ஈரான் கூறுவது சுத்த பொய்.. ஈரான் “மிக மோசமான மத ரீதியான நாடு”.. இனி பேச்சுவார்த்தை கஷ்டம் டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நாளுக்கு நாள் பிரச்சனைகள் அதிகரித்து வரும் இந்த நிலையில், அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

அதோடு வளைகுடா பகுதிகளில் அதிகரித்து வரும் பதற்றங்களை சுட்டிக் காட்டி ஈரானை ஒரு பயங்கராவாத அரசு என்றும் குறிப்பிட்டுள்ளாராம்.

இது மட்டும் அல்லாமல் அமெரிக்காவுக்காக உளவு பார்த்ததாக 17 பேரை கைது செய்திருப்பதாக கூறிய தெஹ்ரானின், அறிவிப்பை சுத்த பொய் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்குமான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது?

இரு நாடுகளுக்குமான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது?

அமெரிக்கா என்று அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியானதோ அன்றிலிருந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பிரச்சனைகள், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பிரச்சனை உச்சத்தை எட்டி இருக்கிறது என்றும், இதுவரை இருநாடுகளும் வாதத்திலேயே ஈடுபட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் ஈரானில் அமெரிக்காவுக்காக உளவு பார்த்த 17 பேரை கைது செய்து இருப்பதாகவும், கைது செய்யப்பட்டவர்களில் சிலருக்கு மரண தண்டனை விதித்துள்ளதாகவும் ஈரான் அறிவித்துள்ளது. இது சுத்த பொய், இது இரு நாடுகளின் உறவில் மேலும் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

ஒப்பந்தம் ஏற்படுத்துவது முன்பை விட கடினம்?

ஒப்பந்தம் ஏற்படுத்துவது முன்பை விட கடினம்?

இந்த நிலையில், அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் ஓவல் அலுவலகத்திலிருந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த ஜனாதிபதி டிரம்பிடம், ஈரான் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த டிரம்ப் பேச்சுவார்த்தை மூலம் ஈரானுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது என்பது முன்பு இருந்ததை விட தற்போது மிக கடினமாகி விட்டது. இதை நான் வெளிப்படையாகவே கூறுகிறேன். ஈரான் தாங்கள் எங்கு இருக்கிறோம் என்பதை அறிந்திருக்கவில்லை. சி.ஐ.ஏ. உளவாளிகளை கைது செய்ததாக கூறுவது முற்றிலும் பொய்யானது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்கா எந்த மோசமான நிலைக்கும் தயாராக உள்ளது?

அமெரிக்கா எந்த மோசமான நிலைக்கும் தயாராக உள்ளது?

டிரம்ப், எப்போது ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்ததிலிருந்து வெளி வந்தாரோ அதிலிருந்தே இந்த இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை தான். அதிலும் தற்போது வெளிப்படையாகவே தாக்கியுள்ளார். ஈரான் பொருளாதார ரீதியாக மிகவும் பிரச்சனையில் இருப்பதாகவும், ஈரான் மிக மோசமாக தோல்வியுற்ற ஒரு மத ஆட்சி எனவும் கூறியுள்ளார். அதோடு அமெரிக்கா எந்தவொரு மோசமான நிலைக்கும் தயாரான நிலைக்கும் தயாராக உள்ளது என்றும், ஈரானை எச்சரிக்கும் விதமாகவே கூறியுள்ளாராம் டிரம்ப்.

சீனாவின் முன்னணி இறக்குமதியாளரை தடுப்பு பட்டியலில் வைக்கிறது?

சீனாவின் முன்னணி இறக்குமதியாளரை தடுப்பு பட்டியலில் வைக்கிறது?

அமெரிக்காவின் தடை உத்தரவை மீறி ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்த, சீனாவின் முன்னணி இறக்குமதியாளரை தடை செய்துள்ளது. ஆமாங்க.. சீனாவின் ஜூகாய் ஜென்ராங் (Zhuhai Zhenrong ) நிறுவனத்தின் மீதும், அதை தலைமை அதிகாரி யூமின் லி மீதும் அமெரிக்கா பொருளாதார தடையை விதிக்கிறது என்றும் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். மேலும் சீனா நிறுவனங்கள் ஈரானின் எண்ணெய் இறக்குமதியை ஏற்றுக் கொண்டதால் அமெரிக்கா சட்டத்தை மீறியுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது

கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது

இது ஒரு புறம் இருக்க சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும், தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த பதற்றத்தால் விலை அதிகரித்து வருகிறது. இதனால் எரிபொருட்களின் விலையும் உயரும் அபாயாம் உள்ளது. அதிலும் இந்தியா போன்ற நாடுகள் அதிகளவு இறக்குமதி செய்து வரும் நிலையில், மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+