வாஷிங்டன்: அமெரிக்கா சீனாவுக்கு இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், அதனை இன்னும் ஊக்குவிக்கும் வகையில் அடுத்தடுத்த அறிவிப்புகளை அறிவித்து வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
பெய்ஜிங் உடனான பதற்றங்களை அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவின் பிரபலமான வீடியோ வலைதளமான டிக் டாக்கிற்கு தடை விதிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக டிக் டாக்கினை இந்தியா தடை செய்த நிலையில், அதன் பிறகு அமெரிக்காவும் தடை செய்ய உள்ளதாக கூறியுள்ளது. இது அந்த நிறுவனத்திற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க நிர்வாகம் விசாரணை
டிக் டாக்கின் தாய் நிறுவனமான ByteDance, லட்சக்கணக்கான அமெரிக்க பயனர்களின் தரவுகளை தன் ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறதா என்று அமெரிக்க நிர்வாகம் விசாரித்து வருகிறது. இந்த நிலையில் தான் டொனால்டு டிரம்ப்பின் அச்சுறுத்தல் வந்துள்ளது. அமெரிக்க கடற்படை கடந்த ஆண்டு சேவை உறுப்பினர்களை அரசாங்க சாதனங்களிலிருந்து இந்த செயலியை நீக்குமாறு வலியுறுத்தியது.
அமெரிக்கா சீனா உறவு மோசமடையும்
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையேயான உறவுகளின் நிலை மோசமடைந்து வரும் இந்த தருணத்தில் இந்த அச்சுறுத்தல் வந்துள்ளது. இது இன்னும் அமெரிக்கா சீனா இடையே இன்னும் மோசமான உறவுகளுக்கே வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகபோர் நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில், கொரோனாவை பரப்பியதும் சீனா தான் என்று கூறி வருகின்றது.
டிக்டாக் மறுப்பு
அதோடு ஏற்கனவே அமெரிக்காவின் தொழில் நுட்பங்களை சீனாவுக்கு அனுப்புவதாக, ஹூவாய் நிறுவனத்திற்கும் பலத்த கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த நிலையில் தான் தற்போது டிக் டாக்கிற்கும் அதே பிரச்சனை எழுந்துள்ளது. இது குறித்து ஏற்கனவே டிக்டாக் ஒரு அறிக்கையில், பயனரிடமிருந்து சேகரிக்கப்பட்ட எந்த தரவையும் சீனாவுக்கு அனுப்பவில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா சந்தேகம்
இந்த சமூக ஊடக செயலி ஒரு சீன நிறுவனத்திற்கு சொந்தமானது தான் என்றாலும், இதனை இயக்குவது ஒரு அமெரிக்க தலைமை நிர்வாக அதிகாரி என்றும் இதனை அறிந்த தரப்பு கூறியுள்ளது. சீனா இதுபோன்ற ஸ்மார்ட்போன் செயலிகளை பயன்படுத்தி அமெரிக்கர்களின் செல்போன்கள் வழியாக தரவுகளை எடுக்கிறதா என்பதும் அமெரிக்காவின் மிகப் பெரிய சந்தேகமாகவே உள்ளது. ஆக டிரம்பின் எச்சரிக்கைக்கு இதுவும் ஒரு காரணமாக கூட இருக்கலாம்.
அதிகாரிகள் கவலை
சீனாவின் மிக பெரிய தொழில் நுட்ப நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனம் டிக் டாக் செயலியை நடத்தி வருகிறது. இந்தநிலையில், அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திரட்ட டிக் டாக் செயலி பயன்படுத்தப்படலாம் என அமெரிக்காவின் இணையப் பாதுகாப்பு அதிகாரிகள் கவலை தெரிவித்திருந்தனர்.
இது பெருத்த அடி
அமெரிக்காவில் 80 மில்லியன் பயன் பாட்டாளர்களைக் கொண்டுள்ள டிக்டாக், அங்கு வேகமாக வளர்ந்து வரும் பொழுதுபோக்கு செயலிகளில் ஒன்று. இது தற்போது அமெரிக்காவிலும் தடை செய்யப்பட்டால், அது நிச்சயம் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பாகவே இருக்கும். ஏனெனில் ஏற்கனவே அதிக பயனர்களைக் கொண்ட இந்தியாவினாலேயே பெருத்த அடி வாங்கியுள்ளது.
மைக்ரோசாப்ட் வாங்கபோகிறதா?
எனினும் டிக் டாக் மீதான தடை எவ்வாறு செயல்படுத்தப்படும், அது என்ன சட்ட சவால்களை எதிர்கொள்ளும் என்பது உடனடியாகத் தெரியவில்லை. இது இப்படி எனில், மறுபுறம் அமெரிக்காவின் ஜாம்பவான் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக் டாக் செயலியை வாங்குவதற்கு பைட்டான்ஸ் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா அனுமதிக்குமா?
ஏற்கனவே சீன நிறுவனங்களை தடை செய்து வரும் அமெரிக்கா அரசு, இதனை ஏற்றுக் கொள்ளுமா? டிரம்ப் அரசு இதற்கு அனுமதிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதையும் மீறி ஒரு வேளை மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக் டாக்கை வாங்கினால், பைட்டான்ஸ் நிறுவனம் அமெரிக்காவிலிருந்து வெளியேறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதனை மைக்ரோசாப்ட் நிறுவனமோ இதனை மறுத்துள்ளது.
அதிக பதிவிறக்கம்
அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளில் பிரபலமடைந்து வரும் டிக் டாக்கினை, இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 315 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. வரலாற்றில் இதற்கு முன்பு வேறு எந்த ஆப்களும் ஒரு காலாண்டில் இவ்வளவு முறை பதிவிறக்கம் செய்யப்படவில்லை என பகுப்பாய்வு நிறுவனமான சென்சார் டவர் தெரிவித்துள்ளது.
பெரும் ஆபத்தில் உள்ளனர்
அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ ஏற்கனவே, 'டிக் டாக் பயன்பாட்டாளர்கள் பெரும் ஆபத்தில் உள்ளனர். சீனா கம்யூனிஸ்ட் கட்சியிடம் உங்களின் தனிப்பட்ட தரவுகளைக் கொண்டு சேர்க்கிறார்கள் என டிக் டாக் செயலி மூலம் சேகரிக்கப்படும் என தரவுகள் சீனாவிற்கு வெளியில் தான் சேகரிக்கப்படுகிறது என குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications