந்தைகளை பாதிக்கிறது. அதாவது இந்த குழந்தைகளின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
குறிப்பாக தற்போது கருத்தரித்து குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்திய தம்பதிகள் தங்களின் எதிர்காலம் என்ன ஆகுமோ என கவலையில் ஆழ்ந்துள்ளனர். அமெரிக்க நீதிமன்றம் டிரம்பின் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தாலும், நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வாறு அமையும் என்பதை கணிக்க முடியாது என அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தம்பதிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவில் இருக்கக்கூடிய நிறுவனங்கள் வெளிநாடுகளை சேர்ந்த திறமையான நபர்களை அமெரிக்காவில் வந்து செட்டில் ஆகிவிடலாம் அமெரிக்காவில் உங்களுக்கு சிறந்த வாழ்க்கை கிடைக்கும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து தான் பணிக்கு அமர்த்துகின்றன.
ஆனால் அவ்வாறு வரக்கூடியவர்களுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் குடியுரிமை கிடைக்காது என்பது ஏற்கனவே அங்கே ஹெச்1பி விசாவில் தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களுக்கும், விசா வேண்டி விண்ணப்பம் செய்திருக்கும் நபர்களுக்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இப்படி ஹெச்1பி உள்ளிட்ட தற்காலிக விசாக்களில் அமெரிக்காவில் தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களுக்கு குழந்தை பிறந்தால் அமெரிக்க குடியுரிமை கிடைக்காது என்றால் அந்த குழந்தைகளை அரசு எவ்வாறு ஆவணப்படுத்தும் என பல கேள்விகள் எழுந்துள்ளன.
Story written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications