டிரம்ப் வந்து 1 வருஷம் ஆச்சி.. என்னென்ன செய்திருக்கிறார் தெரியுமா..?

நவம்பர் 9ம் தேதி அமெரிக்காவிற்கு முக்கியமான ஒரு நாள் ஆகும். 2016-ம் ஆண்டு இன்று தான் அமெரிக்க அதிபர் பதவிக்கு டொனால்டு டிரம்ப் வந்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் அவர்கள் வெள்ளை மாளிகைக்குச் சென்றது முதல் ஒரு வருடத்தில் என்ன செய்துள்ளார் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

வட கொரியாவுடன் வார்த்தை போர்

வட கொரியாவுடன் வார்த்தை போர்

வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு எதிராகப் போர் நடைபெற்றால் இரண்டு நாடுகளும் காணாமல் போகும் என்று வார்த்தைக்கு வார்த்தை மாறி நடந்த வார்த்தை போர், அதனால் பங்குச் சந்தை சரிவு.

எச்1பி விசா

எச்1பி விசா

அமெரிக்க ஊழியர்களுக்கு எதிராக வெளிநாட்டு ஊழியர்களை எச்1பி விசா திட்டத்தின் கீழ் பணிக்கு அமர்த்தத் தடை. அதுமட்டும் இல்லாமல் வெள்நட்டு ஊழியர்களின் ஊதிய வரம்பை உயர்த்தினார்.

கடந்த 5 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு எச்1பி விசா விண்ணப்ப கோரிக்கை 2018-ம் ஆண்டுக் குறைந்துள்ளது.

 

மோடியுடனான நட்பு

மோடியுடனான நட்பு

முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு டெல்லி, வாஷிங்டன் இனடியிலான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது. சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் திட்டங்களுக்குத் துப்பு சீட்டாக இந்தியா உள்ளது. பாகிஸ்தானைப் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராட அழுத்தம் அளித்தது.

சரிந்த சொத்து மதிப்பு

சரிந்த சொத்து மதிப்பு

2016-ம் ஆண்டு இருந்ததை விட டிரம்ப்பின் சொத்து மதிப்பு 600 மில்லியன் டாலர் என 3.1 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளது. எனவே அமெரிக்காவின் கோடிஸ்வரர்கள் பட்டியலிலும் பின்தங்கியுள்ளார்.

சர்ச்சைக்குரிய முடிவுகள்

சர்ச்சைக்குரிய முடிவுகள்

டிரம்பின் பிரச்சாரத்தினை ரஷ்யாவின் இணைத்துப் பேசிய எப்பிஐ தலைவரான ஜேம்ஸ் காமியை மே மாதம் நீக்கினார்.

ஜூன் 1ம் தேதி பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார். இதனால் அமெரிக்கப் பொருளாதாரத்தில் பெறும் எதிர்மறை தாக்கத்தினை ஏற்படுத்தியது.

90 நாட்கள் வரை இஸ்லாமிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்குத் தடை மற்றும் அகதிகளுக்கு 120 நாட்கள் தடையினை விதித்தார்.

 

படுகுழிகள்

படுகுழிகள்

70 ஆண்டுகளில் முன்பு எப்போது இல்லாத அளவிற்கு அமெரிக்க அதிபர்கள் பெறாதா குறைந்தபட்ச 37 சதவீத ஒப்புதல் மதிப்பீட்டை மட்டுமே பெற்றார்.

இவர் பதவி ஏற்கும் முன்பு 4.7 பில்லியன் டாலராக இருந்த அமெரிக்கச் சுற்றுலா துறையின் வருவாய் 4.3 மில்லியனாகக் குறைந்துள்ளது.

டிரம்ப் ஆட்சி காலத்தில் பயங்கரவாத மற்றும் வெகுஜனங்கள் மீதான துப்பாக்கி சுடுதல் அதிகமடைந்துள்ளது. அமெரிக்காவின் மிகப் பெரிய ஒரு கருப்புத் தினத்தில் லாஸ் வேகாஸ் துப்பாக்கி சூடும் ஒன்றாகும்.

 

பிரகாசமான பக்கம்

பிரகாசமான பக்கம்

அமெரிக்காவில் வேலை வாய்ப்பு இல்லா விகிதமானது 2001-க்குப் பிறகு 4.3 சதவீதமாகக் குறைந்தது.

அமெரிக்காவின் நீண்ட காலப் பொருளாதார வளர்ச்சிக்கு 3 சதவீத இலக்கை வைத்து இருந்தார். அதில் 2.6 சதவீதத்தினை அடைந்துள்ளார்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+