அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கனடா, சீனா, மெக்சிகோ நாடுகள் மீது அதிகப்படியான வரிகளை விதிக்க உள்ளதாகவும், அதை மார்ச் 4ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் அறிவித்திருந்து. இதை எதிர்த்து கனடா, சீனா நாடுகள் அமெரிக்க பொருட்கள் மீது மிகப்பெரிய வரி விதிப்பை அறிவித்து பதிலடி கொடுத்தது.
இதை சற்றும் எதிர்பார்க்காத டொனால்டு டிரம்ப் தனது முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார். மார்ச் 4ஆம் தேதி நடைமுறைப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்ட Reciprocal Tariff விதிப்பை ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க போவதாக அறிவித்துள்ளது.

இதனால் இன்று பங்குச்சந்தையில் பெரும் சரிவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் துவங்கியுள்ளது. அதேபோல் மார்ச் 4ஆம் தேதி வர்த்தகத்தில் தங்கம் விலை அமெரிக்க சந்தை துவக்கத்தில் தடாலடியாக உயர்ந்தாலும், வர்த்தக முடிவில் சரிய துவங்கியது.
ரெசிப்ரோகல் வரி விதிப்பின் தேதியை ஒத்திவைக்கும் அறிவிப்பை டிரம்ப், கேபிடல் ஹில்லில் காங்கிரசில் உரையாற்றும்போது வெளியிட்டார். அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரிகளை விதிக்கும் நாடுகளை குறிவைப்பதன் மூலம், சமமான வர்த்தக சூழலை உருவாக்க முடியும் என தெரிவித்தார் டொனால்டு டிரம்ப்.
அமெரிக்க தயாரிப்புகள் மற்றும் பொருட்கள் மீத எப்படி பிற நாடுகள் வரிகளை விதிக்கிறதோ அதற்கு ஈடான வரிகளை அமெரிக்கா விதிக்கும் என்பதில் டிரம்ப் உறுதியாக உள்ளதாக கூறினாலும், 2 முறை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோ, கனடா மற்றும் சீனா போன்ற நாடுகள் அமெரிக்கப் பொருட்களுக்கு கணிசமான வரிகளை விதித்து வருவதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசிய போது நேற்று டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டார். மேலும், இந்தியா சில அமெரிக்கப் பொருட்களுக்கு 100 சதவீதத்திற்கும் அதிகமான வரிகளை விதிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
டிரம்ப் தொடர்ந்து இந்தியா மீதும், இந்திய அரசு விதிக்கும் வரி தொடர்பாகவும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இதனால் அமெரிக்க அரசு இந்திய தயாரிப்புகள் மீது வரியை விதித்தால் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக உறவை கட்டாயம் பாதிக்கும்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் மருத்துவ சாதனங்கள், விவசாய பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் போன்ற பொருட்கள் மீது அமெரிக்கா இதுவரை நேரடி வரி விதிப்பை தவிர்த்து வந்தாலும், டிரம்ப் இந்த ரெசிப்ரோக்கல் வரிகளை விதித்தால், அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கும். இதோடு டெக்ஸ்டைல் மற்றும் ஐடி சேவைகள் உள்ளிட்ட இந்தியப் பொருளாதாரத்தின் முக்கியத் துறைகள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளக்கூடும்.
டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு, அதிபராக பதவியேற்றிய நாளில் மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதிக்க உத்தரவிட்டார், இதை தொடர்ந்து அடுத்த சில நாளில் சீனப் பொருட்கள் மீது 10 சதவீத வரி விதிக்கப்பட்டு பேச்சுவார்த்தை சுமுகமாக முடியாத நிலையில் அதை 20 சதவீதமாக இரட்டிப்பாக்கியது டிரம்ப் அரசு.
அமெரிக்காவின் வரி விதிப்பை எதிர்த்து கனடா அரசு சுமார் 155 பில்லியன் கனடா டாலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டு உள்ளதாக நேற்று அறிவித்திருந்தது.
இதேபோல் சீனா, அமெரிக்க பொருட்கள் மீது 10 முதல் 15 சதவீதம் வரை வரியை விதிக்க உள்ளதாக நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய வரி மார்ச் 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று சீன நிதியமைச்சகம் மார்ச் 4 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
More From GoodReturns

மருந்து நிறுவனங்களுக்கு செக்.. உலோக இறக்குமதிக்கும் லாக்.. மீண்டும் டிரம்ப் ஆடுபுலி ஆட்டம்?

இனி நீங்கள் இழக்கப்போகும் வரிச் சலுகைகள் என்னென்ன? புதிய விதிகளால் லாபமா? நஷ்டமா?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications